Home » பொது (page 112)

Category Archives: பொது

ஒப்போ R5 (Oppo R5)

ஒரு ஸ்மார்ட்போனின் தொழில்நுட்பமும், பேட்டரியும்தான் முக்கியத் தேவையாக இருந்தாலும், அதன் டிசைன்தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அந்தவகையில் டிசைனுக்கு முக்கியத்துவம் தந்து வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் ‘ஒப்போ R5’. வடிவமைப்பு ‘ஒப்போ R5’ ஸ்மார்ட் போன் ‘Micro Arc Frame’ என்ற பிரத்யேகமான பிரேமைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. மெல்லியதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் முழுக்க முழுக்க ‘Hand Polishing’ மூலம் செய்யப்பட்டுள்ளது. இது பிரசித்தி பெற்ற ‘Swiss’ வாட்ச்களில் மட்டும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும். கவர்ச்சியான மெட்டாலிக் ... Read More »

உறைய வைத்த ஃப்ரிட்ஜ்! உலகை மாற்றிய புதுமைகள்!

இயற்கையாக உள்ள விஷயத்தை எல்லாம் செயற்கையாக, தானும் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதன் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறான். அதில் முக்கியமான ஒன்று, இயற்கையில் உருவாகும் பனிக்கட்டியை ஏன் நாமும் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம். இந்த எண்ணம்தான் ஃப்ரிட்ஜ் எனும் குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது. முதலில் 1750-களில் ரெஃப்ரிட்ஜிரேஷனுக்கான கண்டுபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஐஸ்கட்டி உருவாக்கும் இயந்திரம் முதலில் 1854-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மைகேல் பாரடேவின் விதிப்படி, அம்மோனியாவும், இதர ... Read More »

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் “ஆடம் ஆப்பிள்” அது என்னவென்று தெரியுமா? கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது. 2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா? ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான். 3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன. 4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது. 5. நம் தும்மும் போது ... Read More »

அறிவியல் வினோதங்கள்: விலங்குகளின் சுய தற்காப்பு முறைகள்

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன்னை பிற எதிரி விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கு சில சிறப்பு பண்புகள் இருக்கும். பொதுவாக எதிரி விலங்கினங்கள் உணவிற்காக தன்னைவிட பலம் குறைந்த விலங்குகளை கொன்று உண்ணும், ஆனால் பலம் குறைந்த உயிரினத்திற்கும் சில சிறப்பு பண்புகள் இருக்கும் அதன் மூலம் முடிந்தளவு தன்னை தற்காத்து கொள்ளும். அதில் நாம் அறிந்திராத சில சிறப்பு பண்புகளை கொண்ட விலங்கினங்கள் பற்றி இந்த பதிவில்….. Malaysian exploding ant (தற்கொலை படை ... Read More »

மர்மம்: பரிணாமத்தின் “தொலைந்த தொடர்புகள்”

தொலைந்த தொடர்புகளும் பரிணாமத் தொடர்ச்சியும்! தற்போது நிகழும் உயிரியல் நிகழ்வுகளை ஆராயும் சில/பல ஆய்வுகள் மாதிரி இல்லாம, பரிணாம ஆய்வானது பின்னோக்கி செல்லும் தன்மையுடையது. உதாரணமாக, ஒரு உயிரனு எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய, தேவைப்படும்போது ஒரு உயிரனுவை எடுத்து தத்ரூபமாக மைக்ராஸ்கோப் மூலமாக பார்த்துக்கொண்டே ஆராய முடியும். ஆனால், ஒரு அமீபாவோ இல்லை அனக்கோண்டாவோ எப்படி உருவானது அல்லது அதன் முந்தைய உயிரினம்/மூதாதையர் உயிரினம் எப்படி புதிய உயிராக மாறியது என்னும் பரிணாமக் கேள்விக்கான ... Read More »

இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கட்டுரைக்குள் செல்வதற்கு முன் : ( நாட்டால்,இனத்தால்,மதத்தால்,ஜாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.) !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை. அந்த ... Read More »

சூப்பர் வுமன் சின்ரோம்!

வீடு, அலுவலகம் இரண்டு இடங்களிலும் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்களுக்கு, சூப்பர் வுமன் பிரச்னை உள்ளது. பெண்களில் சிலர் தான் மனதில் முடிவு செய்திருக்கும் லட்சியத்தை அடைவதற்காக போதுமான தூக்கம், சத்துணவு இல்லாமல் கடுமையாக உழைப்பவர்கள். இன்னொரு பிரிவினர் அடுத்தவர் செய்தால் நன்றாக இருக்காது. தான் செய்தால் மட்டுமே பர்பெக்டாக இருக்கும் என்ற எண்ணத்தில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள். இன்னும் சிலர் மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் தானே ... Read More »

புரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு

நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம். 1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார். பாலம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் இது முடியாத காரியம் இதை கை விடுவதுதான் சரியான முடிவு என்றனர். இது போன்று தொங்குபாலம் இதற்கு முன் யாரும் கட்டியது இல்லை இனி கட்டவும் ... Read More »

பாம்புகள் பல விதம்

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் பாம்பு தைப்பான் (inland taipan) ஆகும். நச்சுப்பாம்புகளுள் மிகக் கொடியது இது. இந்தப் பாம்பின் நச்சுச் சுரப்பியில் எப்போதும் மிகக் குறைந்த அளவு நஞ்சுதான் (0.1 g) இருக்கும். ஆனால் இந்தக் குறைந்த அளவு நஞ்சு மனிதர்கள் ஐம்பது பேரைக் கொல்லப் போதுமானது ஆகும். (இரண்டு நூறாயிரம் எலிகளைக் கொல்ல வல்லது இந்த அளவு நஞ்சு.) ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் வாழும் கறுப்பு மம்பா (black mamba) உலகின் மிக விரைவான பாம்பு. ... Read More »

80 % நோய்கள் தானாகவே குணமடையும்!

உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள நோய்களில் சுமார் 80 சதவீதமான நோய்கள் தானாகவே குணமடையும் தன்மைக் கொண்டவை. அவற்றை குணப்படுத்த எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. ஆனால் நம்மில் சிலர் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேவையில்லாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் அவர்கள் மிகப்பெரிய பக்க விளைவுகளுக்கு ஆளாகுவதுடன், சில நேரங்களில் அது உயிராபத்தையும் ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் எல்லா மருந்துகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பக்க விளைவுகளை ... Read More »

Scroll To Top