கழுகுகள் பற்றிய தகவல்கள்:- கழுகு (ஈகல்) என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். கழுகுகள் அக்சிபிட்ரிடே (அக்சிபிட்றிடாஎ) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன. இவற்ரை விட இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடாநாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும்காணப்படுகின்றன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. கழுகுகளில் மொத்தம் 74 ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
ஹிரோஷிமா- நாகசாகி பின்னணியில் என்ன நடந்தது?
August 6, 2016
1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஜப்பானிய நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டன. உடனடியாகவே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் கதிர்வீச்சி னால் பாதிக்கப்பட்டனர். அந்த இரு நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறங்களும் அடியோடு நாசமாகின. அணுகுண்டு வீச்சைப்பற்றியும் மனிதகுலம் அதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போவது முற்றிலும் வேறானது. அணுகுண்டை மக்கள் மீது வீசுவதா, வேண்டாமா என்பது பற்றி அரசியல் ... Read More »
தெரிந்துக்கொள்வோம்!!!
August 6, 2016
பொதுஅறிவு:- * நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. * சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது. * பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. * நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். * கருவில் முதன் முதலில் உருவாகும் ... Read More »
ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்!!!
August 6, 2016
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 68 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் ஜப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய ஹிரோசிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்த அணுகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹிரோசிமாவில் உள்ள அமைதிப் பூங்காவில் (Peace Memorial Park) ஒன்றுகூடியுள்ளனர். அணுகுண்டுத் ... Read More »
தத்துவ ஞானி சாக்ரடீஸ்!!!
August 5, 2016
கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, ... Read More »
ஆறு கால் ஆச்சரியம்-எறும்பு!!!
August 4, 2016
எறும்புகள் எப்போதும் ராணுவ வீரர்களைப் போல…..!!! உலகில் மிக மேன்மையான பிறப்பு எதுவென்றால் மனித இனம் என்று தானே சொல்லுவோம் ? ஆனால், மனிதர்களை விட உன்னதமான பிறப்பு எறும்புகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார்கள். அதாவது, எறும்புகள் மனிதர்களைக் கூட தந்திரமாக வென்று விடும் அளவுக்கு கூரிய அறிவு படைத்ததாம். புத்திசாலி எறும்புகளான ஃபார்மிக்கா எறும்புகளால் 1 முதல் 60வரையிலான எண்ணிக்கையை சுலபமாக எண்ண முடியுமாம். எறும்புகளின் வாழ்கை, நடை, பாவனைகள் ... Read More »
யானை சில சுவாரசியமான தகவல்கள்!!!
August 4, 2016
நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர). பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. உருசியாவை ஆண்ட இவானின் ஆட்சியில் தான் யானையின் தந்தத்தினாலான அரியனை முதல் முதல் செய்யப்பட்டது இன்றும் அது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது சரி இப்ப யானைகளின் சில சுவாரசியமான தகவல்களின் சில வற்றை பார்க்கலாம் யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் ... Read More »
மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!!!
August 4, 2016
“சயாம் மரண ரயில் பாதை” – மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, ... Read More »
ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம்!!!
August 3, 2016
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் (Friendship Day) உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் எப்போதோ வாழ்ந்த நண்பர்கள் இருவரில் ஒருவர் இறந்த பின், மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவத்தினை நினைவுபடுத்தி ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய ... Read More »
வீரம் அசல் அடையாளம் வீரன் தீரன் சின்னமலை!!!
August 3, 2016
தீரன் சின்னமலையின் முன்னோர்கள்: கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை. இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலில் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். ‘படியளந்து உண்ணும் பயிர குலம்’’என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை நன்றாக அறிய ... Read More »