ந ளன் கிளம்பி விட்டான். இரண்டடி நடந்திருப்பான், மனம் கேட்கவில்லை. மீண்டும் வந்து தமயந்தியை எட்டிப்பார்த்தான். ஏதுமறியா, அந்த பிஞ்சு இதயத்திற்கு சொந்தக்காரியான அவள், பச்சைமழலை போல், பால் மாறா முகத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாள். இவளை விட்டா பிரிவது? வேண்டாம்.. இங்கேயே இருந்து விடலாம்… என்று எண்ணியவனின் மனதில் கலியாகிய சனீஸ்வரன் மீண்டும் வந்து விளையாடினான். போடா போ, இவள் படும் பாட்டை சகிக்கும் சக்தி உனக்கில்லை, புறப்படு, என்று விரட்டினான்.ஆம்..கிளம்ப வேண்டியது தான்! அவள் படும்பாட்டை ... Read More »
Category Archives: சிறுகதைகள்
நளதமயந்தி பகுதி-18
February 23, 2015
பின்பு தன் கணவனிடம், மகாராஜா! நமக்கு துன்பம் வந்தால் தெய்வத்திடம் முறையிடலாம். ஆனால், தெய்வமே நமக்கு துன்பம் தர முன்வந்துள்ள போது, அதை யாரிடத்தில் முறையிட முடியும்! ஆம்..இது நம் விதிப்பலன். நடப்பது நடக்கட்டும். வாருங்கள். இந்த இடத்தை விட்டு கிளம்புவோம், என்றாள். நளனும் கிளம்பினான். காட்டுப்பாதையில் அவர்கள் நீண்டதூரம் சென்றனர். மாலை நேரமானது. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. அந்தக் கரிய இருளில் தன் மனைவியுடன் நடந்தான் நிடதநாட்டு மன்னன். தமயந்தியோ தடுமாறினாள். பேய்களுக்கு கூட ... Read More »
நளதமயந்தி பகுதி-17
February 23, 2015
பெண்களைஎந்தச் சூழலிலும் தங்கத்தின் மீதான ஆசை விடாது போலும்! கணவனுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையிலும், அந்த தங்கநிற பறவை மீது தமயந்தியின் கண்பட்டது. ராமபிரான் காட்டுக்குச் சென்ற போது, அந்தச் சிரமமான வாழ்க்கை நிலையிலும், தன் கண்ணில் பட்ட தங்க நிற மானைப் பிடித்துத் தரச்சொன்னாளே! சீதாதேவி…அது போல, தமயந்தியும் தன் கணவனிடம் குழைந்தாள்.அன்பரே! அந்தப் பொன்னிற பறவையைப் பார்த்தீர்களா! எவ்வளவு அழகாக இருக்கிறது! அதை எனக்குப் பிடித்துத் தாருங்களேன், என்றாள் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும்.மங்கையரின் கடைக்கண் ... Read More »
நளதமயந்தி பகுதி-16
February 23, 2015
தமயந்தி நளனிடம், தாங்கள் செங்கோல் ஏந்தி முறை தவறாத ஆட்சி நடத்தினீர்கள். அப்படிப்பட்ட தர்மவானான உங்களிடம் ஒரு யோசனை சொல்கிறேன். இதையாவது, தயவு செய்து கேளுங்கள். நாம் காட்டு வழியில் வரும் போது, நம்முடன் ஒரு பிராமணர் சேர்ந்து கொண்டார் அல்லவா! அவருடன் நம் குழந்தைகளை அனுப்பி குண்டினபுரத்திலுள்ள எங்கள் தந்தை வீட்டில் சேர்க்கச் சொல்லிவிடுவோம். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பது தானே உங்கள் நோக்கம்! அது நிறைவேறி விடும். நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்களைப் பார்க்காமல் என்னால் ... Read More »
நளதமயந்தி பகுதி-15
February 23, 2015
அவள் தன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.அன்பரே! நீங்களா இப்படி சொன்னீர்கள்! காதல் வயப்பட்டு நாம் கிடந்த காலத்தில், கடைசி வரை பிரியமாட்டோம் என உறுதியளித்தீர்களே! அது காதல் மோகத்தில் சொன்னது தானா? என் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொல்கிறேன், கேளுங்கள். ஒரு பெண் குழந்தைகளை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவள் தன் கணவனை இழந்துவிட்டால் பாதுகாப்பற்ற நிலையை அடைவாள். அவளது கற்புக்கு களங்கம் கற்பிக்கப்படும், அல்லது பாதுகாப்பற்ற ... Read More »
