நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன். காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. “”இது என்ன வாழ்க்கை! காலை முதல் மாலை வரை கண்மூடிக்கொண்டே இருப்பது! இரவானாலும் தூங்குவது! அதிகாலையில் கொட்டும் பனியில் குளத்திற்குப் போய் நீராடுவது! பூ பறிப்பது! சுவாமியை வணங்குவது! போதாக்குறைக்கு தனிமை வேறு! பேச்சுத்துணைக்கு ஆளில்லையே! ஏன் இங்கு வந்தோம்! இது வேண்டாமென்று ஊருக்குத் திரும்பிப் போனால் “இவ்வளவுதானா உன் வைராக்கியம்?’ என ஊரே கேலி ... Read More »
Category Archives: சிறுகதைகள்
இல்லற இன்பம்
December 26, 2015
ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை! எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு விழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”. கபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்?”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று ... Read More »
குட்டிக்கதை
December 26, 2015
கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார். கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார். தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் ... Read More »
முன்னேறு மேலே மேலே
December 26, 2015
மனிதன் எது வரை முன்னேறலாம் என்ற கேள்வி எழுந்தால் அதற்கு எல்லை எதையும் இயற்கை வகுக்கவில்லை. முயற்சிக்க முயற்சிக்க நன்மை தான். ஒரு விறகுவெட்டி காட்டுக்குப் போனான். எதிரே ஒரு துறவி வந்தார். “”மகனே! முன்னேறிச் செல்,” என்று சொல்லிவிட்டு, வேகமாகச் சென்று விட்டார். துறவியின் வார்த்தை விறகுவெட்டியின் மனதில் பதிந்தது. அவன் வழக்கமாக செல்லும் தூரத்தை விட மேலும் சில மைல்களைக் கடந்தான். அங்கே சந்தனமரங்கள் இருந்தன. அவற்றை வெட்டி விற்று பணக்காரன் ஆனான். துறவியின் ... Read More »
தகுதிக்கேற்ப செயல்படுங்கள்
December 26, 2015
ஒரு காட்டுப்பன்றி தற்பெருமை மிக்கதாக இருந்தது. காட்டிலுள்ள மரங்களைப் பார்த்த அந்தப் பன்றி, “”இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக இருக்கின்றன. இவற்றைப் போல என்னால் வளர்வதென்பது முடியாத காரியம். ஆனால், இந்த மரங்களை என்னளவுக்கு குறுக்கி விட்டால் என்ன என்று கணக்குப் போட்டது. ஒவ்வொரு மரத்தின் மீதும் தாவிக்குதித்து மேலே ஏறி, கிளைகளின் மீது நின்று அவற்றை ஒடித்துத்தள்ள முயன்றது. கிளைகள் வளைந்ததே தவிர ஒடியவில்லை. பன்றிக்கோ கடும் கோபம். இந்த மரங்கள் இங்கே நின்றால் தானே ... Read More »
உழைச்சாதான் நிம்மதி
December 26, 2015
மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக் காண கிளம்பினர். அன்று யாரும் வேலைக்குச் செல்லவில்லை. தங்களுக்கு, மன்னர் ஏதாவது பணம் கொடுப்பார் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. உழைப்பில் நம்பிக்கை கொண்ட ஒரு மூதாட்டி மட்டும், நார்க்கூடை முடைந்து கொண்டிருந்தாள். அப்போது ஒருவன் அவள் வீட்டைக் கடந்து சென்றான். “”பாட்டி, ராஜா வாராருன்னு அடுத்த ஊரே கோலாகலமா கூடி நிக்குதே! நீ மட்டும் ஏன் போகலை?” என்றான். “”உழைச்சா தான் என் மனசுக்கு மகிழ்ச்சி. வேலையை பாரமா நினைக்கிற ... Read More »
திராட்சை இனிப்பாக இருக்கிறது
December 26, 2015
ஜென்… ஜென் தத்துவங்களை கடைபிடிக்க எண்ணி பல முறை தோற்றிருக்கிறேன். அதை யாராலும் கடைபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஜென் தத்துவம் உன் வாழ்க்கையை இப்போது இந்த நொடி இந்த விநாடி வாழ்ந்து பார் என்பது அப்படியென்றால் சாப்பிடும் போது சாப்பிடு, படிக்கும் போது படி. சாப்பிடும் போது படிக்காதே என்பது தானே. The Zen And The Art Of Motorcycle Reparing என்று ஜென் தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகம் கிடைத்தால் படித்து பாருங்கள். ... Read More »
இப்போதே நல்ல நேரம் தான்!
December 26, 2015
வாழ்க்கையில் நேரம் மிக முக்கியமானது. ஒன்றைச் செய்வதாக வாக்களித்து விட்டு, தாமதித்து செய்தால் உயிர் கூட போய்விடும் வாய்ப்புண்டு. தசரதருடன் கைகேயி போர் ஒன்றுக்குச் சென்றாள். அந்தப் போரில் அவள் பல வகையிலும் அவருக்கு உதவினாள். தன் அன்பு மனைவியின் செயல்பாட்டினால் வெற்றி பெற்ற தசரதர், மகிழ்ச்சியில்,””கண்ணே! நீ என்னிடம் இரண்டு வரங்கள் கேட்கலாம். எதுவானாலும் தருவேன்,” என்றார். அவள், “”இப்போது வேண்டாம்…பின்னால் பார்க்கலாம்,” என்றாள். “பின்னால்’ …”பார்க்கலாம்’ என்ற வார்த்தைகள் மனித வாழ்வுக்கு உகந்தவை அல்ல. ... Read More »
திருடாதே!
December 26, 2015
திருடாதே! ரத்னாகரர் என்பவர் திருடி பொருள் சேர்த்தார். ஒருமுறை காட்டு வழியே வந்த ஏழு ரிஷிகளை மறித்தார். அவர்களில் ஒரு ரிஷி””அப்பனே! பொருள் வேண்டியா எங்களைத் தடுத்தாய். உணவு கூட அன்றாடம் கிடைத்தால் தான் உண்போம். இல்லாவிட்டால் பட்டினி கிடப்போம். எங்களிடம் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது? அது சரி…எதற்காக திருடுகிறாய்?” என்று கேட்டார். “”சுவாமி! என் குடும்பம் பெரியது. அவர்களுக்கு உணவிடவே திருடுகிறேன்,” என்றார் ரத்னாகரர். “”குடும்பம் பெரிது என்பதற்காக திருடுவது பாவமல்லவா! உன்னிடம் ... Read More »
வாழ்க்கை
December 25, 2015
ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை. ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று ... Read More »