ஒரு காட்டில் முயல்கள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது. அதாவது முயல்கள் அனைத்தும் கோழைகளாக இருந்தன. ‘வேட்டைக்காரன் வந்ததும் நம்மைத்தான் வேட்டையாடுகிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களும் நம்மைத் தான் அடித்து உண்ணுகின்றன. ஆகவே…நம் கூட்டம் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை, ஒன்றாக ஏதேனும் ஒரு குளத்தில் செத்து மடிவோம்’என முயல்களின் தலைவன் கூற அனைத்தும் ஒரு குளத்தை நோக்கிச் சென்றன. அந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் வசித்து வந்தன.அவை கரையில்அமர்ந்திருந்தன.முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த தவளைகளின் தலைவன் ‘முயல்கள் கூட்டமாக நம்மைத்தாக்க வருகின்றன.நாம் கரையில் ... Read More »
Category Archives: பொது
அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!
November 8, 2016
ஒரு முதியவரும், அவரது மருமகளும் தினமும் எதாவது வாக்குவாதம் செய்துகொண்டிருப்பர். இதனால், அவரது மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது.ஒருநாள் சண்டையில், மகன் தந்தையைத் திட்டி விட்டான். பெரியவர் வருத்தத்துடன் புறப்பட்டார். வழியில் மகான் ஒருவரைக் கண்டார். “”சுவாமி! முதுமையில் பிள்ளைகள் நமக்கு உதவப் போவதில்லை என்பது தெரிகிறது.இருந்தாலும், இளமையில் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று ஏங்குவதும்,அவர்கள் மீது பாசம் வைத்து வளர்ப்பதும் தேவைதானா?” என்று கேட்டார். மகான் சிரித்தபடி, “”சரியப்பா! நீ உன் பெற்றோர் இருந்த காலத்தில் அவர்களைக் கவனித்தாயா?” “”சுவாமி… ... Read More »
வரலாற்றில் இன்று: நவம்பர் 8
November 8, 2016
1520: சுவீடன் மீது படையெடுத்த டென்மார்க் படையினர் ஸ்டொக்ஹோமில் சுமார் 100 பேரை கொலை செய்தனர். 1923: ஜேர்மன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான நாஸிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது. 1932: பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் தடவையாக தெரிவானார். பின்னர் மேலும் 3 தடவைகள் இவர் வெற்றிபெற்று சாதனை படைத்தார். 1939: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் படுகொலை முயற்சியிலிருந்து நூலிழையில் தப்பினார். 1950: கொரிய யுத்தத்தின்போது அமெரிக்க விமானப்படையின் எவ்-80 ... Read More »
வாழும் வரை போராடு!
November 7, 2016
ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார். “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »
எறும்பு – சிறந்த பொறுமைசாலி !
November 7, 2016
ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில்சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்துபார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்றகொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு ... Read More »
பெரிய நம்பிக்கை………!
November 7, 2016
உலகில் பெரிய காரியங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தங்களுடைய நம்பிக்கையை சிறிய செயல்களில் செலுத்தி வீணாக்கி விடவில்லை. இதற்கு மாறாக நம்பிக்கையை பெரிய செயலில் செலவிடுவதே வாழ்வின் நோக்கமாகக்கொண்டிருந்து, அதற்காக ஓயாது பாடுபட்டு முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஜான் பயர்டு என்பவர் தான் டி.வி.யைக் கண்டு பிடித்தார். அவருடைய நம்பிக்கை எவ்வளவு பெரியதாகவும், அளவு கடந்ததாகவும் இருந்தது என்பதனை உணர்ந்து கொண்டாலே போதும். நம்முடைய நம்பிக்கையை எதில் வைத்து எப்படி செயல்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். ஜான் பயர்டின் இளமைப் பருவத்திலே பொறிகளை உருவாக்க ... Read More »
அட பணமே!
