ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது.. . அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது.. அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்… . அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் .. . சிகரெட் குடித்தால்..! . 1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான் . 2 உங்களுக்கு முதுமையே வராது . 3 பெண் குழந்தை பிறக்காது . இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்…. ... Read More »
Category Archives: சிறுகதைகள்
பொறுப்பா இருந்தாலும்!!!
February 21, 2017
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்குவந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் ... Read More »
நரகம்!!!
February 20, 2017
150 வயதை தாண்டிய ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான். ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தார். முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் “இங்கே என்ன பண்ணுவார்கள் ? ‘ என்று கேட்டார். அதற்கு அவன் “இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத ... Read More »
மூன்று மந்திரம்!!!
February 20, 2017
இந்த “சாமி” யார், எந்த ஊர், என்ன பேர் என்று அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது. பல வருடங்களுக்கு முன்னால், சின்னக்குப்பம் கிராமத்துக்கு வந்தவர்,ஊருக்கு வெளியே குடிசை போட்டு தனியாக வசிக்கிறார். ஊருக்குள் அவராக வரமாட்டார். விவசாய வேலைகளுக்கு கிராம மக்கள் அவரை வேலைக்கு கூப்பிடுவர். ஆனால், செய்த வேலைக்காக பணமோ பொருளோ வாங்கிக் கொள்ளமாட்டார். உணவு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார். எனவே,பெயரில்லாத அவரை “சாமி’ என்று பெயரிட்டு அழைக்கவும் தொடங்கினர். “இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான்” ... Read More »
சும்மா இருக்கிற சங்கை!!!
February 19, 2017
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் – என்பது ஏன் தெரியுமா? சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டான் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் சொல்வதுண்டு. அமைதியாக இருக்கும் ஒரு விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விவகாரத்தை உண்டு பண்ணுகிறார்கள் பாருங்கள் அவர்களுக்கு இந்த உதாரணம் பொருந்தும். ஆனால் அந்தப் பழமொழி உண்டான விதம் எப்படி என்பதை மகாபாரதத்திலிருந்து சில நிகழ்ச்சி .. ஸ்ரீகிருஷ்ணனிடம் எப்போதும் ஐந்து பொருள்கள் இருக்கும். அவை என்னென்ன? சங்கு, சக்கரம், வில், வாள், ... Read More »
கண்ணாடிச் செங்கல்!!!
February 18, 2017
சைனாவின் சூஷுவானில் பிறந்த சா’ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா’னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார். ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, “எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா’ன் தியானத்தினைப் ... Read More »
உருவ வழிபாடு!!!
February 17, 2017
ஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார். யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா’ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான். ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், “உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) ... Read More »
பதிலா உயிரா!!!
February 16, 2017
ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா’ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்தார். “உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்” என்றவர். “கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, ‘மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?’ என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் ... Read More »
ஆட்டிப் படைத்த முல்லா!!!
February 15, 2017
ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அறுசுவை விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் அந்த ஊர் பிரமுகர்கள் பலரும் சாப்பிட்டவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். விருந்துண்ணுவோர் கூட்டத்திலே முல்லாவும் இருந்தார். பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பொய்யும் புனை சுருட்டுமான நிகழ்ச்சிகளை தங்களுக்கு ஆதாரமாகக் கூறி தாங்கள் ஏதோ பெரிய சாகசக்காரர்கள் என்பது போல் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தற்பெருமைத் தம்பட்டம் முல்லாவுக்கு விரசமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது. அவர்களுக்குத் தக்க பாடம் ஒன்று கற்பிக்க வேண்டும் என்று ... Read More »
ஆள் பார்த்து பேசணும்!!!
February 14, 2017
ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும்.மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார். ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை. “”யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்,” என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான். கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். அவனால், அவரை தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. “”ஐயா! சற்றுப் பொறுங்கள். ... Read More »