Home » படித்ததில் பிடித்தது (page 14)

Category Archives: படித்ததில் பிடித்தது

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்!!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்!!!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: வரலாற்று புகழ் மிக்க தஞ்சை சரசுவதி மகால் நூலகம் பன்மொழிக் களஞ்சியமாக விளங்குகிறது. தஞ்சை மாமன்னர் சரபோஜி, சத்திரம் உள்ளிட்ட புதிய நிர்வாகங்களை உருவாக்கி, அவற்றை நிர்வகித்தவர். ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில், தீர்க்கதரிசியாக திகழ்ந்தவர். உலகில் அனைவரும், படித்து பயன்பெறும் விதத்தில், தஞ்சையில் சரஸ்வதி மகால் நூலகத்தை உருவாக்கினார். உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.சோழர் காலத்து “சரஸ்வதி பண்டாரம்” ... Read More »

கவிஞர் கண்ணதாசன்!!!

கவிஞர் கண்ணதாசன்!!!

முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்குவது நமது தொன்மையான தமிழ்மொழி. காலந்தோறும் ஆற்றல் மிகு கவிஞர்களும் புலவர்களும் எழுத்தாளர்களும் தோன்றி, தமிழின் இளமைப் பொலிவை காத்து வந்துள்ளனர். அவர்களில் முக்கியமான இடம் வகித்து, வெள்ளித்திரையிலும் மெல்லிய தமிழை வாழவைக்க முடியும் என்று நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன் ‘கவியரசு’ எனப் போற்றப்பட்டவர். தமக்கெனத் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர் வாழ்வில் நேர்ந்த மாற்றங்களுக்கேற்ப, அவர் சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் நேர்ந்தன; அவற்றையொட்டி அவர் கவிதையும் ... Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன்!!!

வீரபாண்டிய கட்டபொம்மன்!!!

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண ... Read More »

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை வரலாறு!!!

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை வரலாறு!!!

பிறப்பு பற்றிய தகவல் சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு மகானாக சீரடி சாயி பாபா ... Read More »

அருணகிரியார் வரலாறு!!!

அருணகிரியார் வரலாறு!!!

அருணகிரிநாதர் என்றாலேயே அவர் அருளிச் செய்த திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத பிரபந்தங்கள் கருத்தில் வரும். அவற்றின் வழியாகப் பிரவாகிக்கும் திருமுருகன் திருவருள் கருத்தை நிறைவிக்கும். இத்தகு அருளாளரின் வரலாறு மட்டும் மிகவும் குழப்பமானதாயும், தெளிவற்றதாயும் இருக்கிறது. இதை விட அவலம் யாதென்றால் தேவையற்றதும் வீணானதுமான இந்து தத்துவார்த்தங்களுக்கு முரணான அபவாதங்களும் அருணகிரியாரின் பெயரில் திணிக்கப் பட்டிருக்கிறமையையும் பார்க்கிறோம். அருணகிரிநாதரின் காலமாக எதனைத் தீர்மானிக்கலாம் என்பது குறித்தும் பல்வேறு அறிஞர்களிடையே கருத்துப் பேதமுண்டு. ஆனால் திருப்புகழில் ... Read More »

பொன்மொழிகள் – 2

பொன்மொழிகள் – 2

மனம் ஓட்டைப் பானையில் எவ்வளவுதான் தண்ணீரை ஊற்றினாலும் அது நிறைவதில்லை. அதுபோலவே தான் விரும்பிய பொருள் கைக்குக் கிடைத்துவிட்டாலும் கூட, ஒரு போதும் மனம் திருப்தி அடைவதில்லை. உலக இன்பங்களை அடைவதில் பெரிதும் ஆவல் கொண்டுள்ள மனம் எப்போதுமே, ஒன்றும் இல்லாத காலி மனம்தான். அதற்கு எந்த இடத்திலும் அமைதி கிடைக்காது. –ஸ்ரீராமர். குரு தனது குருவை மனுஷனாக கருதுபவனுக்கு பிரார்த்தனையாலும், பக்தியாலும் என்ன பலன் உண்டாகக் கூடும். நமது குருவை மனுஷன் என்று கருதக்கூடாது. ஈஸ்வரனை ... Read More »

மாயூரம் வேதநாயகம்பிள்ளை!!!

