மஹா பாரதத்தில் வரும் ஒரு சிறு கதை. கிருஷ்ண பரமாத்மா தர்மர் மற்றும் துரியோதனன் இருவர் வீட்டிற்கும் வர ஒத்துக் கொண்டார், ஆனால் ஒரு நிபந்தனையுடன், அந்த நிபந்தனை அவர் வரும் போது தங்கள் இல்லம் முழுவதையும் ஏதாவது ஒரு பொருளால் நிறைத்து வைக்க வேண்டும் என்று. துரியோதனன் வைக்கோலை வாங்கி தன் வீடு முழுவதும் நிறைத்து வைத்தான். கிருஷ்ண பரமாத்மா வந்த போது அவர் இல்லத்துள் நுழைய முடியாமல் அப்படியே வெளியே இருந்து விட்டு திரும்பி ... Read More »
Category Archives: பொது
தீபாவளி பண்டிகையின் வரலாறு!!!
October 22, 2016
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம். வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் ... Read More »
ஆப்பிள் தினம்!!!
October 21, 2016
ஆப்பிள் தினம் அக்டோபர் 21 … ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள்.மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு.ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் ... Read More »
அல்பிரட் நோபல்!!!
October 21, 2016
அல்பிரட் நோபல் அல்பிரட் நோபல் 1834ஆம் ஆண்டு அக் டோபர் 21ஆம் திகதி ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்தார். இவர் தன் கல்வியை ரஷ்யாவில் முடித்துவிட்டு அமெ ரிக்கா சென்று அங்கு எந்திரவியலில் சிறப்பு பயிற்சி பெற்றார். இளம் வயதில் அறிவியலில் மட்டுமன்றி இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினார். ஐந்து மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர், தன் தந்தையைப் போன்று வெடிமருந்து உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக நைட்ரோ கிளிசரின் போன்ற வெடி மருந்துகளைப் ... Read More »
ஏன் கவலை இந்த கதையை படிங்க!!!
October 20, 2016
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல், “ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என எழுதி இருந்தது. சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது: ‘எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!’ சிந்தித்து பாருங்கள் பிரபலமான ஒருவர் மேடையில் பேசி கொண்டிருக்கும் போது ஒரு காமெடியை சொல்கிறார், உடனே அங்கிருந்த ... Read More »
குரு நானக் தேவ் ஜி!!!
October 20, 2016
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும் சீக்கிய மதத்தின் பத்து மனித குருக்களில் முதலாமவருமான குரு நானக் பிறந்த தினம் இன்று. இந்து-முஸ்லிம் பேதம் பாராட்டாது வாழ்ந்த மாபெரும் சித்தர் தான் குருநானக். மேற்கு பாகிஸ்தானில் உள்ள லஹோருக்கு அருகிலுள்ள ராய் போய் டி தல்வண்டி என்ற கிராமம் தான் இவர் அவதரித்த சிற்றூர். 1469 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மேதாகலூரா என்ற எளிய மனிதருக்கும் அவரது மனைவி மட்டாதிரிபாத் என்ற பெண்மணிக்கு இரண்டாம் குழந்தையாகப் பிறந்தார்.அப்போது பாகிஸ்தான் என்ற ... Read More »
காந்தி கணக்கு!!!
October 19, 2016
காந்தி கணக்கு…!!?? காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட ‘நாமம்’ என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம். மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் ... Read More »
தமிழ் அறிஞர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை!!!
October 19, 2016
நாமக்கல் கவிஞர் என மக்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற தி.வெ.இராமலிங்கம் பிள்ளை. மிகமிக எளிய சொற்களால் கவிதை பாடி, காந்தியக் கொள்கையைத் தமிழ்நாட்டில் பரப்பிய ஒரே கவிஞர். அரசியல். சமுதாயம், பண்பாடு ஆகியவை மறுமலர்ச்சி அடைந்த காலமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த ஒரு அகிம்சைக் கவிஞர் தொடக்கக் காலத்தில் வன்முறை புரட்சியால் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என்று எண்ணி பின்னாளில் காந்தியடிகளின் அஹிம்சை கொள்கை மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என தன்முடிவை மாற்றிக் கொண்ட புரட்சியாளர். ... Read More »
அலாஸ்கா!!!
October 18, 2016
‘அடடா… வெயில் தாங்கலையே… எங்கேயாவது குளுகுளுன்னு ஒரு இடம் இருந்தா நல்லாயிருக்குமே’ என்று வெயிலின் சூட்டிலிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகள்! அதில் ஒன்றுதான் குளிர் பிரதேசப் பயணம். அமெரிக்காவில் அலாஸ்காவில் உலகின் பாதுகாக்கப்பட்ட பெரிய பகுதிகள் இருக்கின்றன. தென் அமெரிக்க ஆர்க்டிக் பகுதியில், உலகின் அற்புத பகுதிகள் இருக்கின்றன. கடந்த 150 வருடங்களாக, இந்த பகுதிகளின் பெரும்பான்மையான இடங்களில் ஊசி இலை மரங்கள், ஹெம்லாக் போன்ற அரிதான செடிகள் ஆகியவை காணப்படுகின்றன. குறிப்பாக, ஊசி இலை மரங்களின் ... Read More »
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்!!!
October 17, 2016
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: வரலாற்று புகழ் மிக்க தஞ்சை சரசுவதி மகால் நூலகம் பன்மொழிக் களஞ்சியமாக விளங்குகிறது. தஞ்சை மாமன்னர் சரபோஜி, சத்திரம் உள்ளிட்ட புதிய நிர்வாகங்களை உருவாக்கி, அவற்றை நிர்வகித்தவர். ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில், தீர்க்கதரிசியாக திகழ்ந்தவர். உலகில் அனைவரும், படித்து பயன்பெறும் விதத்தில், தஞ்சையில் சரஸ்வதி மகால் நூலகத்தை உருவாக்கினார். உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.சோழர் காலத்து “சரஸ்வதி பண்டாரம்” ... Read More »