நளதமயந்தி பகுதி-14
February 23, 2015
இன்றிரவு தங்கிப் போகலாமே, என்று தமயந்தி சொல்லவில்லை, ஆனால், அவளது பார்வையின் பொருள் நளனுக்கு அவ்வாறு இருந்ததால், அவனும் மக்களுடன் தங்கலாமே என எண்ணி, அவர்களிடம் ஒப்புதல் அளித்தான். நளனின் பின்னாலேயே வந்த ஒற்றர்கள் மக்களும், நளனும் இவ்வாறு பேசுவதைக் கேட்டு உடனடியாக புட்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். சற்றுநேரத்தில் முரசு ஒலித்தது. நிடதநாட்டு மக்களே! நளன் இந்த நாட்டின் ஆட்சி உரிமையை இழந்து விட்டார். அவருக்கு யாராவது அடைக்கலம் அளித்தாலோ, அவருடன் பேசினாலோ அந்த இடத்திலேயே கொல்லப்படுவார்கள். ... Read More »
நளதமயந்தி பகுதி-13
February 23, 2015
சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து விட்டான் நளன்.நளனின் எல்லாப் பொருட்களும் போய்விட்டன. ஆம்…நாடே போய்விட்டது. அசையாப் பொருள்களுடன் அரண்மனையில் அசைந்தாடிய பெண்களும் பறி போனார்கள். இனி அவர்கள் புட்கரனின் பணியாட்களாக இருப்பார்கள். விளையாட என்ன இருக்கிறது? நளன் திகைத்துப் போய் எழுந்தான். நளனே! ஏன் எழுந்திருக்கிறாய்? கையில் வெண்ணெய் இருக்கிறது. ... Read More »
நளதமயந்தி பகுதி-12
February 23, 2015
விதி தான் நளனைப் போட்டுப் பார்க்க வேண்டுமென முடிவு செய்து விட்டதே! அதிலும் சனீஸ்வரர் ரூபத்தில் அல்லவா வந்துள்ளது! இந்த சனீஸ்வரர் போல் உத்தமமான கிரகம் உலகில் இல்லை. அதனால் தான் அதற்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்து,கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். எல்லா கிரகங்களும் நவக்கிரக மண்டபத்தில் இருந்தாலும், சனீஸ்வரருக்கு மட்டுமே கோயில்களில் தனி சன்னதி இருக்கிறது.குரு இருக்கிறாரே என சிலர் கேட்கலாம். அவர் குரு அல்ல. சனகாதி முனிவர்களுக்கும், பார்வதிதேவிக்கும் உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தியையே குரு ... Read More »
நளதமயந்தி பகுதி-11
February 23, 2015
பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரதுமுதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். புதுமணத்தம்பதிகளைசிவபார்வதி கைலாயத்துக்கு விருந்துக்கு அழைத்தனர். பெருமாள் புறப்பட்டு விட்டார். பூமாதேவி வர மறுத்துவிட்டாள். அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் அசலா (இருந்த இடத்தை விட்டு நகராதவள்) என்பதை தாங்கள் அறிவீர்களா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். மக்கள் என்னாவார்கள்? என் பிள்ளைகளை நானே ... Read More »
நளதமயந்தி பகுதி-10
February 23, 2015
புட்கரா! சூதாட்டம் மன்னர்களுக்கே உரித்தான இனிய பொழுதுபோக்கு. ஆம்…யாராவது ஒருவருக்கு…ஏனெனில், இதில் ஒருவர் தன் பொருளை இழந்து விடுவாரே! நளனைப் பற்றுவதற்கு நான் மிகுந்த சிரமப்பட்டேன். இப்போது, பற்றி விட்டேன். இனி அவனை என் இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பேன். அவனுடைய புத்தியை கெடுக்க வேண்டியது என் பொறுப்பு. நீ நளனுடன் சூதாடு. வெற்றி உன் பக்கமாக இருக்கும்படி செய்து விடுகிறேன், என்றார் சனீஸ்வரர். புட்கரனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. சூதாட்டத்தில் ஒருவேளை தனக்கும் தோல்வி வரக்கூடும் என்ற ... Read More »