November 7, 2016
சீடர்களுடன் சென்று கொண்டிருந்த குருநாதருக்கு நேரமாகி போனதால் பசியெடுக்க ஆரம்பித்தது. வழியில் எதிர்ப்பட்டவரிடம், “”இந்த ஊரில் தர்ம சத்திரம் எங்கிருக்கிறது?” என்று கேட்டார். “”சுவாமி! தானம் செய்ய இங்கு ஆள் இல்லை. ஆனால், இங்கு உணவகம் ஒன்று இருக்கிறது. பணம் கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்” என்றார். சீடரில் ஒருவர் குருவிடம், “”சுவாமி! உங்களை நேரில் பார்க்கும் போது எப்படிப்பட்டவரின் மனமும் மாறி விடும். நிச்சயம் அனைவருக்கும் இலவச சாப்பாடு கிடைக்கும்,” என்றார். எல்லாரும் உணவகத்தில் சாப்பிட்டனர். சீடர் எதிர்பார்த்ததற்கு மாறாக, உரிமையாளர் பணம் கேட்டார். மறுப்பேதும் சொல்லாமல் கேட்டதை கொடுத்து விட்டு குருநாதர் நடக்க ... Read More »
பழமொழியும் அவற்றுக்கான விளக்கம்
November 7, 2016
சில தெரிவு செய்யப்பட்ட பழமொழிகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கீழே காணலாம். 1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகம் என்பது மனம் அல்லது உள்ளம். மனத்தில் எழுகின்ற எண்ணங்களின் பிரதிபலிப்பு முகத்தில் தெரியும். ஒருவருடைய மன உணர்வை அல்லது மன நிலையை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் அவரது முகம் காட்டிவிடும். உள்ளத்தை எடுத்துக்காட்டும் கண்ணாடி முகமாகும். 2. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. உலகில் அனைத்தும் இறைவனின் ஆணைப்படி நடக்கிறது. அந்த இறைவன் இல்லாவிட்டால் ஒரு சிறு அணுவும் அசையாது. இறைவனின் பேராற்றலினால்தான் உலகமும் உயிரினங்களும் இயங்குகின்றன. 3. அழுத பிள்ளை பால் குடிக்கும். குழந்தை ... Read More »
மனம் ஒரு ஒட்டகம்!
November 7, 2016
மனம் போன போக்கில் நடக்கும் ஒரு இளைஞன், குருவாக ஒருவரை ஏற்றான்.ஆனால், அங்கிருந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல், சுதந்திரமாக வாழ அங்கிருந்து புறப்பட்டான். செல்லும் வழியில், ஒரு ஒட்டகம் புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் நின்றபடி, “”எனக்கு பொருத்தமான குரு யாரும் உலகில் இல்லையே” என்று தனக்குள் சொன்னான். அதை ஆமோதிப்பது போல, அந்த ஒட்டகம் தலையசைத்தது. “”ஆகா! வாயில்லா ஜீவன் என்றாலும், நான் சொல்வதைப் புரிந்து கொள்ளும் சக்தி இதற்கு இருக்கிறதே” என்று மகிழ்ந்தான். அந்த ஒட்டகத்தையே தன் குருவாக ஏற்றான். ஒட்டகத்தைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்தான். சில நாட்களில் ஒரு பெண்ணைக் ... Read More »
வரலாற்றில் இன்று: நவம்பர் 7
November 7, 2016
1917: முதலாம் உலக யுத்தத்தின்போது, ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது. 1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது, அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள பேர்ள் துறைமுகத்தின் மீது ஜப்பானின் 353 விமானங்கள், இரு அணிகளாக வந்து தாக்குதல் நடத்தின. 8 அமெரிக்க கப்பல்கள் அமெரிக்காவின் 188 விமானங்கள் அழிப்பு. 2402 பேர் பலி. 1975: கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா படையெடுத்தது. 1988: ஆர்மீனியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 25000 பேர் பலி. 1988: இஸ்ரேல் தொடர்ந்திருப்பதன் ... Read More »