Home » சிறுகதைகள் (page 9)

Category Archives: சிறுகதைகள்

குழந்தையின் அழுகை!!!

குழந்தையின் அழுகை!!!

அக்பர் சக்கரவர்த்தியைக் காக்காய் பிடிப்பதற்காக அவருடைய சில அதிகாரிகள் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய செயலைக் கண்டு முகம் சுளித்த பீர்பல், ‘இவர்கள் அக்பரின் பணிஆளர்களா, இல்லை எதற்கெடுத்தாலும் வாலையாட்டும் நாய்களா?’ என்று எண்ணினார். தன் மனத்தில் தோன்றியதை ஒருநாள் அவர்களிடம் பீர்பல் கூறிவிட, அவர்கள் வெகுண்டனர். “பீர்பல்! என்ன தைரியம் இருந்தால் எங்களை நாய்கள் என்று குறிப்பிடுவாய்! நீ எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!” என்று கோபத்தில் ... Read More »

பக்தனுக்குரிய தகுதி!!!

பக்தனுக்குரிய தகுதி!!!

ஒருசமயம், லட்சுமி தாயார் திருமாலிடம், பெருமாளே! பக்தனுக்குரிய தகுதி என்ன? என்றாள். தேவி! இறைவனுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பது தான் பக்தனின் லட்சணம். இதை நானும், சிவபெருமானுமே செய்து காட்டியுள்ளோம், என்றார். அப்படியா! அந்த சம்பவத்தை விளக்குங்களேன்,என லட்சுமி தாயார் கேட்க, அதை ஆர்வமாக எடுத்துரைத்தார் திருமால். தேவி! சலந்தரன் என்னும் அசுரன் தன் தவவலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. ... Read More »

பேராசை!!!

பேராசை!!!

ஒரு தாய் தந்தை. மிகப்பெரும்  செல்வந்தர்கள். அவர்களுக்கு ஒரே மகன். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு ஆண் மகன். அவர்களுக்கு பிறந்தான். ஏற்கனவே அந்த குடும்பத்தின் தலைவருக்கு காலம். கடந்த திருமணம் நடைபெற்றதால் இரண்டாவது பையன் பிறக்கும்போது அவர்களுக்கு வயதாகி விட்டது. ஆகவே தனது மூத்த மகனை அழைத்து. மகனே எனக்கு வயதாகிவிட்டது. உன்தம்பி ஆளாக வரும்போது நான் நிச்சயமாக உயிருடன் இருக்க மாட்டேன். ஆகவே நீதான் உனது தம்பிக்கு அவனுக்கு உரிய பங்கினை பிரித்து தரவேண்டும் என்று சொன்னார். மூத்தவன் ... Read More »

தன்னலமற்ற தொண்டு!!!

தன்னலமற்ற தொண்டு!!!

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம். இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார். சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. ... Read More »

பேராசை பெருநஷ்டம்!!!

பேராசை பெருநஷ்டம்!!!

ஒரு பிச்சைக்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தார். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில்மாட்டிவிட்டார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவரிடம் சென்று “இந்த கல்லை எனக்குக்கொடுத்தால் நான் உனக்கு பணந்தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள்” என்றார். உடனே பிச்சைக்காரர், “அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்” என்றார். அதற்கு, வைர வியாபாரி இன்னுங்குறைவாக வாங்கும் எண்ணத்துடன் “ஒருரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லையென்றால் வேண்டாம்” ... Read More »

தேடி செல்லாதே!!!

தேடி செல்லாதே!!!

இங்கிலாந்தின் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார். அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். மன்னர் அவரிடம்,”மற்றவர்கள் எல்லாம் எங்கே?”என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண் ,”அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,” என்று சொன்னார். ”அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?”என்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தப்பெண்,”மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.எனக்கு ஐந்து ... Read More »

மனத்திருப்தி!!!

மனத்திருப்தி!!!

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர் சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார். உடனே பணக்காரர் ” ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? ” இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு ... Read More »

நம் நலன் நினைப்பவர்கள்!!!

நம் நலன் நினைப்பவர்கள்!!!

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது. பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.. எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை ... Read More »

பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???

பாஞ்சாலி ஏன் சிரித்தாள்???

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக், காத்திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன்பு, அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க, பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள். அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த ... Read More »

அனுபவம் – 2

அனுபவம் – 2

ஒரு தீவிர பக்தனுக்கு அவன் வேண்டுகோளின்படி இறைவன் கருணை புரிந்து காட்சி அளித்தான்….. இருவருக்கும் கீழ்கண்டவாறு உரையாடல் நடந்தது …………. பக்தன்: பிறப்பின் வருவது யாதென கேட்டான் இறைவன் : பிறந்து பாரேன இறைவன் பணித்தான் ப : படிப்பெனச் சொல்வது யாதென கேட்டான் இ : படித்துப் பாரேன இறைவன் பணித்தான் அறிவெனச் சொல்வது யாதென கேட்டான் அறிந்து பாரேன இறைவன் பணித்தான் அன்பெனப் படுவது என்ன என்று கேட்டான் பிறருக்கு அளித்துப் பாரேன இறைவன் ... Read More »

Scroll To Top