மரத்தின் பயன்கள் பறவைகளின் பயணியர் விடுதிகள். பாதசாரிகளுக்கு இருக்க இடம் கொடுக்கும் பொதுவுடைமை வீடுகள். சூரிய நெருப்பு சுடுகிற பாதங்களுக்கு நிழல் கொடுக்கும் வெண்கொற்றக் குடைகள். மரங்களின் பயன்கள் மகத்தானவை. பசிக்குப் பழங்கள் தருகின்றன. நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றன. சுவாசிக்கக் காற்றைத் தருகின்றன. குழந்தைகளுக்குத் தொட்டிலையும், இளமைப் பருவத்தில் சுட்டிலையும், முதுமைப் பருவத்தில் ஊன்று கோலையும், இறக்கும்போது எரிக்க விறகையும் தருகின்றன. மரங்களின்றி வாழ்வு ஏது? உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம், மரம் நமக்கு ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
புளியமரம்!!!
February 3, 2016
புளியின் பயன்கள் நாம் உபயோகிக்கும் புளியைத் தரும் புளியமரம் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது. ஆனால், தொன்று தொட்டு இந்தியாவில் உபயோகப்பட்டு வருவதால் இந்தியாவிலேயே தோன்றியதாக, கருதப்படுகிறது. புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று. பசுமையான மரம் 80 அடி உயரம் வரை வளரும் அதனை சுற்றி 30-35 அடி விட்டத்துக்கு பரவும் கிளைகளுடைய பெரிய மரம். விஞ்ஞான ரீதியாக Leguminosae (Fabaceae) குடும்பத்தை சேர்ந்த Tamarindus indica ‘L’ என்று குறிப்பிடப்படுகிறது. உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு ... Read More »
கோபால கிருஷ்ண கோகலே!!!
February 2, 2016
கோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவர். கோகலே இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும் ஆவார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் ... Read More »
தமிழ்த் தாத்தா உ.வெ.சாமிநாத ஐயர்!!!
February 1, 2016
தமிழ்மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர் தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.! 1855, பிப். 19’ம் நாள், நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில், வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட ... Read More »
பிரச்னையை எதிர்கொள்வது!!!
February 1, 2016
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், தினசரி புதிய பிரச்னைகளும் வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னை. நாளை தீர்க்க வேண்டிய பிரச்னை. சில நாள் அல்லது சில மாதங்கள் கழித்து தீர்க்க வேண்டிய பிரச்னை என பிரச்னைகளின் வகைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு, அதனை எதிர்கொண்டு தீர்க்க முயல வேண்டும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடன் பிரச்னை, தொழில் பிரச்னை, குடும்பப் பிரச்னை, தொழிலை வெற்றிகரமாகச் செய்யும்போது எதிர்கொள்ள ... Read More »
காசியில் அன்னபூரணி தேவி!!!
February 1, 2016
காசியில் அன்னபூரணி தேவியின் கோயிலையும், அன்னை வீற்றிருக்கும் அழகையும் இப்பதிவில் காண்போம். காசி விஸ்வநாதர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் துண்டி விநாயகரைத் தரிசிப்பது முக்கியமானது. அதன் பின்பு சற்று தூரத்தில் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. அழகிய சித்திர வேலைப்பாடுடன் கூடிய நுழை வாயில் வலது புறத்தில் பாதாள லிங்கம். அதன் முன்பு சிறிய கிணறு. மராட்டியர் கால கட்டட அமைப்பு. நடுவில் சந்நிதிக்கு முன்பு அஷ்டகோண வடிவில் அமைந்த மண்டபத்தைப் பன்னிரெண்டு கற்தூண்கள் தாங்கி நிற்கின்றன. ... Read More »
செல்வமே சிவபெருமான்
January 12, 2016
மனித வரலாற்றை வகைபடுத்திய அறிஞர்கள் அதனை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் ,வெண்கலக்காலம் எனப் பலவகையாகப் பிரித்திருக்கின்றனர்.இவற்றுள் மனிதன் சற்றேமேம்பட்டு,சிந்திக்கத் தொடங்கிய காலத்தை பழைய கற்காலம் எனலாம்.இந்த பழைய கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான அடையாளக் கூறுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திக்கின்றன. இதில் இருந்தே சைவத்தின் தொன்மையை அறிந்து கொள்ளலாம். வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன் கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும் 1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டன. ... Read More »
படித்ததில் பிடித்தவைகள்
January 9, 2016
உலக மகா பணக்காரர் மற்றும் முதலீட்டு ஆலோசகர் வாரன் பஃபெட் இப்படிச் சொல்கிறார் .. ” நீங்கள் தேவை இல்லாத பொருட்களை வாங்கிச் சேர்த்தால், விரைவில் தேவையான பொருள்களை விற்க வேண்டி வரும் ” ஒரு எஸ்.எம்.எஸ் கலாட்டா முயல் ஓடுகிறது தாவுகிறது.. குதிக்கிறது …சுறுசுறுப்பாக இருக்கிறது ….. 15 வருடங்கள் வாழ்கிறது . ஆமை ஓடுவது இல்லை ,தாவுவது இல்லை …குதிப்பது இல்லை ஏன் எதுவுமே செய்வது இல்லை .150 வருடங்கள் வாழ்கிறது .. எனவே ... Read More »
பணம் !
January 9, 2016
உலோகம், காகிதம் என்றாலும் – இந்த உலகை இயக்கும் இன்னொரு இறைவன் ! மனிதன் படைப்பில் மாபெரும் சக்தி ! இது இருந்தால் உன்னை உனக்கே தெரியாது இது இல்லைஎன்றால் உன்னை யாருக்கும் தெரியாது ? Read More »
உணவே உபதேசம்
January 5, 2016
ஒரு பிச்சைக்காரனை புத்தரின் சீடர் சந்தித்தார். அவனுக்கு தர்ம உபதேசம் செய்ய ஆரம்பித்தார். “”ஆசையை விடு, ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்’ என்று நீண்ட சொற்பொழிவை அவனிடம் நிகழ்த்தினார். பிச்சைக்காரனுக்கோ கடும் பசி. இவர் சொல்வதெல்லாம் அவன் காதில் ஏறுமா என்ன… அவன் பாதி மயக்கத்தில், ஏதோ கவனத்தில் இருந்தான். சீடருக்கு கோபம் வந்து விட்டது. அங்கிருந்து நகர்ந்து விட்டார். புத்தரிடம் சென்று, “”ஐயனே! நான் ஒரு பிச்சைக்காரனுக்கு நல்ல பல உபதேசங்களைச் செய்தேன். அவற்றை அவன் ... Read More »