Home » பொது (page 44)

Category Archives: பொது

விநாயகர்!!!

விநாயகர்!!!

பிள்ளையார் என்பது ஏன்? தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.   கணபதிக்கு பிரியமானவை! கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் ... Read More »

விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும்!!!

விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும்!!!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.  விரதம்: மனம், பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும் இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதி செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய ... Read More »

விநாயகர் அவதாரம்!!!

விநாயகர் அவதாரம்!!!

விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் ... Read More »

வேதாந்தமும் தனிச்சலுகையும்!!!

வேதாந்தமும் தனிச்சலுகையும்!!!

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் ... Read More »

இராமன் பற்றிய பழமொழிகள்!!!

இராமன் பற்றிய பழமொழிகள்!!!

அனுமார் வால் போல நீளுகிறதே – அனுமார் வால் போல நீண்டதாம்! இந்தப் பழமொழி ராமாயண சுந்தர காண்ட நிகழ்ச்சியில் இருந்து வந்தது. ராவணனால் துன்புறுத்தப்பட்ட அனுமன், இலங்கைக்கு தீ வைத்தான். அப்பொழுது அவன் வால் திரவுபதியின் புடவை வற்றாது வந்தது போல நீண்டு கொண்டே போனது. அதாவது ஆஞ்சநேயனை தீயானது சுடவே இல்லை. இந்தியாவின் ‘’சூப்பர்மேன்’’ Superman மாருதி. அவன் செய்யாத சாகசம் இல்லை. அத்தனையையும் இன்று வெள்ளைக்காரர்கள் ‘காப்பி’ அடித்து காமிக்ஸ் Comics ஆக ... Read More »

ஸ்வஸ்திகா சின்னம்!!!

ஸ்வஸ்திகா சின்னம்!!!

ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவம்! ஸ்வஸ்திகா என்பது ஒவ்வொரு இந்து வீட்டிலும் காணப்படும் ஒரு பொதுவான சின்னமாகும். இந்துக்களின் அனைத்து மங்களகரமான நிகழ்வுகளிலும் இந்த சின்னம் கண்டிப்பாக இடம் பெறும். ரங்கோலி வடிவிலோ அல்லது கலசத்திலோ அல்லது வீட்டின் கதவுகளிலோ அது வரையப்பட்டிருக்கும். ஸ்வஸ்திகா எனும் வார்த்தை ‘சு’ (மங்களகரம் என பொருள் தரும்) மற்றும் ‘அஸ்தி’ (இருக்கும் என பொருள் தரும்) என்ற இரண்டு அசைகளால் உருவானவை. இரண்டையும் சேர்த்தால் ஸ்வஸ்திகா என்பதற்கு ‘மங்களகரம் உங்கள் உடனிருக்கும்’ ... Read More »

அன்பு பயமறியாதது!!!

அன்பு பயமறியாதது!!!

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா? இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. ... Read More »

வரலாற்றுத் துணுக்குகள்!!!

வரலாற்றுத் துணுக்குகள்!!!

பூமியை உருண்டையாகப் பார்த்த முதல் மனிதன் பூமி உருண்டை என்பதை முதன்முதலாகப் பார்த்த மனிதன் ரஷ்யாவின் யூரிகாகரின்தான். இவர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். விண்வெளியில் இருந்து பூமியையும் அதன் உருண்டை வடிவத்தையும் முதன்முதலாகப் பார்த்த பெருமை இவரையே சாரும். 20 நிமிடத்தில் நான்கு செய்தித்தாள் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி தினமும் 20 நிமிடங்கள் மட்டுமே செய்தித்தாள்கள் படிக்க ஒதுக்கி வந்தார். இந்த குறுகிய நேரத்திற்குள் அவர் நான்கு செய்தித்தாள்களை படித்துவிடுவார் என்பது ... Read More »

ஆந்தைகளின் மொழி!!!

ஆந்தைகளின் மொழி!!!

அன்று காலை, அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார். அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது ... Read More »

சில விந்தைத் தகவல் தொகுப்பு!!!

சில விந்தைத் தகவல் தொகுப்பு!!!

முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி. மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். எறும்புகள் தூங்குவதில்லை. கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும். உதட்டுச் சாயத்தில்(லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது. ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது. ... Read More »

Scroll To Top