Home » படித்ததில் பிடித்தது (page 61)

Category Archives: படித்ததில் பிடித்தது

ஏன் சிரிக்கிறாய்?

ஏன் சிரிக்கிறாய்?

ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும். பெண் கழுதை எந்த வேலையும் பார்ப்பதில்லை. பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி எழும். மிகவும் மகிழ்ச்சியாக, வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது. ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை ... Read More »

ஆற்றில் வெள்ளம்!!!

ஆற்றில் வெள்ளம்!!!

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இக்கரையில் இரண்டு பேர்நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப்போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது.அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது… நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர்என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.அடுத்தவன் ... Read More »

100 மருத்துவக் குறிப்புகள்!!!

100 மருத்துவக் குறிப்புகள்!!!

100 மருத்துவக் குறிப்புகள்….. 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்…போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் ... Read More »

வாய்புண்!!!

வாய்புண்!!!

வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு.. நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம்.சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள். வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம். வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது ... Read More »

பனி கால பிரச்னைக்கு தீர்வு!!!

பனி கால பிரச்னைக்கு தீர்வு!!!

பனி கால பிரச்னைக்கு தீர்வு. . காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்குகிறார் இ.என்.டி. டாக்டர் சாந்தி செல்வரங்கம். குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி ... Read More »

நரியும் அதன் நிழலும்!!!

நரியும் அதன் நிழலும்!!!

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே உதித்த சூரிய ஒளியால் பெரிதாக தெரிந்த அதன் நிழலை பார்த்து தான்தான் இக்காட்டில் பெரியவன் சிங்கத்தை இனி ராஜா என்று அழைக்க கூடாது நான்தான் இனி காட்டிற்கு ராஜா என்று நினைத்துக்கொண்டு ஆணவத்துடன் நடந்து சென்றது. அப்போது அதற்க்கு எதிரே மானை வேட்டை ஆடி தின்றுவிட்டு, உண்டமயக்கத்தில் வந்துக்கொண்டிருந்த சிங்கம் நரியை ஒன்றும் செய்யாமல் மெதுவாக நரியை கடந்து சென்றது. இதை கண்ட நரி ... Read More »

யோசித்து செயல்படு!!!

யோசித்து செயல்படு!!!

ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர். குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம். யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது. ஒருநாள் ஐந்து ... Read More »

பூரான் கடிச்சா பனை வெல்லம் கொடுங்க!!!

பூரான் கடிச்சா பனை வெல்லம் கொடுங்க!!!

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். கடித்தது எந்த வகை பூச்சி என்பதை குழந்தைகளின் தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே கண்டறிந்து கொள்ளலாம். பூரான் எனப்படும் நூறுகாலிகள் கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் இருக்கும் இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும். ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும். பூரான் ... Read More »

சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!!

சிகரெட் பிடிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 1. சிகரெட் பிடிக்கையில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள வெப்ப நிலை சுமார் 800 டிகிரி செல்சியஸ் அதாவது இந்த வெப்பத்தில் பித்தளையும் துத்தநாகமும் உருகும். இந்த வெப்பம் உங்களின் உதடுகளை எரித்து கருப்பாக்குகிறது. 2. இதே அளவுள்ள சூடு உங்கள் நாவின் மேல் பட்டு ருசி அறியும் நாளங்களை சுட்டுப் பொசுக்கி நீங்கள் உட்கொள்ளும் உணவின் ருசி அறியாமல் செய்கிறது. நீங்கள் உண்பது முட்டையா இல்லை தயிரா என்பது ... Read More »

கண்களின் பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கும் திராட்சை!!!

கண்களின் பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கும் திராட்சை!!!

கண்களின் பாதுகாப்பில் முக்கிய பங்களிக்கும் திராட்சை:- திராட்சை பழம் அளிக்கும் பொதுவான சுகாதார நலன்கள் தவிர கண் பாதுகாப்பிலும் இது முக்கிய பங்களிக்கின்றது என்ற தகவலை சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளப்படும் திராட்சைப் பழத்தினால் கண் விழித்திரை அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது என்று அவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். எலிகளிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டபோது தினசரி உணவில் திராட்சை சேர்க்கப்பட்ட எலிகளின் விழித்திரை இயக்கம் மிகவும் வியப்பூட்டுவதாக அமைந்திருந்தது என்று புளோரிடா மாகாணத்தின் மியாமி ... Read More »

Scroll To Top