Home » பொது (page 6)

Category Archives: பொது

நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

நினைவில் வாழும் வெற்றித் திருமகன்

பீல்ட் மார்ஷல் மானேக்ஷா (பிறப்பு:  1914, ஏப். 3- மறைவு: 2008, ஜூன் 27)   40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன்  முரண்பட்ட போதும்,   போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத்   தோற்கடித்து சரணடையச் செய்தவர். வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி,  இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவு கூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர் சாம் ஹோர்முஸ்ஜி பிரேம்ஜி ... Read More »

சைவம் போற்றும் அன்னை

சைவம் போற்றும் அன்னை

காரைக்கால் அம்மையார் சைவம் வளர்த்த 63  நாயன்மார்களுள் பெண்களுக்கும் இடமுண்டு. அவர்களுள் தலையாயவர் காரைக்கால் அம்மையார்.  பொது யுகத்திற்குப்  பின்  300- 500 காலப்பகுதியில் வாழ்ந்தவர் இவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் இவரது இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.  நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர். இறைவனால் ”அம்மையே” என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர் என்பர். இவர் இயற்றிய பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 ... Read More »

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த கவி

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த கவி

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (பிறப்பு: 1855, ஏப். 5 – மறைவு: 1897 ஏப். 26) கேரளத்தின் ஆலப்புழையில்  குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து 1897-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி மறைந்தார். சுந்தரத்துக்கு 1877 தை மாதம், 22-வது வயதில், அவரது பெற்றோர், சிவகாமியை ... Read More »

முதல் சுதந்திரப் போரின் முதல்பொறி

முதல் சுதந்திரப் போரின் முதல்பொறி

மங்கள் பாண்டே (1827, ஜூலை 19-  பலிதானம்: 1857, ஏப்ரல் 8) 1857 வரலாற்றில் முத்திரை பதித்துவிட்ட ஆண்டு. கிழக்கிந்திய கம்பெனியார் பொருள்களை விற்பனை செய்ய இந்தியாவில் காலடி எடுத்து வைத்துவிட்டு, இங்கு நாடுபிடிக்கத் தொடங்கினர். கிழக்கிந்திய கம்பெனிக்கு சேவகம் செய்ய ஆங்கில படைகளைத் தவிர இந்திய வீரர்களைக் கொண்ட படைகளையும் தயாரித்து வைத்திருந்தனர். இதில் நடந்த கொடுமை, ஆங்கில சிப்பாய்களின் ஊதியத்துக்கும், சலுகைகளுக்கும், சீருடையிலும் மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத்தாழ்வு காட்டியிருந்தனர். மகாராஜாக்களைப் போல ஆங்கில சிப்பாய்கள் ... Read More »

வந்தேமாதரம் தந்த ரிஷி

வந்தேமாதரம் தந்த ரிஷி

பக்கிம் சந்திர சட்டர்ஜி (பிறப்பு: 1838, ஜூன் 27 – மறைவு: 1894 ஏப்ரல் 8) ‘வந்தே மாதரம்’ -இந்த வார்த்தைகள் விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர எழுச்சியை, உத்வேகத்தை ஊட்டிய மந்திர வார்த்தைகள். அன்று மட்டும் அல்ல, இன்றும் ‘வந்தே மாதரம்’ என்றால் நாடி நரம்பெல்லாம் தேசபக்தி கணல் பாய்கிறது. இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர், இந்த நாட்டை நம் அனைவருக்கும் சொந்தமாக்க விதை தூவியவர், பக்கிம் சந்திர சட்டோபத்யாய என்னும் பக்கிம் சந்திர சட்டர்ஜி. 1838 ... Read More »

அம்பேத்கரும் தேசியமும்

அம்பேத்கரும் தேசியமும்

டாக்டர் பீமராவ் அம்பேத்கர் (பிறப்பு: ஏப். 1891, 14 – மறைவு: 1956, டிச. 6 ) அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது கருத்துகளிலும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் கொடிய பழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை இயல்பு, அவரது கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் நிதர்சனத்தை ... Read More »

சாவர்க்கரின் தமிழகத் தோழர்

சாவர்க்கரின் தமிழகத் தோழர்

வ.வே.சு.ஐயர் (பிறப்பு: 1881, ஏப். 2- மறைவு: 1925, ஜூன் 4) திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வேங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881, ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தவர் வ.வே.சுப்பிரமணியம் என்கிற வ.வே.சு.ஐயர். திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12-ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அப்போது ... Read More »

மகாத்மா காந்தியின் நிழல்

மகாத்மா காந்தியின் நிழல்

கஸ்தூரிபா காந்தி (பிறப்பு: 1869, ஏப். 11 -மறைவு: 1944, பிப். 22) தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்தவர், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் கஸ்தூரிபா காந்தி. கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்த பாரத மங்கையர் திலகம் அவர். குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில், வணிக குடும்பத்தில், கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869-இல் பிறந்தார் கஸ்தூரிபா. இவருக்கு 13  வயதான போது (1883)  குடும்ப உறவினரான மோகன்தாஸ் கரம்சந்த் (மகாத்மா) காந்தியுடன்  திருமணம் செய்து ... Read More »

தமிழைக் காத்த தாத்தா

தமிழைக் காத்த தாத்தா

உ.வெ.சாமிநாத ஐயர் பிறப்பு: 1855,  பிப். 19- மறைவு: 1942, ஏப். 28) தமிழ்மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா! 1855,  பிப். 19-ஆம் நாள், நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில், வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய ... Read More »

உலகப் பொதுமறை கண்ட தமிழர்

உலகப் பொதுமறை கண்ட தமிழர்

திருவள்ளுவர் (குருபூஜை தினம்:  மாசி – ஹஸ்தம்) (மார்ச் 8) ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி. ஈரடிகளால் ஆனா குறட்பா வடிவில், 1330  பாக்களில், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் மூலமாக வீடு என்னும் உயரிய பேறினை அடைய வழிகாட்டுகிறார் திருவள்ளுவர். திருவள்ளுவர் குறித்த ஆதாரப்பூர்வமான விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், சென்னை- மயிலாப்பூரில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வைகாசி மாத அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்; ... Read More »

Scroll To Top