Home » சிறுகதைகள் (page 8)

Category Archives: சிறுகதைகள்

ஒன்பது திருடர்கள்!!!

ஒன்பது திருடர்கள்!!!

ஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர். கிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த ... Read More »

சரியான வேலைக்காரன்!!!

சரியான வேலைக்காரன்!!!

ஒரு வியாபாரியும், அவரது வேலைக்காரனும் அன்றைய வியாபாரத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இரவு நேரமாகி விட்டதால், ஒரு ஊரில் தங்கி மறுநாள் செல்ல முடிவெடுத்தனர். தங்கும் விடுதிகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு மடத்தில் வந்து படுத்தனர். வியாபாரி மண்டபத்தின் உள்ளேயும், வேலைக்காரன் திண்ணையிலுமாகப் படுத்தனர். அப்போது, சில திருடர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவன், இருட்டில் படுத்திருந்த வேலைக்காரனின் காலில் தெரியாமல் மிதித்து விட்டான். அவன் அலறியடித்து எழுந்தான். ஏய், காலை ... Read More »

கஞ்ச வியாபாரி!!!

கஞ்ச வியாபாரி!!!

முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு ... Read More »

பூனையும் பாலும்!!!

பூனையும் பாலும்!!!

பூனையும் பாலும் ஒரு ஊரில் இரண்டு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புக்கு இலக்க‍ணமாக திகழும் பூனைகள். அவ்வூர் மக்களும் இந்த பூனைகளுக்கு அன்றாடம் பாலும் சோறும் இட்டு அன்போடு வளர்த்து வந்தார்கள். மேலும் பழைய வீடுகள் என்பதால், அங்கு எலிகளும் அதிகம் இருக்கும். அதனால், அந்த எலிகளை வேட்டையாடி அவற்றை உண்டும் வந்தன. திடீரென் அவ்வூரில் ஏற்பட்ட‍ பஞ்சத்தின் காரணமாக ஊர்மக்க‍ள், பிழைப்புக்காக அந்த ஊரைவிட்டு வேறோர் ஊருக்கு செனறு விட்ட‍னர். அதுவரை எந்தவிதமான தடங்களும் இல்லாமல் ... Read More »

நல்லவருடன் பழகுங்க!!!

நல்லவருடன் பழகுங்க!!!

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார். கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர். பக்தி மிக்க அவர் பக்தி பாடல்களையும் அவ்வப்போது பாடுவார். அந்தப்பாடல்களைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும். மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார். அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார். அறிமுகமே ... Read More »

யார் வள்ளல்?

யார் வள்ளல்?

யார் வள்ளல்? முன்னொரு காலத்தில் பொதிகை மலையை நன்மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. கரூர் அரசன் மணிமாறன் இதைக் கேள்விப்பட்டான். “சிறிய பகுதியை ஆளும் நன்மாறனுக்கு இவ்வளவு பேரா? நான் அவனைவிட வாரி வழங்கும் பேரும் புகழும் பெற வேண்டும்,’ என்று நினைத்தான். தன் பிறந்த நாளன்று மக்களுக்கு வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் ... Read More »

கழுதையிடமும் கற்கலாம்!!!

கழுதையிடமும் கற்கலாம்!!!

கழுதையிடமும் கற்கலாம் – சுயமுன்னேற்றக் கட்டுரை டெரெக்லின் என்ற தாவோ அறிஞர் ஒரு கழுதையின் கதையைக் கூறியதை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பண்டைய சீன தேசத்தில் ஒரு கிராமத்தில் சக்கரவர்த்திக்குக் கோயில் எழுப்ப தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியின் கவர்னர் மிகக் குறுகிய காலத்தில் கோயிலைக் கட்டி முடிக்க கிராமத்தினருக்குக் கட்டளை இட்டார். கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறு ஒன்று இருந்தது. எனவே கட்டிடப் பணி துவங்கும் முன் அக்கிணறை மூட வேண்டி வந்தது. ... Read More »

முன் வைத்த காலை!!!

முன் வைத்த காலை!!!

முன்னே வச்ச காலை முன்னும் பின்னும் வைக்கலாமா? ஒரு செயலில் இறங்கி விட்டால் “இறுதி வரைக்கும் வந்து பார்’ என்ற சவாலுடன் செயலில் இறங்கி விடவேண்டும். ஒரு கதை கேளுங்க! மன்னன் ஒருவன் தன் படையினருடன், தனக்கு தொந்தரவு தந்து கொண்டிருந்த எதிரி நாட்டுக்கு கப்பல்களில் புறப்பட்டான். எதிரிநாடு பெரிய தீவு. படைபலமும் மிக அதிகம். மன்னனுடன் சென்ற வீரர்களுக்கு தங்கள் வெற்றி குதிரைக்கொம்பே என்ற எண்ணம் ஏற்பட்டது. எப்படியாவது, இதை மன்னனிடம் எடுத்துச்சொல்லி நாடு திரும்பி ... Read More »

நல்லவர்களுக்கு நல்லது தான் நடக்கும்!!!

நல்லவர்களுக்கு நல்லது தான் நடக்கும்!!!

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன். கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர். அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண ... Read More »

பொறுமைக்கு கிடைத்த பரிசு!!!

பொறுமைக்கு கிடைத்த பரிசு!!!

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினார்கள். நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர். ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம். சிறுவர்கள், குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள். இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் ... Read More »

Scroll To Top