மாயூரம் வேதநாயகம்பிள்ளை!!!

கீர்த்தனைகள், செய்யுள்கள் செய்வதிலும் புகழ்பெற்ற வரான மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நாவலுக்குரிய அடிப்படை இயல்பாகிய உரைநடையைப் பயன்படுத்தி மேற்கத்திய பாணியும் நாட்டுப்புறக் கதை சொல்லல் மரபும் இணைந்த வடிவத்தில் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். நாவல் என்பதற்குச் சில கறாரான வரையறைகளை வைத்திருப்போர் பிரதாப முதலியார் சரித்திரத்தில் நாவலுக்குரிய அம்சங்கள் குறைவு என்று கூறினாலும் இன்றைய வாசகரும் சுவாரஸ்யமாக வாசிக்கக்கூடிய அளவுக்கு வாசிப்புத்தன்மை கொண்டதாகவே அந்நாவல் விளங்குகிறது. நாவல் வாசிப்போர் சிரிக்கவே கூடாது என்று ... Read More »

சிந்தனைகள்

சிந்தனைகள்

  ·         ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினாலும், அந்த காரியத்தைச்செய்ய முடியாது என்று நீங்கள் நம்பினாலும் இரண்டுமே சரிதான்.   ·         தடைகள், சோதனைகள், பிரச்சனைகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். ·         பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும்தான் மகிழ்ச்சியே இருக்கிறது. ·         உங்களால் வெற்றி பெற முடியும் என்று உங்களை நம்ப வைக்கின்ற மெய்யான,நம்பகமான தகவல்களால் நீங்கள் உற்சாகப்பட முடியும். ·         விதி ஒரு கதவை மூடுகின்ற போது, நம்பிக்கை இன்னொரு கதவைத் திறந்து வைக்கிறது என்பது வாழ்க்கையின் ... Read More »

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்!

புத்தகங்களை ஏன் படிக்கவேண்டும்!

எதைச் செய்தாலும் ஏன்? எதற்கு? என்றும், அதனால் நமக்கு என்ன பயன் என்றும்,தெளிவுபடுத்திக் கொண்டால் அந்தச் செயலை சிறப்பாக செய்ய முடியும். செயல் செய்வதற்கும் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகும். அந்த வகையில் நூல்களை ஏன் படிக்கவேண்டும்? என்பது பற்றி சில விளக்கங்களைப் பார்ப்போம். நூல் படிப்பதறகும் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு உதாரணத்திறகு ‘ஒரு அரசன் குதிரையில் வேகமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருக்கின்றான். அப்பொழுது- மேற்கண்டதைப் படிக்கும்போது ஒரு அரசனையும், ஒரு குதிரையையும், ஒரு காட்டையும் மனம் கற்பனை செய்யும். அந்த செயல் நிகழ்வது போல் மனத்திரையில் காட்சிகள் விரியும். இவ்வாறு நிகழும்போது ... Read More »

சொந்தக்காலில் நில்லு

சொந்தக்காலில் நில்லு

* மன அமைதியைப் பாதுகாக்க விரும்பினால், உங்கள் சொந்தவேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள். * யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள். அதுவும் பிறரைத் திட்டுவதற்குச் சமமானது தான். * உயர்ந்தவன் என்ற அகந்தையோ, தாழ்ந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மையோ கொள்ள வேண்டாம். * எதை சரிப்படுத்த முடியாதோ, அதை பொறுத்துக் கொள்ளுங்கள். அதனால் மனபலம் அதிகரிக்கும். * உங்கள் தேவைக்கு அடுத்தவரை அண்டி இராதீர்கள். இயன்றவரை சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். * பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓட நினைப்பது கோழைத்தனம். முடிந்த மட்டும் திறமையை ... Read More »

Scroll To Top