தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டின் ரட்சகர் என்று அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் இன்று (ஜூலை 15). நூற்றுப் பத்து ஆண்டுகளுக்கு முன் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தம் கடுமையான உழைப்பால் அகில இந்தியத் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த காம ராசர் பெயரால் கால் நூற்றாண்டுக்கு முன் டெல்லியில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் காரணம் என்னவென்று ... Read More »
Category Archives: பொது
கறிவேப்பிலையின் நன்மைகள்!!!
July 15, 2016
உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது. ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி ... Read More »
அறியும் அறிவே அறிவு!!!
July 14, 2016
சீடனுக்கு என்று மட்டுமல்ல, தேகான்ம பாவனை அற்ற நிலை பெறுதற்கு எவருக்குமே பயன்படும் பல உத்திகள் இந்தச் செய்யுளில் வருகின்றன. தானம் தவம் வேள்வி தன்மம் யோகம் பத்தி வானம் பொருள் சாந்தி வாய்மை அருள் – மோனநிலை சாகாமல் சாவு அறிவு சார்துறவு வீடு இன்பம் தேகான்ம பாவம் அறல் தேர் பொருள்: தானம், தவம், வேள்வி, தர்மம், யோகம், பக்தி, சொர்க்கம், உண்மைப் பொருள், அமைதி, சத்தியம், அருள், மௌனம், முக்தி நிலை, ஜீவபோதம் அழிதல், ... Read More »
அன்பும் தலை காக்கும்!!!
July 14, 2016
தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ அவர் ஒரு சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் பணி முடித்து கிளம்பும் முன், எதையோ செக் செய்யவேண்டி, சிமெண்ட் மூட்டைகள் பிரித்து கொட்டப்படும் பகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரிய கொள்கலனில் தவறி விழுந்துவிடுகிறார். எத்தனையோ பலமாக கத்தியும் யார் காதுக்கும் அவர் கூக்குரல் விழவில்லை. பெரும்பாலானோர் ஏற்கனவே பணி முடித்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சிமென்ட்டில் கலக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது கொள்கலனில் வந்துவிழுந்துகொண்டிருந்தது. இன்னும் சில ... Read More »
எதையும் கொண்டு போக முடியாது!!!
July 14, 2016
ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: “வா மகனே……..நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது…….” ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?” “மன்னித்துவிடு மகனே……..உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது………” “அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?” “உன்னுடைய உடைமைகள்………” “என்னுடைய உடைமைகளா!!!…….அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,………….?” “இவை அனைத்தும் உன்னுடையது அல்ல…….. அவை பூமியில் நீ வாழ்வதற்கானது………” “என்னுடைய நினைவுகளா?………….” “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை காலத்தின் கோலம்……..” “என்னுடைய திறமைகளா?………..” “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது…….” “அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?……” ... Read More »
ஜூலியஸ் சீசர்!!!
July 13, 2016
கி.மு. 49ம் ஆண்டு, ஜூலியஸ் சீசர் மேற்கு இத்தாலியிலுள்ள ரூபிகான் நதியைக் கடந்து ரோமன் குடியரசில் ஒரு உள்நாட்டுப் போரை ஏற்படுத்தினார். ஜூலியஸ் சீசரின் பரம எதிரி பாம்ப்பே கிரீசுக்குத் தப்பிச் சென்றார். மூன்றே மாதங்களிலில் இத்தாலிய தீபகற்பம் முழுவதையும் சீசர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ஸ்பெயின் நாட்டில் பாம்ப்பேய்க்கு ஆதரவாயிருந்தவர்களையும் வென்றார். பின்னும் விடாமல் பாம்ப்பேயை கிரீசுக்குத் துரத்திச் சென்றார். ஆனால் பாம்ப்பே அதற்குள் எகிப்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவரை எகிப்திற்குத் தொடர்ந்த சீசருக்கு ... Read More »
துணி துவைத்த சீடர்கள்!!!
July 13, 2016
குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர். துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர். கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர். இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. ... Read More »
கடவுளை அடைய முப்பது வழிகள்!!!
July 12, 2016
வேங்கடாசல மகாத்மியத்தின் 21 வது அத்தியாயத்தில் கடவுளின் மிகச் சிறந்த ஒரு பக்தரான ராமானுஜரைப் பற்றிய ஒரு கதையை சுத முனிவர் மற்ற முனிவரிகளிடம் எடுத்துரைக்கிறார். ராமானுஜரின் பக்தியையும் வழிபாட்டையும் கண்டு பெரிதும் மகிழ்ந்த சுவாமி வெங்கடாசலபதி அவர் முன் தோன்றினார். பகவானை வணங்கிய ராமானுஜர் கடவுளின் கச்சிதமான பக்தன் ஒருவனுக்குரிய குணாம்சங்கள் எவை என்று பகவானிடம் கேட்கிறார். பின்வரும் லட்சணங்களை பகவான் அவரது கேள்விக்கு விடையாகப் பட்டியலிடுகிறார். அனைத்து உயிரங்கள் மீதும் உண்மையான் அக்கறை கொண்டுள்ள ... Read More »
சீரகத்தின் மருத்துவ பயன்கள்!!!
July 12, 2016
தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் ‘சீரகம்’, வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. * தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க ¬வத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைததுக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. ... Read More »
பக்தன் பகவான் யுத்தம்!!!
July 12, 2016
கண்ணன் கதைகள் அதிகாலை நேரம். தகதகவென வானில் தங்கப் பழம்போல் கதிரவன் புறப்பட்டுக் கொண்டிருந்தான். யமுனை நதிக் கரையில் சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்தார் காலவ முனிவர். அர்க்கியம் விடுவதற்காக யமுனையின் புனிதநீரை இருகைகளிலும் அள்ளி எடுத்தார். கண்ணனை கடவுளை மனத்தில் தியானித்து “கேசவம் தர்ப்பயாமி! நாராயணம் தர்ப்பயாமி’ என்று விழிமூடி பக்தியுடன் அவர் அர்க்கிய மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருந்தபோது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. அர்க்கியம் சமர்ப்பிப்பதற்காக அவர் கைகளில் எடுத்த புனித நீரில், மேலிருந்து ஏதோ வந்து விழுந்தது. ... Read More »