ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால் இணையில்லாத இன்பநிலையை அடையலாம். * உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதனைச் சரிப்படுத்தி மீண்டும் ஆரோக்கியநிலைக்கு வருவதற்கான ஆற்றல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இயற்கையாகவே உள்ளது. ஆனால், நாம் தான் அந்த இயல்பை உணர்ந்து செயல்படுவதில்லை. * மனதை அடக்க நினைத்தால் அலையும். அதே சமயத்தில் அதை அறிய முனைந்தால் அது நமக்கு அடங்கிவிடும். மனம் தான் ... Read More »
Category Archives: பொது
தமிழ் வார்த்தைகள்
March 6, 2016
தமிழில் டீக்கு “தேநீர்’, காபிக்கு “குளம்பி’ என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி – கோந்தடை புரோட்டா – புரியடை நூடுல்ஸ் – குழைமா கிச்சடி – காய்சோறு, காய்மா கேக் – கட்டிகை, கடினி சமோசா – கறிப்பொதி, முறுகி பாயசம் – பாற்கன்னல் சாம்பார் – பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி – தோய்ச்சி, மாவேச்சி பொறை – வறக்கை கேசரி – செழும்பம், பழும்பம் ... Read More »
மனதைத் திற – சின்ன சின்ன சந்தோசங்கள்!
March 4, 2016
ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கிறோம்! அந்த லட்சியம் என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்! நிறைய கார்களுடன் பெரிய வீடு வாங்குவது, பெரிய பணக்காரராய் ஆவது என எப்படிப்பட்ட குறிக்கோளாகவும்கூட அது இருக்கலாம்! ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்! வாழ்வில் இதுவரை எதை எதை தொலைத்திருக்கிறீர்கள்? முதலில் தொலைந்துபோனது மகிழ்ச்சி! மனிதம் என்ற வார்த்தையே நம்மிடம் இருக்கும் அந்த சிரிப்பு தன்மையாலேயே நிறைவடையும். சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தொலைதூரங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்! எங்கோ நடந்த பிரச்சினைகளுக்கு ... Read More »
கடவுளை அறியாதவன் எதற்கு சமம்?
March 1, 2016
கங்கைக்கரையோரம் ராமகிருஷ்ணர் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரது சீடர் விவேகானந்தர், குருநாதரின் வாய் அசைவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்களின் கவனம் திருப்பும் விதத்தில், நாய்கள் வேகமாகக் குரைத்தன. குப்பைத் தொட்டியில் கிடந்த எலும்பைக் கவ்விக்கொண்டு ஒரு முரட்டு நாய் வெளியில் குதித்து ஓடியது. அந்த நாயைச் சுற்றிக்கொண்ட மற்ற நாய்கள் வேகமாகக் குரைத்தன. முன்பற்கள் தெரிய ஆக்ரோஷமாக நாய்கள் குரைப்பதை முரட்டு நாய் சட்டை செய்யவே இல்லை. வாயிலிருக்கும் எலும்பைச் சுவைக்க ... Read More »
கண்களைக் காக்க…
February 28, 2016
ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும். ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும். உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை ... Read More »
மூளைக்கு ‘ஓவர் லோடு’: சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்
February 27, 2016
இன்றைய நிலையில் மூளைக்கு அதிகமான தகவல்களை “ஓவர் லோடு’ செய்வதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. எங்கும், எதிலும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள் கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு லட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர். கடந்த 1980ம் ஆண்டில் ... Read More »
100 மருத்துவக் குறிப்புகள்!!!
February 27, 2016
100 மருத்துவக் குறிப்புகள்….. 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்…போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் ... Read More »
பனி கால பிரச்னைக்கு தீர்வு!!!
February 27, 2016
பனி கால பிரச்னைக்கு தீர்வு. . காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்குகிறார் இ.என்.டி. டாக்டர் சாந்தி செல்வரங்கம். குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி ... Read More »
குழந்தைக்குக் காய்ச்சலா? பதட்டம் வேண்டாம்.
February 26, 2016
குழந்தைக்குத் திடீரெனக் காய்ச்சலடித்தால் நாம் என்ன செய்வோம்? அடுத்த நிமிடமே மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு ஓடுவோம். அங்கே மொய் எழுதிய பிறகு தான் நம் படபடப்பு அடங்கும். அதுவரை நமக்கு இருப்புக் கொள்ளாது. கொஞ்சம் நிதானமாக யோசித்தால் குழந்தைக்குக் காய்ச்சல் என்றதுமே மருத்துவரிடம் காட்ட ஓட வேண்டுமென அவசியமில்லை. காய்ச்சல் குறைய நீங்கள் கீழ்க்கண்ட சில விஷயங்களை பின்பற்றலாம். அது குழந்தைக்கு இதமளிக்கும். காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். குழந்தைக்கு அணிவித்துள்ள ஆடைகள், உள்ளாடைகள், நாப்கின் அனைத்தையும் நீக்கவும். குழந்தை படுக்கையிலேயே ... Read More »
தயிரும் மருத்துவ பயன்களும்!!!
February 26, 2016
தயிரும் மருத்துவ பயன்களும்:- தயிருக்கு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது. மிதமான லாக்டோஸ்- சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். ஏனென்றால், பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டு வளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவது தான் இதற்கு ... Read More »