Home » பொது (page 10)

Category Archives: பொது

விநாயக் தாமோதர் சாவர்க்கர்!!!

விநாயக் தாமோதர் சாவர்க்கர்!!!

தன்னிகரில்லா வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர், தன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர் படைகளைக் கொண்ட  பன்முகத்துக்கு சொந்தக்காரர் வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இவர் தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பங்களையும், குழப்பங்களையும் கொண்டவர். இந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான சுதந்திரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க ... Read More »

டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன்!!!

டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன்!!!

உலகின் சிறந்த துடுப்பாட்டக்காரரான டான் பிராட்மேன் அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா ஆகிய அணிகளில் விளையாடி உச்சம் தொட்டார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக இருக்கும் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன், ஆகஸ்ட் 27ம் திகதி 1908ம் ஆண்டு, நியூ சவுத் வேல்ஸ்லில் பிறந்தார். 20 வருடம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தினார். டெஸ்ட்டில் 52 போட்டிகளில் விளையாடி 6996 ஓட்டங்கள் எடுத்தார். 334 என அதிகபட்ச ஓட்டம் எடுத்து, யாரும் ... Read More »

ஐ.எஸ்.ஓ!!!

ஐ.எஸ்.ஓ!!!

ஐ.எஸ்.ஓ. ஆரம்பிக்கப்பட்ட நாள்: உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும். ISO எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற ... Read More »

அன்னமாச்சாரியார்!!!

அன்னமாச்சாரியார்!!!

தல்லபாக்கம் அன்னமாச்சாரியார் தல்லபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 – பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்தகருநாடக இசைக் கலைஞர். திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வெங்கடேஸ்வரர் மீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற பஜனைப் பாடல்கள் புகழ்பெற்றவை. 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த கருநாடக இசைக் கலைஞர்.அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, ... Read More »

தில்லையாடி வள்ளியம்மை!!!

தில்லையாடி வள்ளியம்மை!!!

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்தவர் வள்ளியம்மை. வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத் தேடி அலைந்தனர். அங்கிருந்த தென்னாப்பிரிக்க நீக்ரோ தொழிலாளர்களோ அடிக்கடி வெள்ளை முதலாளிகளோடு ... Read More »

ஒரு விளம்பரம்!!!

ஒரு விளம்பரம்!!!

ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது.. . அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது.. அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்… . அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் .. . சிகரெட் குடித்தால்..! . 1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான் . 2 உங்களுக்கு முதுமையே வராது . 3 பெண் குழந்தை பிறக்காது . இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்…. ... Read More »

முத்தான சிந்தனைகள்!!!

முத்தான சிந்தனைகள்!!!

வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே.. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது. 1. வாழ்வை அனுபவிப்பதென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ நாம் இறந்த பிறகோ வரப்போவதில்லை. 2. அடுத்த வருடம் சிறப்பாக வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் இந்த வருடம்முழுமையாக, மனத்திருப்தியுடன், சந்தோஷமாக, மன ஈடுபாட்டுடன் வாழ வேண்டும். 3. பிரபஞ்சம் ஒரு படைப்பு, ஒரு குழப்பமல்ல. பகல் இரவு போல மனிதனும்பிரபஞ்சத்தில் ஒரு பாகம்தான். நன்றாகத் தேடினால் ... Read More »

உ.வே.சாமிநாதையர்!!!

உ.வே.சாமிநாதையர்!!!

உ. வே. சாமிநாதையர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கல்வி பயின்று, கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்கக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, “மகாமகோபாத்தியாய,” “டாக்டர்” என்னும் பட்டங்களைப் பெற்று வாழ்ந்தவர், உ.வே. சாமிநாதையர். நீருக்கும் நெருப்புக்கும் இரையாகவிருந்த தமிழைத் தடுத்துக் காப்பாற்றிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர். ஏட்டுச் சுவடிகளிலிருந்த இலக்கியத்தை அச்சு வாகனத்திலேற்றியவர். எட்டுத் தொகையில் ஐந்து நூல்களையும் பத்துப் பாட்டையும் காப்பிய நூல்களையும் மற்றும் எண்ணற்ற இலக்கிய நூல்களையும் செம்மையான முறையில் பதிப்பித்தவர். பல உரை ... Read More »

மா. சிங்காரவேலர்!!!

மா. சிங்காரவேலர்!!!

உலக அளவில் புகழ்பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் மகாத்மா காந்தி, ஈ.வே.ரா மற்றும் மா. சிங்காரவேலர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தையாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தையாகவும், விஞ்ஞானப் பகுத்தறிவு பயிலும் சமத்துவத்தின் தந்தையாகவும் விளங்கினார். 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வெங்கடாசலம் செட்டி, வள்ளியம்மை ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தார். கந்தப்ப செட்டி வம்சத்தில் உயர்கல்வி பெற்றவர்களில் இவர் ஒருவரே. 1881 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் ... Read More »

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்!!!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்!!!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் ... Read More »

Scroll To Top