நெப்போலியன் இறந்தது எப்படி என்கிற கேள்விக்கு வரும் பதில்கள் இவை… நெப்போலியன் போனபார்ட் எப்படி இறந்தார்?’ – ஐரோப்பா பல்லாண்டுகளாக விடை தேடிக் கொண்டு இருக்கும் கேள்வி. ஏனெனில், மைனஸ் 26 டிகிரி குளிரில் குதிரைகளின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழ்ந்தவர். தீவுச் சிறையில் இருந்து கடலை நீந்திக் கடந்த மாவீரன் நெப்போலியன்.அவர் தானாக நோய் வாய்ப்பட்டு இறந்தார் என்றால், எப்படி நம்புவது? ‘தனிமைச் சிறையில் நெப்போலியனுக்கு என்ன நடந் தது?’ என்பதை அறிய யாருக்கும் எந்த ... Read More »
Category Archives: பொது
சமாதி நிலை!!!
May 4, 2016
சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும். இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் “நான்” “எனது” “என்னுடையது” என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி ... Read More »
தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள்!!!
May 3, 2016
தெரிந்த கோவில்கள் – தெரியாத செய்திகள் – தனிச்சிறப்புகள் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில:1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் – நடராஜ கோயில் 2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் ... Read More »
தவமும் அறமும் : மகரிஷி!!!
May 3, 2016
தவமும் அறமும் : தவத்தையும் அறத்தையும் நீங்கள் மிகச் சுலபமாகப் பற்றிச் செல்லும் முறையினை இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன். தவம் எதற்காக என்றால் இறையுணர்வு பெற்று இறைவனோடு உறைவதற்காக. அறம் எதற்காக என்றால் இது வரையில் செய்த கர்மங்களின் அழுத்தத்தினால் எண்ணமும் செயலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே, அதிலிருந்து செய்து செய்து நல்லனவே செய்யக்கூடிய அளவுக்கு, தீயன செய்யாது இருக்கக்கூடிய ஒரு தூய்மைக்கு வரவேண்டும். மனத்தூய்மை தவத்தினால் வரும்; வினைத்தூய்மை செயலினால் வரும்; நல்ல செயல் அறத்தினால் ... Read More »
இந்திய வரலாறு – ஒரு குறிப்பு!!!
May 2, 2016
இந்திய வரலாறு – ஒரு குறிப்பு ———————————————- கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம் கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் கிமு 900 – மகாபாரதப் போர் கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல் கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு கிமு 554 – புத்தரின் நிர்வாணம் கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா கிமு ... Read More »
வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!!!
April 30, 2016
வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்! 1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது. 2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன். 3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன். 4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன். 5. குருபரன் : கு – அஞ்ஞான இருள், ரு – நீக்குபவர், ... Read More »
கிருஷ்ணன் வாழ்ந்த துவாரகாபுரி!!!
April 30, 2016
மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka. புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இது ... Read More »
அழகென்ற சொல்!!!
April 29, 2016
முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற ... Read More »
உலகின் முதல் ராக்கெட் – 1
April 27, 2016
திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் உருவான வரலாறு நம்மால்இன்றுநினைத்த நேரத்தில்உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்தசெயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space)நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்ததுஎன்றால் மிகையில்லை. ... Read More »
நாம் மறந்த இந்திய விடுதலைக்கா பாடுபட்ட போராளிகள் பற்றிய தகவல்!!!
April 26, 2016
“வங்கம் தந்த சிங்கம்” சிராஜ்-உத்-தௌலாவின்வங்கம் தந்த சிங்கம் இன்று முதல் சுதந்திர போராட்டம் 1857 என் கூறுகின்றனர் ஆனால் உண்மையில் 1757 லில் வங்கத்தில் ஆங்கிலேயர் களுக்கு எதிராக நடைபெற்ற போரே முதல் சுதந்திர போர் ஆகும் ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் தான், தென் இந்தியாவில் ஆங்கிலயர்கள் உள்ள ... Read More »