ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர்கவணித்தார். வாகணங்கள் செல்லும்போது அந்தபெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை. அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார். என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
கீதை சொல்லும் பாதை!!!
July 8, 2016
கீதை சொல்லும் பாதை! ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், ... Read More »
பெரிய முட்டாள்தனம்!!!
July 8, 2016
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த ஒரு வைரத்தை வழியிலே கண்டெடுத்தான்.அதன் மதிப்பு என்ன வென்று தெரியாம அதை தன் கூட இருந்த கழுதையோட காதிலே மாட்டிவிட்டான். அதைக் கண்காணிச்ச ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று,,”இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்” என்றான். பிச்சைக்காரன், ‘அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்’ என்றான். அதற்குள் வைரவியாபாரிக்குள்ள சாத்தான் பூந்துட்டு இன்னும் குறைவா வாங்குன்னு சொல்ல அவர்,’ஒரு ... Read More »
தண்டனையில் இருந்து தப்பிக்க!!!
July 7, 2016
சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார். நான் ... Read More »
தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்!!!
July 7, 2016
பூபதி ராஜன் என்ற சோழ மன்னனின் ஆட்சியில் இருந்த இடமே கீழ் தஞ்சாவூரில் உள்ள பூபதி ராஜபுரம் என்பது. அதுவே தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது. வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். இங்குள்ள வெங்கடேச பெருமான் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. பல ஆலயங்கள் ஸ்வயம்புவாகத் தோன்றியதாகக் கூறப்படும் தெய்வங்களின் சிலையை கொண்டுள்ளதாக உள்ளதினால் அவை புனித தீர்த்தங்களாக ஆகி உள்ளன. அவற்றில் காவேரியின் கிளை நதியான குடமுருட்டி நதிக்கரையில் அமைந்துள்ள, ... Read More »
வியாசர்!!!
July 7, 2016
பல கோடி மந்திரங்களில் மக்கள் படிக்கும் விதமாக வேதங்களை தொகுத்து வழங்கியவர் ஸ்ரீ வியாச பகவான். வியாச பூர்ணிமாவில் இப்பெருமானை வணங்கி நலம் பெறுவோம். நம் பாரதத்தின் மிகப்பெரிய காவியமான மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். இவர் ராமபிரானின் குலகுருவான வசிஷ்டரின் கொள்ளுப்பேரன்; பராசர முனிவரின் மகன். இவரின் மகனான சுகப்பிரம்ம முனிவர், (கிளிமூக்கு கொண்டவர்) தந்தைக்கும் மேலாகப் புகழ் பெற்றவர். வியாசர் என்பது பதவியைக் குறிக்கும் ஒரு சொல். இதற்கு, ‘வேதங்களைப் பிரிப்பவர்’ என்று பொருள். வேதங்களை ... Read More »
வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்!!!
July 7, 2016
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள். 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி ... Read More »
முகமது அலி!!!
July 7, 2016
முகமது அலி – சிறப்பு பகிர்வு சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்’க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை ... Read More »
இதுதான் பார்வை!!!
July 7, 2016
இதுதான் பார்வை…! ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன் ” ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ” ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான். ... Read More »
காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்!!!
July 7, 2016
காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்…! வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்… மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக ... Read More »