இன்று அனைத்து விதமான கணினி ப்ரோகிராம்களிலும் ஆட்டோ கரெக்ஷன் சிஸ்டம் வந்துவிட்ட நிலையில், இதே முறை பேனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெர்ன்ஸ்டிஃப்ட் நிறுவனம் ஆட்டோ கரெக்ஷன் செய்யும் புதிய பேனா ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த பேனா முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதை தனியாகவும் மற்ற டிஜிட்டல் செயலிகளுடனும் பயன்படுத்தலாம். பிராசஸர், மோஷன் சென்சார், வைபை, வைப்ரேஷன் மாட்யூல் மற்றும் மெமரி கார்டு ஆகியவை இந்த பேனாவில் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் இது லைனக்ஸ் மென்பொருள் சார்ந்தது ... Read More »
Category Archives: பொது
மகாபாரதத்தில் அர்ஜுனன் ஏன் துரோணாச்சாரியாரின் விருப்பமான சீடன் என்பது தெரியுமா..?
February 24, 2015
பிரகாசமான ஒரு காலை வேளையில், வில் மற்றும் அம்புகளுடன் வனப்பகுதியில் இளைஞர்கள் பலர் திரண்டனர். ஆனால் இவர்கள் எல்லாம் சாதாரண இளைஞர்கள் அல்ல. இவர்கள் தான் ஐந்து பாண்டவர்களும் நூறு கௌரவர்களும். இந்த ஐந்து பாண்டவர்களும், நூறு கௌரவர்களும் உறவினர்கள் ஆவார்கள். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்களுக்கான பகை கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சிறுவர்கள் தான் பலம் மிக்க ஆண்களாக வளர்ந்து வந்தார்கள். ஐந்து பாண்டவர்களும் கடவுள்களின் பிள்ளைகள் வேறு. அக்காலத்தில் இருந்த ... Read More »
கோடிகள் புரளும் கோப்பை!
February 24, 2015
உலகக் கோப்பை கிரிக்கெட் ஜூரம் உலகில் பெரும்பாலானவர்களை பற்றிக் கொண்டிருக்கும்போது அதில் “வணிக வீதி’’ மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா? கோப்பை யாருக்குக் கிடைக்கும், எந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது? கடைசி நேரத்தில் காலை வாரியது எது? இவையெல்லாம் ரசிகர்கள், வீரர்கள், வல்லுநர்களின் விவாதத்துக்கு விட்டுவிடலாம். விளையாட்டில் கோடீஸ்வர விளையாட்டு என்றால் வீரர்களுக்கு அதிக பரிசுகளைக் கொட்டிக் குவிப்பது ஃபார்முலா 1 கார் ரேஸ், ஹெவி வெயிட் குத்துச் சண்டை போட்டி, அடுத்தது டென்னிஸ். ... Read More »
தியான யோக ரகசியம்-6
February 24, 2015
தியான யோக ரகசியம்! சத்-சித்-ஆனந்த வடிவினனான கடவுள் ஒருவர் இருக்கிறார் எனப் பூவுலகப் பெருமதங்கள் எல்லாம் ஒரே குரலில் பறைசாற்றுகின்றன. இவ்வுயரிய கடவுள் உங்களிலிருந்து அப்பாற்பட்டவர் அல்லர் என்று கூறும் என்னை நம்புங்கள். அவர் உங்களுக்கு வெகு அருகிலேயே இருக்கிறார். அவர் உங்களது சரீரக் கோவிலில், இதயக் குகையினுள் வாசம் செய்கிறார். உங்கள் மனத்தின் மௌன சாட்சியாக விளங்கும் அவர் உங்களின் அறிவுத்துறை வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மறை நூல்கள் தெரிவிக்கும் மிக உயரிய சக்தி ... Read More »
தியான யோக ரகசியம்-5
February 24, 2015
தியானத்தின் சிறப்பு! ஆத்மன் அல்லது கடவுளைப் பற்றிய தொடர்ந்த எண்ணப்பெருக்கே தியானம். தியான சமயத்தில் மனம் ஒருநிலைப்பட்டு, நாடி நிற்கும் பொருளின் உருவத்தைக் கொள்கிறது. சிதறுண்ட மனக்கதிர்கள் மெதுவாக ஒன்று திரட்டப்பட்டு மனம் ஒருநிலைப்படுகையில் தியானத்தில் நீங்கள் இன்பத்தை அனுபவிப்பீர்கள். தியானத்தில் நீங்கள் ஒழுங்காக இருத்தல் வேண்டும். காலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள பிரம்ம முகூர்த்தத்தில் தியானத்தை நீங்கள் பயிற்சி செய்தல் வேண்டும். தியானத்திற்காக இரண்டு அல்லது மூன்று இருக்கைகளைக் கொள்ளுங்கள். ... Read More »
