ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை… கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
எண்ணங்கள் பிரம்மாக்கள் !!!
November 30, 2016
எல்லா செயல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மூல விதை எண்ணங்களே. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் யாரோ ஒருவர் எண்ணத்தில் கருவாகி பின்னால் உருவாகியது தான். ஒவ்வொருவரின் வெற்றிக்கும், தோல்விக்கும் அவரவர் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதைப் பெரும்பாலோருக்கு ஏற்க கடினமாக இருக்கலாம். நான் தோல்வி அடைய வேண்டும் என்று எண்ணுவேனா, நான் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவேனா? பின் எதனால் எனக்குத் தோல்வி வந்தது? எதனால் ... Read More »
இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள்-சாத்தியமா?
November 30, 2016
இன்று ஆட்சியிலும், பல்வேறு துறைகளிலும் முடிசூடா மன்னர்களாக இருப்பவர்கள் எல்லாம் நேற்றைய இளைஞர்கள். எனவே இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களாக மாறப் போவது சந்தேகத்திற்கு இடமில்லாதது. பின் ஏன் இந்த தலைப்புக் கேள்வி எழுந்தது என்றால் இன்று உப்புசப்பில்லாமல், ஊமைச்சனங்களாய், அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரும் நேற்றைய இளைஞர்களே. அது போல் இன்றைய இளைஞர்களில் எத்தனை பேர் மன்னர்களாவார்கள், எத்தனை பேர் அடிமைகளாக, ஆட்டுமந்தைகளாய் வாழ்ந்து மடிவார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் இந்த தலைப்புக் கேள்வி ... Read More »
சிந்திக்க வைத்த சிந்தனைகள் …
November 27, 2016
* துயரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்பத்தை யாராலும் ரசிக்க முடியாது.ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வாழ்வில் முந்திச் சென்றாலோ, வெற்றியைப் படைத்தாலோ அதற்குக் காரணம் விதியோ, அதிர்ஷ்டமோ அல்ல. அவனது உழைப்புத்தான் காரணம். * பசி, வறுமை ஆகிய கொடிய நோய்களுக்கு உழைப்பு, வியர்வை ஆகியவைகளே மிகச் சிறந்த மருந்துகள். * எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலட்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்று அர்த்தம். * வேற்றுமை பாராட்டாமல் மனித இனத்திற்கு உழைக்கும் உணர்ச்சி ... Read More »
அந்த 100 நிமிடங்கள்! ஆளுமைத் திறன் !!
November 25, 2016
வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய ‘100 MINUTES That’ll change THE WAY YOU LIVE’ புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே… எதை மறக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை! ஆனந்த் தனது ஐந்தாவது திருமண நாள் ... Read More »
கண்ணதாசனின் தத்துவங்கள்!!!
November 25, 2016
* துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் ……. * எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம் * காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை ! * பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது * கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன * ... Read More »
முத்தான சிந்தனைகள்…
November 24, 2016
01. உண்மையிலேயே சந்தோஷமானவன் எப்போதும் போராடும் நம்பிக்கையிலேயே இருக்கிறான். பெறுவதிலோ வைத்திருப்பதிலோ அல்ல தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 02. சந்தோஷம் என்பது நறுமணத் திரவியம் போன்றது. உங்கள் மீது சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது. 03. தனக்குத்தானே திருப்தியடையாத ஒருவனால் உண்மையாகவே சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலும் உங்களுக்கு தர முடியாது, அதை உங்களுக்கு நீங்களே செய்ய வேண்டும். 04. ஒரு மனிதனுக்கு என்ன இருக்கிறது என்பதைவிட ... Read More »
கடவுளுடன் ஒரு பேட்டி!!!
November 20, 2016
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன். கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். ... Read More »
மூன்று தலைகள்!
November 17, 2016
மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் ... Read More »
வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
November 15, 2016
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் ... Read More »