இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழ்க்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது.வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் ... Read More »
Category Archives: பொது
சங்க நாதம்!!!
April 15, 2016
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! ... Read More »
பங்குனி உத்திரம் வரலாறு….!
April 13, 2016
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி ... Read More »
நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!
April 12, 2016
தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா? முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ஆப்ரகாம் லிங்கன் ... Read More »
ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு
April 6, 2016
சர்வதேச அளவில், நிர்வாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா? உற்பத்தித் துறை என்றுதான் பலருக்கும் சொல்லத் தோன்றும். உண்மையில்,சேவையின் தரத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான் மிகவும் கடினம். ஏனென்றால்உற்பத்தியான பொருள், வாடிக்கையாளரைச் சென்று சேர்வதற்கு முன்பாக“பரிசோதனை இடைவெளி” உள்ளது. இதன் காரணமாக, உற்பத்தியில் குறையிருந்தால்,அந்த பொருளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்து வெளியே அனுப்பவாய்ப்புண்டு. ஆனால், சேவைத் துறை அப்படியல்ல. சேவை, வாடிக்கையாளர் முன்புதான்வெளிப்படுகிறது. வெளிப்படும் கணமே வாடிக்கையாளரைச் சென்றடைகிறது. எனவே,சேவையின் தரத்தைக் கட்டிக் ... Read More »
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
April 1, 2016
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். ... Read More »
பஞ்ச ரோடு
March 31, 2016
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா … ??? … பஞ்ச ரோடு ….. என்று சொல்லுவார்கள் …!!! பஞ்ச ரோடு –என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .? 1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின்பொது அப்போதைய வெள்ளைக்காரன் தோராய கணக்குப்படி சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் … அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை ... Read More »
மகான் ஸ்ரீராகவேந்திரரின் மகிமை!
March 31, 2016
ஒரு முறை, தஞ்சாவூரில் கடுமையான வறட்சி ஏற்பட, மகான் ஸ்ரீராகவேந்திரரின் அருளை வேண்டி நின்றார் தஞ்சை மன்னர். தனக்கு சந்நியாசம் தந்த நகரமான தஞ்சையில் எழுந்தருளினார் ஸ்ரீராகவேந்திரர். மகானின் திருப்பாதங்கள் பட்டதுமே மண்ணும் வளமாகும்; அவர் விரும்பினால் இயற்கையும் வளைந்து கொடுக்கும் என்பதற்குச் சான்றாக… மழை பொத்துக்கொண்டு ஊற்றியது, வறண்டிருந்த மண் வளமானது. பஞ்சம் நீங்கிட ஸ்ரீராகவேந்திரர் செய்த யாகத்தால், காய்ந்து கிடந்த உணவுக் கிடங்கும் நிரம்பத் தொடங்கியது. மழை தருவித்து, மக்களைக் காத்த மகானுக்கு சிறப்பான ... Read More »
ஆசார்யா சாணக்கியா : – சில செய்திகள். . .
March 31, 2016
வால்மீகி , வேதவியாசர் ஞானிகளுக்கு பிறகு சாணக்கியரையும் ஞானி என்று வரலாறு குறிப்பிடுகிறது . சாணக்கியர்,சிவப்பு கண்களும், கறுப்பு நிறமும் , விகாரமான தோற்றத்தைக் கொண்டவர் என்று சொல்லலாம் . சாணக்கியரின் உண்மையான பெயர் விஷ்ணுகுப்தாஎன்றும், அவர் சனகா என்ற பிராமணனுக்கு பிறந்ததால் சாணக்கியர் என்று அழைக்கப்பட்டார் . ஆசார்யாசாணக்கியர் ஏசுநாதர் பிறப்பதற்குமுன்னால் பிறந்தாரென்று வரலாறு சொல்லுகிறது . சாணக்கியர் வேதங்கள்,கணிதம் , ஆயுர்வேதம் , யுத்தகலைஎல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார் . சாணக்கியரை தலைசிறந்த அறிவாளி என்றும் ... Read More »
நல்ல மனம் வாழ்க!
March 31, 2016
* பிறருடைய பசியைப் போக்குவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களின் துன்பத்தையும் களைய முயற்சிக்க வேண்டும். * அரிதான மானிட தேகம் எல்லா உயிர்களுக்கும் கிடைப்பதில்லை. இதைப் பாதுகாத்து திடமாக வைத்துக் கொள்வது நம் கடமை * கற்பனை அனைத்தையும் கடந்தவன் இறைவன். அவனை நம் கற்பனை எல்லைக்குள் கொண்டு வர இயலாது. * அம்பை ஏவி விட்டவனுக்குப் பதிலாக, அம்பையோ, அம்பு செய்து கொடுத்தவனையோ நொந்து கொள்வதால் ஒருபயனும் இல்லை. * உத்தமர் தம் ... Read More »