ராம் மனோகர் லோகியா (பிறப்பு: 1910, மார்ச் 23 – மறைவு: 1967, அக். 12) எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் ராம் மனோகர் லோகியா குறித்து எழுதிய பதிவு இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. காந்திக்கும் லோகியாவுக்கும் இருந்த குரு-சீட உறவு அற்புதமானது. லோகியாஅவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் ... Read More »
Category Archives: பொது
அதிரடியான அதிசய விஞ்ஞானி
March 28, 2017
ஜி.டி.நாயுடு (பிறப்பு: 1893, மார்ச் 23 – மறைவு: 1974, ஜன. 4) தமிழகத்தின் தொழில்நகரான கோவை தந்த அதிசய விஞ்ஞானி ஜி.துரைசாமி நாயுடு. கோவை மாவட்டம், கலங்கல் என்னும் கிராமத்தில் 1893, மார்ச் 23-இல் பிறந்தவர் ஜி.டி.நாயுடு. இவரது தந்தை கோபால் நாயுடு. சிறு வயதில் படிப்பில் நாட்டம் கொள்ளாத துரைசாமி, எதிலும் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டிருந்தார். அதன் விளைவாக பல அதிசயங்களை நிகழ்த்தினார். கோவையில் முதல் தனியார் பேருந்து இயக்கம், புதிய தொழிற்சாலைகள் நிறுவுதல், புதிய கண்டுபிடிப்புகள், என பலவற்றில் முத்திரை ... Read More »
லட்சியத்தில் இணைந்த நட்சத்திரப் பொறிகள்
March 27, 2017
பகத் சிங் (பிறப்பு: 1907, செப். 27 – பலிதானம்: 1931 மார்ச் 23) ராஜகுரு (பிறப்பு: 1908, ஆக. 24- பலிதானம்: 1931 மார்ச் 23) சுகதேவ் (பிறப்பு: 1907, மே 15- பலிதானம்: 1931 மார்ச் 23) பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் ... Read More »
டாக்டர் ஹெட்கேவார்
March 26, 2017
டாக்டர் ஹெட்கேவார் (1889 யுகாதி – மறைவு: 1940, ஜூன் 21) “கோயிலைப் போலே உடல்கள் புனிதம் மாந்தர் அனைவரும் உபகாரி ! சிங்கத்துடனே விளையாடிடுவோம் ஆவினம் எங்கள் அன்புத்தாய்….” – என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த பாடல் வந்த திசை நோக்கி தானாக நடந்தது எனது கால்கள் பதினைந்து முதல் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சுமார் 20 இளைஞர்கள் வட்டமாக அமர்ந்திருந்தனர்; ... Read More »
அடியார்க்கு ஆடை தந்து சிவம் உணர்ந்தவர்
March 25, 2017
நேச நாயனார் (திருநட்சத்திரம்: பங்குனி-ரோகிணி) (மார்ச் 25) “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”-திருத்தொண்டத்தொகை. நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலான நெசவை அவர் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். ... Read More »
பொறுமையும் பொறுப்பும்
March 24, 2017
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்…? அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம்… தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார், அவரது ஆய்வகத்தின் ... Read More »
வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)!!!
March 20, 2017
1) மிகமிக நல்ல தொரு நாள் எது ? பதில் – இன்று 2) மிகப் பெரிய வெகுமதி எது? பதில் – மன்னிப்பு 3) நம்மிடம் இருக்க வேண்டி யது எது? பதில் – பணிவு 4) நம்மிடம் இருக்கக் கூடாதது எது ? அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு 5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது? பதில் – சமயோஜித புத்தி 6) நமக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது? பதில் ... Read More »
மூன்று முடிச்சு தத்துவம்……
March 19, 2017
தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது. முதல் முடிச்சு – பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும். 2-ஆம் முடிச்சு – கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும். 3-ஆம் முடிச்சு – நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும். ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த ... Read More »
பழைய நாடுகளும் புதிய பெயர்களும்…!!!
March 18, 2017
மனிதர்கள் மட்டும்தானா மாறி வருகிறார்கள்? பல நாடுகளின் பெயர்கள்,எல்லைகளும் மாறிக்கொண்டே, இருக்கின்றன.அவற்றின் பழைய பெயர்களை பார்க்கலாமா? டச்சு கயானா — சுரினாம், அபிசீனியா —எத்தியோப்பியா, கோல்டு கோஸ்ட் — கானா, பசுட்டோலாந்து — லெசதொ- தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா, வட ரொடீஷியா — ஜாம்பியா, தென்ரொடீஷியா — ஜிம்பாப்வே, டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா, கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட். சாயிர் — காங்கோ, சோவியத்யூனியன் — ரஷ்யா, பர்மா — மியான்மர், கிழக்குபாகிஸ்தான் — ... Read More »
ஒளவையின் பாடலில் திருக்குறள்!!!
March 9, 2017
ஒளவையின் பாடலில் திருக்குறள் விளக்கம் திருக்குறள் தமிழர் பண்பாட்டின் பிழிவாகும். குறள் மேன்மேலும் பொருள் சிறக்குமாறு, “தேடல்’ உத்திக்கு வழிவகுத்துள்ளது. இதனால் பலர், ஒரு குறளுக்கு வெவ்வேறு பொருள் காண முயல்கின்றனர். குறளுக்குப் பொருள் தேடும்பொழுது, அது தோன்றிய சமுதாய நிலையும், சங்க இலக்கியப் பின்புலமும் தெரிந்திருத்தல் தெளிவு தரும். “”தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” (236) இதற்கு, “பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்; புகழ் இலாதார் பிறத்தலைவிடப் பிறவாமையே நன்று’ என ... Read More »