Home » படித்ததில் பிடித்தது (page 40)

Category Archives: படித்ததில் பிடித்தது

கருவூரார்!!!

கருவூரார்!!!

என்ன கருவூராரைக் காணவில்லையா? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் ... Read More »

பாம்பாட்டி சித்தர்!!!

பாம்பாட்டி சித்தர்!!!

பாம்பாட்டி சித்தர்:- மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து ... Read More »

திருப்பதி வரலாறு!!!

திருப்பதி வரலாறு!!!

கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர். யாகத்தை காண வந்த நாரதர், “”யாகத்தின் பலனை யாருக்குத் தரப் போகிறீர்கள்? என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு வைகுண்டம் சென்றார். திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். ... Read More »

நான் நிரந்தரமானவன்!!!

நான் நிரந்தரமானவன்!!!

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை… எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை…’ தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’. ‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே. ‘மாட்டு ... Read More »

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்!!!

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்!!!

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் : அரிக்கன் விளக்கு காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு. அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை ... Read More »

ஆய கலைகள் அறுபத்து நான்கு!!!

ஆய கலைகள் அறுபத்து நான்கு!!!

ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?  1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);  2. எழுத்தாற்றல் (லிபிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ ... Read More »

பரத நாட்டியம்!!!

பரத நாட்டியம்!!!

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதச்சித்தரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் “ப” “பாவம்” (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், “ர”, “ராகம்” (இசை) என்ற சொல்லிலிருந்தும், ... Read More »

பரம்பரை!!!

பரம்பரை!!!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் என்று சொல்வதுண்டு… பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், “தலைமுறை தலைமுறையாக” என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!.. பரன் + பரை = பரம்பரை நமக்கு அடுத்த தலைமுறைகள்: நாம் மகன் + மகள் பெயரன் + பெயர்த்தி கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த்தி எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி நமக்கு ... Read More »

ஈபிள் கோபுரம்!!!

ஈபிள் கோபுரம்!!!

ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள் – தெரிந்துகொள்வோம் :- பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப்புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில ... Read More »

தத்துவங்கள்!!!

தத்துவங்கள்!!!

தத்துவங்கள்… * ஒவ்வொருவரும் தனது வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமானால், லாபம் பெறுவது, வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது இரண்டையும் சமமாக கருத வேண்டும். * எந்த ஒரு தொழிலுக்கும் அன்பு நிறைந்த உபசாரமும், இனிமை கலந்த உரையாடலும் வெற்றியை தேடி தரும். * பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். * எந்த ஒரு செயலிலும் மன துணிச்சலுடன் முடிவு எடுப்பவர்கள் தன் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். * ஒரு ... Read More »

Scroll To Top