இந்த உலகின் மிகப் பெரிய சக்தி எது என்று கேட்டால், அறிஞர்களிலிருந்து,ஞானிகள் வரை பல்வேறு விடைகளை அளிக்கின்றனர். நதிநீர், மின்சாரம், காற்று,நெருப்பு, கணினி, இயற்கை, கடவுள் என்று விடைகள்தான் அவை. இவை அனைத்தும் பெரிய சக்திகள் என்பது மறுக்க இயலாத உண்மைதான். எனினும்,இவை அனைத்தையும்விட மிகப் பிரம்மாண்டமான சக்தி ஒன்று உள்ளது. அதுதான் ‘மன ஆற்றல்’ (Mind Power) இதை உருவாக்கி, இயக்குவதுதான்,மனிதமூளை . ஒரு மனிதன் வாழ்வதும், அழிவதும் மூளையின் இயக்கத்தினால்தான். மூளையைச் சரியாகப் பயன்படுத்தியவர்களேவாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். சரியாக பயன்படுத்தாதவர்கள்தோல்வியடைகின்றனர். அடிப்படையில் அனைத்து மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். பயிற்சியும்,முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற ... Read More »
Category Archives: தன்னம்பிக்கை
அன்பால் வெற்றி கொள்!
March 28, 2016
* எதை எதிர்பார்க்கிறாயோ, அதை கடவுளிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி நம்பிக்கைக்கு உண்டு. * சந்தேகம் என்னும் அரக்கனை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். நம்பிக்கை முன்வாசலில் நுழைந்தால், சந்தேகம் பின்வாசலில் வெளியேறி விடும். * சந்தோஷச் சிறகுகளை வெட்டி விடும் சந்தேகத்தை தூக்கி எறியுங்கள். நம்பிக்கையை நலிவடையச் செய்யும் சந்தேகம் நமக்கு வேண்டவே வேண்டாம். * தேடும் இயல்புள்ளவர்கள் தடைகள் பலவற்றை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.ஒவ்வொன்றும் ஒரு சவால் போலத் தான். இருந்தாலும் முயற்சியைத் தொடர்ந்தால்வெற்றி கிடைத்து விடும். * ஒருமுறை கோபம் வந்தால் மூன்று மாத ... Read More »
முயற்சியை தீவிரமாக்குங்கள்!!!
March 28, 2016
* தொடக்கத்தில் கறையான் சிறிதாகவே தோன்றும். சிறுகச்சிறுக பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதும் செல்லரித்துப் போகும். அதுபோல, தீய சிந்தனைகள் சிறிதாகவே தொடங்கும். ஆனால், முடிவில் ஒருவனை முற்றிலும் அழித்துவிடும். * உணவு உடனே ஜீரணமாக வேண்டும். அதுபோல ஒவ்வொரு நாளும் கேட்கின்றநல்லசிந்தனைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்அச்சிந்தனையைக் கேட்டதில் பயனில்லை. * சேற்றுநிலத்தை மெதுவாகப் பாயும் நீரோட்டத்தால் சரிசெய்ய முடியாது. வேகமாகவும், முழுமையாகவும், மூலை முடுக்கெல்லாம் அடித்துச் செல்லும் வெள்ளம் போல தண்ணீர் பாயவேண்டும். அதுபோல, ஆன்மிகத்தில் சாதனை செய்ய நினைத்தால் அரை மனதுடன் இறங்கக்கூடாது. இது ஆபத்தானது. * கிணற்றுக்கோ, ஏரிக்கோ அல்லது பரந்த சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்துவரச் சென்றாலும், நம் கையில் ... Read More »
நம்பிக்கை தத்துவங்கள்
March 28, 2016
வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது, தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது! ———————————————————————————– செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை . அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது. ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் . பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது. ———————————————————————————– வாழ்வு காலத்தில் நன்மையை செய்… தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்! ———————————————————————————– நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும். ———————————————————————————– நல்ல நண்பனை ... Read More »
எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு
March 28, 2016
* உலக நிகழ்ச்சிகள் யாவும் தற்செயலாக நடக்கின்றன என்று எண்ணுபவன் தன்னிடத்திலேயே நம்பிக்கை இல்லாதவன் என்று தான் சொல்ல வேண்டும். * ஆண்டவன் இந்த உலகத்தில் நமக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்திலும் ஒரு நியமத்தினை அல்லது ஒழுங்கினைக் காணமுடிகிறது. அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். * இந்த உலகில் உள்ள எல்லாம் இறைவனனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் கொடுப்பதை அனுபவியுங்கள். அதைத் தவிர அதுவேண்டும் இதுவேண்டும் என்று ஆவலில் அலையாதீர்கள். * பரந்த நோக்கம் மட்டுமே மனிதனை வாழவைக்கும். அதற்கு மாறாக பொறாமை,முரட்டுச்சிந்தனை, கொடிய பழக்கவழக்கங்கள் ... Read More »
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..
March 28, 2016
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லைஎன்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்,அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் ... Read More »
வெற்றி தரும் எண்ணங்கள்!!!
March 28, 2016
வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து “வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள். வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும். மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது” – வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்) “நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது ” – வில்லியம் ஜேம்ஸ் “எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது “- கவிஞன் கதே “தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது “- டாக்டர் வால்டர் ... Read More »
தோல்வியின் மூலம் எப்படி வெற்றி அடைவது?
March 28, 2016
இந்த உலகத்தில் பிறந்த மா மனிதர் அவர். அவர் கண்டுபிடித்த பல உபகரணங்களினால் இந்த மனித இனம் இன்று மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டு இருக்கிறது . ஒன்றல்ல இரண்டல்ல1093 கண்டுபிடிப்புகள். அவற்றில் சில மின்சார விளக்கு, சினிமா படம் எடுக்கும் கேமரா. இது போன்று மீதம் உள்ள கண்டுபிடிப்புகள். இவைகள் எல்லாம் ஒரே சிந்தனையில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. பல ஆயிரம் தடவைகள் தோற்று போய் துவண்டுபோகாமல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவை. அவர்தான் தி கிரேட் தாமஸ் ஆல்வா எடிசன். ஆனால் இவர் படிக்கும் காலத்தில் அசிரியர்களிடத்து இவருக்கு என்ன பெயர் தெரியுமா? ” எதையுமே கற்றுக்கொள்ள தெரியாத முட்டாள்” ... Read More »
முன்னேற்றத்தின் மூலமந்திரம்
March 28, 2016
“”நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை” என்று சிலர் புலம்புகிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது. தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு ... Read More »
மாபெரும் சபையினில் நீ நடந்தால்…
March 26, 2016
சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்! இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது. நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பானமனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்துகோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரைகுத்திவிடுகிறார்கள். மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொருதனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. எனவே, நமக்கு சமூக மரியாதை, செல்வாக்கு, மற்றவர்களின் பாராட்டுஎல்லாம் வேண்டுமென்றால் நாமே ... Read More »