Home » பொது (page 102)

Category Archives: பொது

கஷ்ட காலங்களில் கடவுள்

ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால்தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக் கேட்டான். “என்னுடன் வருவது யார்?” “நான் கடவுள்” என்று அசரீரியாகப் பதில் வந்தது. அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ‘கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்’. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் ... Read More »

அமெரிக்கப்பழமொழிகள்

ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான். உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான். செயலே புகழ் பேசும். உடையவனின் பாதம் வயலுக்கு உரம். சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன தோல்வி ஏற்படும் நேரத்தில்தான் மாவீர்ர்கள் உருவாகிறார்கள். ஆகவே, தொடர்ச்சியான பல பெரிய தோல்விகளே வெற்றி என்பதாக வர்ணிக்கப்படுகிறது. தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது. வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான். பல் இல்லாமல் இருந்தால்கூட ஒரு கலைமானால் சில காரியங்களைச் சாதித்துக் ... Read More »

ஸ்ரீநிவாச ராமானுஜம்

ஸ்ரீநிவாச ராமானுஜம்

கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம் ராமானுஜம் கணிதத்திற்காக எத்தனையோ செய்திருக்கிறார். அவரது மேதாவிலாஸத்திற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி. அவர் இங்கிலாந்தில் நோயுற்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். அவரை பார்க்க, ராமானுஜத்தை இங்கிலாந்திற்கு அழைத்து வந்த இன்னொரு கணித மேதையான ஹார்டி(கம்பருக்கு சடையப்ப வள்ளல் போல் ராமனுஜத்திற்கு இவர்) வருகிறார். ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பார்க்க போனால் நாம் என்ன செய்வோம்? நலம் விசாரிப்போம். ஹார்டி என்ன செய்த்தார் தெரியுமா, ராமானுஜத்தை பார்த்த உடனேயே, “ ... Read More »

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மக்களின் மனதில் நிற்பவர் யார்

இதோ ஒரு இனிமையான கவிதை! இந்தக் கவிதையை இளவயதில் பள்ளியில் படிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. என்ன கவிதை அது! “”செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே”   பாரதியார் எழுதிய இந்தப்பாடல், ஒரு காலத்தில் மூன்றாம் பரிசு தான் பெற்றது. “ஆச்சரியமாக இருக்கிறதே!’ என்பவர்கள் தொடருங்கள். சென்னையில் ஒரு இலக்கிய அமைப்பினர் கவிதைப்போட்டி அறிவித்தனர். முதல்பரிசு ரூ.300, இரண்டாம் பரிசு ரூ.200, மூன்றாம் ... Read More »

சித்திரக்கவிகள்

சித்திரக்கவிகள்

இந்தப் பாடல் நேராக வரிவடிவிலும், சுழியாகச் சித்திர வடிவிலும் அமைந்துள்ளது. மேலிருந்து கீழாக முதல் எழுத்துக் களையும் கீழிலிருந்து மேலாகக் கடையெழுத்துக் களையும் சுற்றி சுற்றி நான்கு முறைப் படித்தாலும் சரியாக வரும். கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற ... Read More »

முயற்சி

முயற்சி

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.  கவனித்துப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.  வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது. Read More »

கடலுக்குள் நீர்வீழ்ச்சி!!!

இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக ... Read More »

புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்… அதற்கான காரணங்களும்.

பல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளின் கலவையாக இந்தியா விளங்கினாலும், எண்ணிலடங்கா மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. அவைகளின் முக்கியத்துவங்களை சொல்லி தான் நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை.   இந்த மூட நம்பிக்கைகளை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் போது, நம்மை அறியாமலே அதனுடன் ஒன்றி போய் விடுகிறோம். ஆனால் இவைகள் ... Read More »

திபெத்திய மர்ம குகைகள் (இறுதிப் பகுதி) – 3

உயர்ந்த மலை முகட்டில் இறந்த உடல்கள் : சாம்ட்ஜோங் குகையில் (tomp 5) இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் (3 x 3 அடி) இருந்தது. உடைந்த நிலையில் இருந்த சவப்பெட்டியை ஏதென்ஸ் மற்றும் சிங்லாமா ஒழுங்கு செய்தனர். இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி வலுவான உயர்தர மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.   பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது விரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம். இளஞ்சிகப்பு மையால் ... Read More »

திபெத்திய மர்ம குகைகள் – 2

ஒரு காலத்தில் வடக்கு மத்திய நேபாலத்தின் ராஜ்ஜிய பகுதியாக இருந்த முஸ்டங் இன்று அகழ்வாராய்சியாளர்களுக்கு பல மர்மங்களை உள்ளடக்கிய பகுதியாக காட்சி அளிக்கிறது. காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கின் ஊடாக அவர்களின் பயணம் தொடர்கிறது. மலைப்பகுதியை நெருங்க நெருங்க ஏராளமான வான் குகைகள் (Sky Gaves) தென்படுகின்றன இந்த பகுதியில், பசியால் வறுந்தி செல்பவனுக்கு பலகாரங்கள் கிடைத்தது போல இது அவர்களுக்களின் அறிவு பசிக்கு (அகழ்வாராய்சி மூளைக்கு) பல தீனிகளை தரப் போகிற ஆவலில் அந்த மணற் ... Read More »

Scroll To Top