Home » சிறுகதைகள் (page 61)

Category Archives: சிறுகதைகள்

நம்பிக்கையை விடவே விடாதே!

நம்பிக்கையை விடவே விடாதே!

ஒரு வேடனுக்கு யானை வளர்ப்பது என்றால் கொள்ளை ஆசை. அவன் பல இடங்களில் குழிவெட்டி உள்ளே விழும் குட்டி யானைகளைப் பிடித்து, இரும்புச்சங்கிலியில் பிணைத்து, பெரிய மரங்களில் கட்டி விடுவான். அவை பிளிறிப் பார்க்கும், தப்பிக்க முயற்சிக்கும். ஆனால், காலப்போக்கில் அவ்வாறு முயற்சிப்பதில் எந்த பலனும் இல்லையென நம்பிக்கையை இழந்து விடும். மேலும், அவற்றுக்கு அவ்வப்போது சாப்பாடு வந்து விடும். அதை விரும்பி சாப்பிடும் குட்டிகள் கொஞ்சநாளில் சமாதானமாகி விடும். வளர்ந்து பெரிதாகி விடவும் செய்யும். இதன்பிறகு, வேடன் ... Read More »

தரை துடைக்கும் வேலை

தரை துடைக்கும் வேலை

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. ... Read More »

நம்மால் முடியும்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு ” ஏன் சோகமாக இருக்கிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு இவர் ” எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது ... Read More »

வருவது வரட்டும் சமாளிப்போம்

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. ... Read More »

வாழ்க்கை

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள். ”தாத்தா… கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன். ”அடே பையா… வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!” சிரித்தார் தாத்தா. ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது ... Read More »

சமயோசிதம்

சமயோசிதம்

புகை வண்டி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.வெளியே கையை நீட்டியபடி உட்கார்ந்திருந்த ஒருவரின் விலை உயர்ந்த கைக் கடிகாரம் கழன்று விழுந்து விட்டது.அவர் பதறித் துடித்து படாதபாடு பட்டார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் எதிர் சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர்.அவர் எந்த வித சலனமுமின்றி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த ரயில் நிலையம் வந்தது. அவரைப் பார்க்க நிறைய அதிகாரிகள் வந்தனர். அப்போது அவர் ஒரு அதிகாரியிடம் சொன்னார், ”இந்த இடத்திலிருந்து ... Read More »

யார் மாற வேண்டும்?

யார் மாற வேண்டும்?

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.  ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.  அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். “ஐயா நாம் போகின்ற பாதையில் ... Read More »

ஒரு தாவோ கதை

ஒரு தாவோ கதை

பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே ஒரு நாற்காலியும் வைத்திருப்பான். தாகம் எடுக்கும் போதெல்லாம் எழுந்து முன்னால் ... Read More »

ஒருவன் மகானிடம் சென்று

ஒருவன் ஒரு மகானிடம் சென்று, … “ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?” என்று கேட்டான். “தாராளாமாக சாப்பிடலாம்” என்றார் மகான். “தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன். “குடிக்கலாம்” என்றார் மகான். “சிறிது புளிப்புப் பொருள்…” என்று இழுத்தான் அவன். “தவறேதும் இல்லை…சாப்பிடலாம்” என்றார் மகான். “இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்… இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகிறது… அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?” என்றான் அவன். உடனே மகான் அவனைப் பார்த்து கேட்டார், ... Read More »

ஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் ! – புதிர் கதை

பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை நேரம்.அரசனும் அரசியும் உறங்கும் கட்டில் மெத்தையை அவர்களது வேலைக்காரன் சரி செய்ய வந்தான்..மெத்தை விரிப்புகளை தட்டிப் போட்டபின்பு, முல்லை மல்லிகை மலர்களை மெத்தையில் பரப்பினான்.பிறகு இனிய மணம் வீசும் ஊதுபத்திகளை ஏற்றிவைத்தான்.வேலையை சரியாக முடித்துவிட்டோமா என்று மெத்தையை ஒருதரம் சரிபார்த்தான். மெத்தையின் அழகும், அந்த அறையில் இருந்த இனிய நறுமணமும் அவனது சிந்தையையை மயக்கியது.’அரசனும் ... Read More »

Scroll To Top