Home » பொது (page 7)

Category Archives: பொது

பாரதத் தாயின் தவப்புதல்வர்

பாரதத் தாயின் தவப்புதல்வர்

குருஜி கோல்வல்கர் (பிறப்பு:  1906, பிப். 19- மறைவு: 1973, ஜூன் 5) “தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநபர் மோட்சம் வேண்டுமென்று தொண்டின் மூலம் இன்பம் கண்டாய்!” – என்ற ஆழமான , பொருள் பொதிந்த பாடல் ஒன்றே கணீர் என்ற குரலுடன் காற்றினில் மிதந்து வந்து என் செவிகளில் நிறைந்தது. துறவறம் வேண்டிப் புறப்பட்டு, பின் மோட்சத்தை புறந்தள்ளி, தொண்டின் மூலம் இன்பம் கண்ட அந்த அசாதாரணமான  மகான் யார்? ... Read More »

தமிழ்ப் புதினத்தின் தாய்

தமிழ்ப் புதினத்தின் தாய்

வை.மு.கோதைநாயகி (பிறப்பு: 1901 , டிச. 1- மறைவு: 1960 , பிப். 20) ‘ஆணாதிக்கம்’ என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்பும் ஆணாதிக்கம் இல்லாமலில்லை. பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவது அதிகம் என்றாலும் ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தி இருப்பாள் என்று பெருமையாகக் கூறுவது ஆண்களிடம்தான் அதிகம். பெண்ணின மேம்பாட்டுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட வீர மகளிரைப் பற்றி இன்றைய சமூகம் அறிந்துகொள்வது அவசியம். புதுமைப் பெண்ணாய் உருவெடுத்த ... Read More »

மறக்கக்கூடாத மாமனிதர்

மறக்கக்கூடாத மாமனிதர்

வீர சாவர்க்கர் (பிறப்பு: 1883, மே 28-  மறைவு:1966, பிப். 26) இந்திய விடுதலைப்போரில் மகத்தான தியாகம் செய்தவர்களுள் தலையாயவர் ‘வீர சாவர்க்கர்’ எனப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர். புரட்சியாளர், சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்,… எனப்  பன்முக ஆளுமை உடையவர் சாவர்க்கர். அபிநவ பாரத சங்கம் முதல் ஹிந்து மகா சபா வரை, அவரது அரசியல் பயணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது. ஆங்கிலேயரின் சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக ... Read More »

ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

மதுரை வைத்தியநாத ஐயர் (பிறப்பு: 1890, மே 16 – மறைவு: 1955, பிப். 23) தமிழகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களுள் தலையாயவர் மதுரை. ஏ. வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததன் மூலமாக, இந்துமதத்தில் நிலவிய ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான தடையைத் தகர்த்தவர் இவரே. தஞ்சாவூரில் 1890, மே 16 -இல் அருணாசலம் ஐயர்- லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் ... Read More »

நேர்மையின் மறு உருவம்

நேர்மையின் மறு உருவம்

மொரார்ஜி தேசாய் (பிறப்பு: 1896, பிப். 29 – மறைவு: 1995, ஏப்ரல் 10) இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் மொரார்ஜி தேசாய். இவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்; நேரு, இந்திரா அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றியவர். நேர்மையின் வடிவமாக நெறி தவறாத பொதுவாழ்வை ஒரு தவம் போல் நடத்தியவர் மொரார்ஜி தேசாய். நாட்டின் உயர அதிகாரபீடத்தை அலங்கரித்த போதும் எளிய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை. அவரது வாழ்வில் நடந்த தவிர்த்திருக்கக் கூடிய ... Read More »

ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்

ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்

சத்ரபதி சிவாஜி (பிறப்பு: 1630,  பிப்  19  – மறைவு: 1680, ஏப். 3) தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின்  வாழ்க்கையாகும். பல நூற்றாண்டுகள் நாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைபட்டியிருந்த போது அதை உடைத்தெறியும் உத்வேகம் ஏற்பட செய்தவர் சிவாஜி. இவர் பொது யுகத்திற்குப் பிந்தைய 1630,  பிப்  19 -ஆம் தேதி பிறந்தார். சிவாஜியின் தந்தை சாஜி போன்ஸ்லே பெரும் வீரராக விளங்கினார். இஸ்லாமிய அரசர்களுகளிடம் பணிபுரிந்தார். சிவாஜியின் தாயார், தனக்குப் பிறக்கும் குழந்தை சிறந்த ... Read More »

நம்முடன் வாழும் காந்தி

நம்முடன் வாழும் காந்தி

அண்ணா  ஹசாரே (பிறப்பு: ஜன. 15 ) ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் மசோதா கொண்டுவரப் பாடுபட்டவர்;  தகவல் அறியும் உரிமைச் சட்டம் வர காரணமாய் இருந்தவர்;   ராலேகான் சிந்தி என்ற வறண்ட கிராமத்தைச் செழிக்கச் செய்தவர், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராகப் போராடி வருபவர்… இப்படி பல சாதனைகளை செய்தும்,  செய்துகொண்டும் இருப்பவர்,  76 வயதான அண்ணா ஹசாரே. இவர் பிறந்தது ஒரு சிறு கிராமம், ராலேகான் சிந்தி; இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளது. ஒரு சாதாரண விவசாய ... Read More »

வல்லரசை மிரட்டும் புத்தத் துறவி

வல்லரசை மிரட்டும் புத்தத் துறவி

14 -வது தலாய் லாமா (டென்சிங் கியாட்சோ) (பிறப்பு: ஜூலை 6) சீன ஆக்கிரப்பிலிருந்து தனது தாயகத்தை மீட்க அஹிம்சை முறையில் தொடர்ந்து போராடி வருபவர் தலாய் லாமா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் டென்சிங் கியாட்சோ. இவர் திபெத்தியர்களால் புத்தரின் அவதாரமாகவே வணங்கப்படுகிறார். இவர் 60 லட்சம் திபெத் மக்களின் அரசியல் தலைவராகவும், திபெத் புத்த மத தலைவராகவும் விளங்கி வருகிறார். சீன ராணுவம் ஆக்கிரமித்த (1958) திபெத்தை மீட்க, இந்தியாவின் தர்மசாலாவில் இருந்தபடி போராடிவரும் ... Read More »

சுதந்திரமே பெயரானவர்

சுதந்திரமே பெயரானவர்

சந்திரசேகர ஆசாத் (பிறப்பு: 1906, ஜூலை 23- பலிதானம்: 1931, பிப். 27) சர்ரென்று ஒரு கல் பறந்து ஒரு மண்டையைத் தாக்கியது. ரத்தம் கொட்டியது. தாக்கப்பட்டது ஒரு சப்-இன்ஸ்பெக்டர். தாக்கியது ஒரு சிறுவன். காசியில் சுதந்திரக் கனலை ஏற்படுத்தும் விதமாக ஒரு ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அதில் பல தலைவர்கள் கலந்துகொண்ட பெரும் கூட்டம் ஊர்வலமாகச் சென்றது. அதைத் தடுக்க முயன்ற ஆங்கில சப்-இன்ஸ்பெக்டர், ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சுவாமி சங்கரானந்தர் என்ற துறவியை தன் லட்டியால் அடித்துக்கொண்டிருந்தார். ... Read More »

கப்பலோட்டிய தமிழர்

கப்பலோட்டிய தமிழர்

வ.உ.சிதம்பரம்  பிள்ளை (பிறப்பு: 1872, செப். 5 – மறைவு: 1936, நவ. 18) தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். காங்கிரஸ் வரலாற்றை மிதவாத அரசியல்வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் ... Read More »

Scroll To Top