மார்ச் 23: இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடுவின் பிறந்த நாள் இன்று.. தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்தவர் ஜி.டி.நாயுடு. பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பண்ணாத ஷேவிங் ரேசரை ஐம்பதுகளில் ... Read More »
Category Archives: தன்னம்பிக்கை
மனதுக்கு அமைதி தரும் கீதாசாரம்!!!
February 24, 2016
மனதுக்கு அமைதி தரும் பொன்மொழிகள் – கீதாசாரம்:- * எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடககிறதோ அதுவும் நனறாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் * உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது. * பூமியைப் போல பொறுமையுடனும், வீட்டு நிலையைப் போல உறுதியுடனும் வாழ்ந்து காட்டு. * நம் நற் செயல்களும் தீய செயல்களும் விடாது நம்மைப் பின் தொடரும். * உன் துன்பத்துக்கு காரணம் எதுவாக ... Read More »
மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது!!!
February 22, 2016
தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார். அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று ... Read More »
ஊக்கம்!!!
February 19, 2016
ஊக்கம் ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே: அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும். ஒரு காசு பேணின் இரு காசு தேறும். கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான். கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் ... Read More »
பெரிய ஆதாயம்!!!
February 15, 2016
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள். 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று ... Read More »
வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க!!!
February 15, 2016
வெற்றிக்கனிகளை தொட்டுப் பறிக்க வெகுதூரமில்லை. மனித வாழ்க்கையில் பெரும்வாரியான நிகழ்வு பணத்தை தேடுதல் அல்லது அதை பாதுகாத்தல் என்ற நிகழ்ச்சி நிரலிலே முடிவடைந்துவிடுகிறது. நமது வாழ்க்கை பொருளாதார அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது, (Objectetive). பண்பு வாழ்வா? இல்லை பண வாழ்வா என்றால் பணம்தான் பிரதானம் என்பார்கள். பணத்திற்குக்கூட ஒரு கடவுளை படைத்த பண்பாளர்கள் நாம். இந்த உலகில் இரவும் பகலும் மாறி மாறி நிகழ்கின்றன. இரவு என்ற ஒரு தன்மை உண்டா? அல்லது பகல் என்ற ஒரு தன்மை ... Read More »
வெற்றி-தோல்வி!!!
February 15, 2016
வெற்றி-தோல்வி நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும். உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது. ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை! எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: “வாழ்க்கையில் சந்திக்கும் ... Read More »
விவேகானந்தரின் பொன் மொழிகள்
February 7, 2016
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” “உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!” “நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.” “பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!” “கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.” “உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் ... Read More »
சிலையும் நீயே! சிற்பியும் நீயே!!
January 27, 2016
ஒரு சிறிய விதை, தனக்குள் பெரிய விருட்சத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. விதைபோல் மனத்தையும், அறிவையும், விருட்சம் போல் திறமையும் அனைவரிடத்திலும் உள்ளது. மறைத்து வைப்பவை, மறைந்திருப்பவை அனைத்தும் இரகசியமே! இரத்தினமே! இரத்தினத்தின் திறமையை, இலட்சிய நோக்கோடு, வெளியிட்டால் சிகரத்தை உன் சிறு பையில் அடக்கி விடலாம். உன் முன்னேற்றத்திற்கு அக்கறை செலுத்தும் முதல் நபர், நிச்சயம் நீயாகாத்தான் இருக்க முடியும். உன்னை உனக்குள் தேடு. நீ யார்? எனக் கேட்டுக் கொள். மனம் சொல்லும் கேட்டுச் சொல். ... Read More »
வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!
January 3, 2016
முன்முடிவுகளை முறியடியுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!! Break Beat Prejudice, Ahead in life ..! நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டே திரிவார்.. நல்ல திறமைசாலிதான். வாழ்க்கையில் அவரால் ஒரு படி கூட முன்னேற முடியவில்லை.. காரணம் அவர் எடுக்கும் முன் முடிவுகள்(Prejudice).. புதிதாக எந்த ஒரு தொழிலையோ, வேலையையோ ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் எடுக்கும் சில முன் முடிவுகளால் அதைத் தொடங்காமலேயே இருந்துவிடுவார். நண்பர்களிடம் அடிக்கடி உதவி கேட்பார்.. ... Read More »