இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட “நன்னூல்” எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது ? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன் !!! தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு,கழுத்து,தலை,மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு,நாக்கு,பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ) அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது,அங்காத்தல் ( வாய் ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
இறைவனைக் காண்பது எப்படி?
April 13, 2016
* புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி, நிற்கக் கற்றுக் கொள்வதற்கு முன்னால் தட்டுத்தடுமாறிப் பலமுறை கீழே விழுவதுபோல, இறையருளைப் பெறுவதில் வெற்றி காண்பதற்கு முன் அநேக தவறுகள் பலமுறை நேரும். * எறும்பு விடாமுயற்சியுடன் இரை இருக்குமிடத்தை அடைந்து, அதைக் கவ்விக்கொண்டு, தனது இருப்பிடத்திற்கு கொண்டு சென்று உண்ணுகிறது. அதுபோல பக்தர்களும் இறைவனை விடாமுயற்சியுடன் வணங்கி, அவன் அருளைப் பெற வேண்டும். * பாலில் வெண்ணெய் இருக்கிறது என்று கத்தினால் வெண்ணெய் கிடைக்காது. அதை தயிராக்கிக் கடைய வேண்டும். ... Read More »
பூனை!!!
April 12, 2016
மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர். பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் ... Read More »
கோடை வெப்ப தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி…????
April 9, 2016
“கோடை வெப்பத்தின் தாக்கத்தால், கோழிகள் மற்றும் கால்நடைகள் “வெப்ப அயர்வு’ நோயால் உயிரிழக்க அதிக வாய்ப்புள்ளது,” என, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோழிகள் மற்றும் கால்நடைகள் “வெப்ப அயர்வு’ நோயால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளது. உடலின் வெப்பத்தை வெளியேற்ற, மனிதர்களுக்கு வியர்வை சுரப்பி உள்ளது; கோழிகளுக்கு வியர்வை சுரப்பி இல்லை; வாயை திறந்து, உடல் வெப்பத்தை சிறிதளவே வெளியேற்ற முடியும். வெயில் நேரத்தில் கோழிகள் ... Read More »
மரணம் வென்ற நம்மாழ்வாருக்கு இன்று பிறந்த நாள்…!
April 7, 2016
* கறுப்புச் சட்டை அணிந்த பகுத்தறிவுப் பெரியார் செய்தது அரசியல்- சமூகப் புரட்சி எனில், பச்சைத் துண்டு அணிந்த இந்தப் பசுமைப் பெரியார் செய்தது இயற்கை வேளாண் புரட்சி. நம் மண்ணின் மேன்மையை, பயிர்த் தொழிலின் தொன்மையை, இயற்கையின் பேராற்றலை… இந்தத் தலைமுறைக்கு உரத்துச் சொன்ன உழவன் கிழவன். ‘விவசாயம்’ என்ற முறிந்துகொண்டிருந்த கிளையை, மரத்துடன் ஒட்டவைத்த நம்மாழ்வார்… நம் காலத்தின் நாயகன்; தமிழ் நிலத்தின் தாய் விதை! * 1937-ல் பிறந்தது முதல் 2013 டிசம்பர் ... Read More »
புத்தகம்!!!
April 3, 2016
தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால்நேரு ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் ... Read More »
தற்பெருமை அழிவைத்தரும்!!!
April 3, 2016
* மருத்துவர்கள் நோயாளிகளிடம் ‘எனக்கு வியாதியே இல்லை’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய். அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய். * கல்லானது தண்ணீருக்குள் வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால், களிமண் தண்ணீருக்குள் ... Read More »
மீண்டும் வெளிநாட்டுப் பயணம்
April 2, 2016
தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சுபாஷ் மீண்டும் வியன்னா பயணமானார். வியன்னாவில் நடைபெற்ற இந்திய மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு சுபாஷ் சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரோம் நகரில் நடைபெற்ற ஆசிய மாணவர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் சுபாஷ். அப்போது அந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய முசோலினியை சந்தித்துப் பேசினார். இந்திய சுதந்திரப் போரைப்பற்றி இருவரும் கலந்தாலோசித்தார்கள். ரோம் நகரிலிருந்து யூகோஸ்லாவியா நாட்டிற்குச் சென்று அங்கு சிலகாலம் தங்கினார். 1935 ல் சுபாஷ் ஜெர்மனி நாட்டிற்குச் ... Read More »
மேயர் சுபாஷ்!!!!
April 2, 2016
சுபாஷ் சிறைக்குள் இருந்த சமயத்தில் கல்கத்தா நகர மாநகராட்சிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிறைக்குள் சுபாஷ் தாக்கப்பட்ட விஷயம் அறிந்த வங்காள மக்கள் பிரிட்டிஷ் அரசின் மீது கடும்கோபத்தில் இருந்தார்கள். அரசை பழிவாங்கக் காத்திருந்த மக்களுக்கு இந்த மேயர் தேர்தல் நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. சிறைக்குள் இருந்த சுபாஷை கல்கத்தா நகர மேயராக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனவே சிறைக்குள் இருந்த சுபாஷ் சார்பாக மக்களே ஒரு மனுவை சுபாஷ் சார்பில் தாக்கல் செய்தார்கள். தேர்தல் ... Read More »
யமனைப் பற்றிய சில சுவையான குறிப்புகளையும் காண்போம்:
March 31, 2016
1.யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி.2.யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன். 3.யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள். 4.யமனுடைய ... Read More »