பிரையன் எட்வர்ட் காக்ஸ்.. உலகின் மிகச் சிறந்த இளம் இயற்பியல், வானியல் நிபுணர்களில் ஒருவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் நடந்து வரும் ஹிக்ஸ் போஸான் என்ற அணுவின் நுண் துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஹிக்ஸ் போஸான்.. ‘கடவுளை’ 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!, ‘கடவுள்’ இருப்பது உண்மை தான்!! ஈடுபட்டுள்ள முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். பிபிசியுடன் இணைந்து இவர் உருவாக்கிய வானியல் தொடர்பான டாகுமெண்டரிகள் உலகப் புகழ் பெற்றவை. மிகக் கடினமான விண்வெளி ஆராய்ச்சிகளை மிக ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
கணவன் மனைவியிடம் எதிர்பார்பது!!!
September 8, 2016
கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி? மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. 8. அதிகாரம் பணணக் கூடாது. 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்புகூடாது. 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்தவேண்டும். 11. கணவனை சந்தேகப்படக் கூடாது. 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது. 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும். 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக்கூடாது. 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும். 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது. 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும். 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும். 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும். 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும். 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும். 25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல்ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும். 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது. 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும். 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டைஅழகாக வைத்துக் கொள்ள வேண்டும். 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில்எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும். 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது. 32. அதிகம் சினிமா / அழுமூஞ்சி தொலைகாட்சி தொடர்களைப் பார்க்கக்கூடாது. 33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? ... Read More »
மது ஏன் குடிக்க கூடாது?
September 7, 2016
மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ... Read More »
நேபாளத்தில் பழமையான சிவன் கோயில்!!!
September 7, 2016
நேபாளத்தில் 1500 வருட பழமையான சிவாலயம் தல வரலாறு : தமிழக கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது. பசுபதிநாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதை வலம் வருவதற்காக அழகான வழிப்பாதையும் அமைத்துள்ளனர். பசுபதிநாதர் கோயிலின் பின்புறமாக சென்றால் பாசுமதி நதியை தரிசனம் செய்யலாம். இறங்கி நீராடுவதற்காக படிக்கட்டுகள் வசதியாக அமைந்துள்ளன. மற்றொரு புறம் படிக்கட்டின் மேலேயே, இறந்தவர்களின் உடலை தகனம் செய்து ஓடும் ஆற்று நீரில் அஸ்தியை தள்ளிவிடுகின்றனர். ... Read More »
கொடியது, இனியது, பெரியது, அரியது!!!
September 6, 2016
ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார். ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார். அந்த நாவல் மரத்தின் ... Read More »
பழனி முருகன்சிலை!!!
September 6, 2016
பழனி முருகன்சிலை பற்றிய ஆய்வுகட்டுரை…! தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் ‘அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே ... Read More »
முருகனின் பெயற்காரணங்கள்!!!
September 6, 2016
முருகப் பெருமானின் பெயற்காரணங்கள்:- நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் “அக்னிகர்ப்பன்’ எனப்பட்டார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் “காங்கேயன்’ என்ற பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் “சரவணபவன்’ எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. பக்தர்கள் ஆறெழுத்து மந்திரமான “ஓம் சரவணபவ’ என்று ஜெபிப்பர். குழந்தைவடிவில் இருந்த ஆறுகுழந்தைகளை வளர்க்கும் பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு “கார்த்திகேயன்’ என்ற பெயர் ஏற்பட்டது. தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு பெயரகா இடும் வழக்கம் இல்லை. ... Read More »
ஓணம் பண்டிகை!!!
September 6, 2016
வந்தது திருவோணம் கேரள மக்களின் பண்டிகைகளில் மிக முக்கியப் பண்டிகை திரு ஓணம் பண்டிகை ஆகும். ஆன்மீக வரலாற்றின் அடிப்படையில் மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.கேரள மக்களின் வசந்த கால விழாவாக இது கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி மக்களை பார்க்க வரும் நாளாக ஓணம் கருதப்படுகிறது. அன்றைய தினம் பூக்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும். மகாபலி மன்னனை மக்கள் அன்புடன் வரவேற்று உபசரிக்கும் இந்த விழா கேரள மக்களின் முக்கிய பண்டிகை ஆகும். அதாவது ... Read More »
பிறந்ததின் பலன்கள்!!!
September 5, 2016
பிறந்த நட்சத்திரங்களில் பலன் 1) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்து முடிப்பான். 2) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தன் பெற்றொருக்கு நல்ல பிள்ளையாக நடப்பான். 3) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன் சாதுர்யமான பேச்சுத்திறமையைப் பெற்று இருப்பான். 4) ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான். 5) மிருகசீர்ஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் சுறுசுறுப்பு உடையவனாய் இருப்பான். 6) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் எதிலும் கண்ணியம் வாய்ந்தவனாய் இருப்பான். ... Read More »
ஒளவைப்பாட்டியின் சமயோஜிதம்!!!
September 5, 2016
ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று சோழ மன்னனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம். ஐயோ சொக்கா…! என்று தருமியைப் போலப் ... Read More »