தியான யோக ரகசியம்-4
February 24, 2015
தனிமையும் தியானமும்! ஏசுநாதர், ஜனகமஹாராஜர் மற்றும் பலர் இவ்வுலகில் இருந்துகொண்டே ஆத்மீக சாதனை செய்து ஆத்மானுபூதி அடைந்தனர். உலகின் மூலமாகவே உண்மையை உணர வேண்டும் என்பதே கீதையின் நடுநாயகமான போதனை. இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் பெரும் பகுதி மக்களால் செய்யத்தக்கதன்று. சொல்லுதல் எளியது. ஆனால் செய்வது கடினம். எத்தனை ஜனகர்களும் ஏசுநாதர்களும் தோன்றியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் உண்மையில் யோகப்பிரஷ்டர்கள். பெரும்பான்மை மக்களுக்கு இது அசாத்தியமானதொன்றாகும். ஏசுநாதர் பதினெட்டு வருடங்கள் மறைவில் இருந்தார். புத்தர்பிரான் எட்டு வருடம் ... Read More »
தியான யோக ரகசியம் செய்திகள் – 3
February 24, 2015
மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி? புறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. புலன்களின் மேல் ஏற்படும் பதிவுகளாலுண்டான வெளிப்புறத் தூண்டுகோலாலோ உணர்வு அல்லது நினைவின் மூலம் ஏற்படும் உட்புறத் தூண்டுகோலினாலோ உண்டாகலாம். ஒவ்வொரு தனித்த புலன் மேல் பதிவும் சிக்கலான உணர்ச்சி மூட்டையேயாகும். வெளிப்பாகத்திலிருந்து மூளையை நோக்கிச் செலுத்தப்படுகின்றன உணர்ச்சிகள். மனதின் அடித்தட்டில் ஏற்படும் ஒரு விழிப்புத்தன்மையே உணர்ச்சி. ... Read More »
தியான யோக ரகசியம் செய்திகள் – 2
February 24, 2015
தியானத்திற்குதவும் உணவு வகைகள்! சாத்துவிக உணவை மிதமாக உட்கொள்ளுங்கள். சாதம், காய்கறிகள், பருப்பு, ரொட்டி முதலியவற்றை அதிகமாக உட்கொண்டு வயிற்றைக் கனமாக்கினால் சாதனை தடைப்படும். சாப்பாட்டு ராமன், புலன்வழி நிற்போன், சோம்பேறி முதலியவர்களால் தியானத்தை நன்கு பயில முடியாது. பாலுணவு சரீரத்தை மிக மிக லேசாக்குகிறது. ஒரே ஆசனத்தில் மணிக்கணக்காக உங்களால் உட்கார முடியும். பலகீனமாகத் தோன்றினால் ஓரிரண்டு நாள் சிறிது சாதம் அல்லது பால் அல்லது பார்லி அல்லது ஏதாவது சிற்றுண்டியை நீங்கள் உட்கொள்ளலாம். சேவை ... Read More »
உலக கோப்பை போட்டியில் முதல் சதம்!!!
February 22, 2015
இன்றைய தினத்தில் கிரிக்கெட் உலகில் நமது வீரர்கள் (ஆண்கள்) உலக சாதனையோ, உள்ளூர் சாதனையோ செய்தால் நாம் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அரசு முதல் விளம்பர நிறுவனங்கள் என எல்லா தரப்பினரும் பாராட்டும், பரிசும் அறிவிக்கிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பெண்கள் அணி என ஒன்று இருப்பதே நம்மில் சிலர்? பலர் அறியாமல் இருப்போம். இந்திய பெண்கள் அணியில் ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். என்னவென்று அறிந்து கொள்ள வாசியுங்கள். தற்போது இந்தியாவில் நடைபெற்று ... Read More »
ட்ராகுலா!!!
February 16, 2015
பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் நானூறு ஆண்டுகள்… அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, ஏழையிலிருந்து பணக்காரன் வரை… யாராக இருந்தாலும் சரி – இரவு வந்தாலே பலருக்கு இதயத்துடிப்பு அதிகமாகும். ஈரக்குலை சில்லிட… காதுகள் அடைத்துக்கொள்ளும், பயத்தில் உடம்பிலே ஒரு உஷ்ணம் பரவும். நாக்குகள் வறண்டு போகும். காரணம் – வேம்பயர்! அதாவது, டிராகுலா. டிராகுலா என்பது உயிருள்ள பிணம். இந்தப் பிணம் ரத்தவெறி பிடித்தது! இரவானால் தன் உடம்புத் தோலை உரித்து வைத்து விட்டு வௌவால் மாதிரி பறந்து ... Read More »