Home » படித்ததில் பிடித்தது (page 15)

Category Archives: படித்ததில் பிடித்தது

வாழ்க்கையைப் வாழ்ந்து பாருங்கள்!

வாழ்க்கையைப் வாழ்ந்து பாருங்கள்!

சிறுவன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள்.ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள். வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள். இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள். வாழ்ந்து ... Read More »

தீர்மானமான முடிவெடுக்க மாத்தியோசியுங்கள்

தீர்மானமான முடிவெடுக்க மாத்தியோசியுங்கள்

மனப் பயிற்சி என்னும்போது, வேலையில் திறமை என்பதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும்.  நீங்கள் எவ்வளவு கடுமையாக வேலை செய்தபோதும் சிலசமயங்களில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது என்று நினைப்பதுண்டு. இவ்வாறு சிந்திப்பவர்கள் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி, அதன் காரணமாகஅவர்களின் வேலையில் திறமை என்பது மிகவும் குறைந்து விடுகிறது. இத்தகைய மனிதரால் கவலையின்றி உட்கார்ந்து வாழ்க்கையை அனுபவிப்பது எப்படிஎன்று தெரியாது.  ஒரு கோடைக்கால விடுமுறைக்கும் போக மாட்டார்.  உலகின் பலபகுதிகளில் இது ஏற்றுக் கொள்ளப்படலாம்.  விடுமுறைகளில் கூட வேலைபார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.  ஒரு நாள் விடுமுறை எடுத்தால், வேறு யாராவது அந்த வேலையைச் செய்ய நேரிடும்.  அது சரி அல்ல என்று நினைக்கிறார்கள்.  இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் விடுமுறையே எடுக்காமல் இருப்பது வியப்பைத் தராது. மற்றவர்களைப் பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.  ஆனால் அவர்களால் மட்டும் முடியவே முடியாது என்று நினைப்பார்கள்.  மெல்ல மெல்ல இத்தகைய ... Read More »

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்

இந்த இதழில் கொடுக்கப் பெற்றுள்ள எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் எமர்சன்,ஜேம்ஸ் ஆலன், சுவாமி சிவானந்தர், வேதாத்திரி மகரிஷி, உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களிலிருந்து படித்த கருத்துக்கள்.  நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்திக்கொடுக்கப் பெற்றுள்ளன. நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம். இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும். ... Read More »

ஜென் தத்துவங்கள்

ஜென் தத்துவங்கள்

குருவே! எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லையே தாங்கள் விளக்க வேண்டும். ஜென் துறவியை அணுகி கேட்டார் ஒருவர். குரு ஆரம்பித்தார். ஜென் தத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா? என்றவர் போய்சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு உட்புறம் சென்று விட்டார். சற்றுநேரம் கழித்து வந்த குரு, புரிந்ததா? என்பது போல் தலையசைத்து கேட்டார். வந்தவர் விழிக்கவே, அரசனோ, அறிஞனோ, அசடனோ, யாராக இருந்தாலும் சிறுநீர்கழிக்காமல் இருக்க முடியுமா? அதை செய்து தானே ஆக வேண்டும். எனக்கு பதில்உன்னை அனுப்ப முடியுமா? என்று கேட்டார் குரு. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். அதை எவரிடமும் தள்ளி ... Read More »

பொறுமை

பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் இன்பம் கோபம் வருவது மனித இயல்பு கோபம் வந்தால் போகும் நிம்மதி தோல்வி வருவது இயற்கையின் நியதி தோல்வி வந்தால் வேண்டும் அமைதி பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் இன்பம் உழைப்பு தருவது தேவையான உணவை உழைப்பு தந்தால் உண்டு வெற்றி ஆசை வருவது அதிசியம் இல்லை ஆசை வந்தால் விபரீத சிந்தனை பொறுமையாய் இருப்பது மிகவும் கடினம் பொறுமையாய் இருந்தால் என்றும் ... Read More »

போராடு

நடந்து நடந்து கால்கள் ஒய்ந்தது மனதில் மட்டும் தெம்பு இருந்தது கஷ்டப்பட்டு வேலை செய்தால் பின்னால் பலன் உண்டு என்று சொன்னது வாழ்க்கை ஒரு சக்கரம் அதில் நம்பிக்கை தான் அச்சாணி இன்று உணவகத்தில் சுத்தம் செய்கிறான் நாளை முதலாளி ஆகலாம் என்ற நம்பிக்கையில் உழவன் உழுது பயிர் வைக்கிறான் நாளை அது விளைச்சல் தரும் என்ற நம்பிக்கையில் குழந்தை துணையுடன் நடக்க முயற்சி செய்கிறது நாளை யார் துணையும் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கையில் நடந்து ... Read More »

கடவுள் மிகப் பெரியவன்!

கடவுள் மிகப் பெரியவன்!

உலகத்தில் பெரும்பாலான இடத்தை கடல் நீரால் சூழ வைத்தான். அப்படி செய்தவன்,அதை குடிக்கும் தண்ணீராய் படைத்திருந்தால், தண்ணீர் பிரச்சனை இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். ஆனால், அதை உப்புத் தண்ணீராய் படைத்தான். தூரத்தில் இருந்து பார்க்கும் போது, குடி நீர் என்று நம்பி மனிதர்கள்அருகில் வந்து, பின்னர் குடித்த பின்னர், அது உப்பு தண்ணீர், குடி தண்ணீர் அல்ல என்று உணரும்படி செய்கிறான். குடிதண்ணீரை எங்கு ஒளித்து வைத்தான்?? பூமிக்கு அடியில். பல அடி பூமிக்குள் தோண்டிய பின்னர் தான் அதை எடுக்க முடியும் என்றும், கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்று உணர்த்தவும் அப்படி செய்தான். வெளியில் இருக்கும் கடல் ... Read More »

சிரிக்க மறக்காதீர்கள்

* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவை எல்லாம் மாறிவிடக்கூடியவையே என்பதை உணருங்கள். வெயிலின் கடுமையை அனுபவித்தவர்கள் பின்னாளில் மழையும், குளிரும் நிறைந்த பருவம் விரைவில் வரக் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். * வாழ்க்கையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு உணர்ச்சிவயப்படும் மனிதர்களிடம் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாகநினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். * ஆண்டவன் தரும் சோதனை அனைத்தையும் அவன் தரும் விளையாடல்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒருநாளும் சிரிக்க மறக்காதீர்கள். ஆண்டவனை உங்கள் தோழனாகவே கருதி,அவனுக்கு ... Read More »

சிறப்பு

1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு. 2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு. 3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு. 4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு. 5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு. 6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு. 7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக சேமித்து வைப்பது சிறப்பு. 8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு. 9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு. 10. பிறர் நம்மீது வைத்திருக்கும் ... Read More »

படித்தது / பிடித்தது ….

நண்பனுடன் அவனது வீட்டிற்குச்சென்றிருந்தேன்.. வாசலில் அவனது பாட்டி கயிற்றுக்கட்டிலில் கிடந்தார்.. நண்பன் உள்ளே போய்விட்டான்.. நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..? பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..? நான் : நல்லாருக்கேன் பாட்டி.. இடையே எனது Android  தொலைபேசி அழைத்தது.. பேசி முடித்தேன்.. பாட்டி : என்னாய்யா அது   டிவி பொட்டி கணக்கா..? நான் : இதுவா பாட்டி.. இது புதுசா வந்துருக்குற ஃபோனு.. சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அதிலிருந்த Talking Tom-ஐ எடுத்துக்காட்டினேன்.. பாட்டி இதுகிட்ட பேசினா அத அப்புடியே ... Read More »

Scroll To Top