Home » சிறுகதைகள் (page 6)

Category Archives: சிறுகதைகள்

அவள் ஒரு அழகு தேவதை!!!

அவள் ஒரு அழகு தேவதை!!!

சேவல் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்த வசந்தன் “அதற்குள்ளே விடிந்து விட்டதா” என்றவாறு கடிகாரத்தைப் பார்த்தவன் அதிகாலை 2.30 என்பதை பார்த்த்தும் “கோதாரி விழுந்தது….நேரம்கெட்ட நேரத்தில கூவித்தொலைக்குதே இந்த சேவல்” என கடிந்துகொண்டே மறுபக்கம் திரும்பிப் படுத்தான். ஆனால் நித்திரை என்னமோ எட்டாக் கனியாகவே இருந்தது. ‘அவள் யாராக இருக்கும்? அவள் முகத்தில் என்னை வெகு நாட்களாக தெரிந்த உணர்வுகள் இருந்துச்சே… ஆனா இதுக்கு முன் இவளை பார்த்ததாக ஞாபகம் இல்லை…. அப்பிடி இருக்க எப்பிடி….? ... Read More »

அவரவர் கடமை!!!

அவரவர் கடமை!!!

வேடிக்கையான ஜென் கதை ஒன்று உண்டு. மிகப் பெரும் பணத்துடனும்அதிகாரத்துடனும் இருந்த ஒருவருக்கு, அனைத்திலும் பற்று குறைந்து கொண்டே வந்தது. மனம் தத்துவ சிந்தனைகளில் ஈடுபட்டது. தனது சிந்தனைகளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பியவர், ”எங்கே போய் படிப்பது… யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது…?” என்றெல்லாம் பலரிடமும் விசாரித்தார். ஒரு ஜென் குருவைப் பற்றி எல்லோரும் குறிப்பிட்டார்கள். ”ஆழ்ந்த தத்துவஞானம் உடையவர்; அவரிடம் பாடம் கற்றால், மனம் தெளிவாகும்… வாழ்வு எளிதாகும்” என்றெல்லாம் சொன்னார்கள். மிக்க ஆவலுடன் அவரைத் ... Read More »

என்னுயிர் நீதானே!!!

என்னுயிர் நீதானே!!!

”சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!” என்றான் அவன். சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, ‘சொல் குழந்தாய்!’ என்பது போல் பார்த் தார். ”என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க ... Read More »

உண்மை விளம்பி!!!

உண்மை விளம்பி!!!

சிந்து நதி தீரத்தில் சச்சிதானந்தா என்ற யோகி, ஒரு ஆஸ்ரமத்தை ஸ்தாபித்து தன் சிஷ்யர்களோடு வாழ்ந்து வந்தார். அவர் உண்மைதான் தேசத்தை முன்னேறச் செய்யும் என்றக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் மக்கள் அவரை, “யோகி உண்மை விளம்பி’ என வர்ணித்தனர். “மெய் உயர்வைத் தரும்; பொய் தாழ்வைத் தரும்’ என்பதுதான் அவரின் தாரக மந்திரம். ஆகவே, அதையே உபதேசித்தும் வந்தார். ஒருசமயம் நதி ஓரத்தில்  தன் சிஷ்யர்களோடு செல்லும்போது, ஒருவன் தான் பிடித்த ஆமையைக் கொல்ல அதன் முதுகின் ... Read More »

நளதமயந்தி பகுதி – 4

நளதமயந்தி பகுதி – 4

சூதாட்ட வெறி கண்ணை மறைக்க, தன்னிடம் இதுவரை பணிசெய்த பெண்கள் என்று கூட பாராமல், அவர்களையும் வைத்து சூதாட முன்வந்தான் நளன். வழக்கம் போல் பகடை உருள, அவர்களையும் புட்கரனிடம் இழந்து விட்டான் நளன்.நளனின் எல்லாப் பொருட்களும் போய்விட்டன. ஆம்…நாடே போய்விட்டது. அசையாப் பொருள்களுடன் அரண்மனையில் அசைந்தாடிய பெண்களும் பறி போனார்கள். இனி அவர்கள் புட்கரனின் பணியாட்களாக இருப்பார்கள். விளையாட என்ன இருக்கிறது? நளன் திகைத்துப் போய் எழுந்தான். நளனே! ஏன் எழுந்திருக்கிறாய்? கையில் வெண்ணெய் இருக்கிறது. ... Read More »

நளதமயந்தி பகுதி – 3

நளதமயந்தி பகுதி – 3

வழியில், அவர்கள் ஒரு சோலையில் இளைப்பாறினர்.அந்தச் சோலையில் ஒரு அழகிய குளம் இருந்தது. அதில் இறங்கி நள தமயந்தி தம்பதியர் நீராடி மகிழ்ந்தனர். கரையேறிய தமயந்தியிடம் நளன்,  புன்னகைப் புயலே! அழகே வடிவாய் பேசும் பைங்கிளியே! இந்தச் சோலை எப்படியிருக்கிறது தெரியுமா? எங்கள் மாவிந்த நகரத்தில் நாங்கள் இளைப்பாறும் சோலையை அப்படியே உரித்து வைத்தது போல் இருக்கிறது, என்றான். வந்தது வினை. தமயந்தி கோபித்துக் கொண்டாள். நாங்கள் என்றால்… இவர் யாரைச் சொல்கிறார்? இவர் தான் மாமன்னராயிற்றே! ... Read More »

ஆனந்தர் ஞானம் பெற்றார்!!!

ஆனந்தர் ஞானம் பெற்றார்!!!

இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர். இவர் புத்தர் மீது கொண்ட அன்பால் அவருடைய சீடனாகிவிட்டார். அதுமட்டுமல்ல மற்ற சீடர்களை விட புத்தரிடம் தனக்கு அதிக உரிமை உண்டு என நினைத்தார். அதன்படியே நடந்து கொண்டார். ஒரு நாள், “சித்தார்த்தா! நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீர் கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்று கட்டளைகளை ஏற்க வேண்டும்,” ... Read More »

நளதமயந்தி பகுதி – 2

நளதமயந்தி பகுதி – 2

மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் உயர்ந்தவள் இந்த உலகில் யாருண்டு! கவலை கொள்ளாதே! உடனே நிடதநாடு நோக்கி பறக்கிறேன். உன் உள்ளம் கவர் கள்வனிடம் உன் காதலைத் தெரிவித்து விடுகிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக பறந்தது. தமயந்தி தன் காதல் நிறைவேறுமோ அல்லது ஏதேனும் இடைஞ்சல் வருமோ என்ற கவலையிலும், நளனை எப்போது காண்போமோ என்ற ஏக்கத்திலும் முகம் வாடியிருந்தாள். அப்போது அவளது தோழிகள் வந்தனர். அவர்களுக்கு ... Read More »

நளதமயந்தி பகுதி – 1

நளதமயந்தி பகுதி – 1

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார். எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், மனைவியையும் பணயம் வைத்து அவமானப்பட்டோம். என் ஒருவனது தவறான முடிவால், இன்று எல்லாரும் சிரமப்படுகின்றனரே! இதைத்தான் விதி என்பதோ! ஏன் மனிதனை இப்படி கஷ்டங்கள் வாட்டுகின்றன! கிருஷ்ணா! என்னைப் போல் கஷ்டப்பட்டவர் உலகில் யாரும் இருக்கமாட்டார்கள். இனியும் இருக்கக் கூடாது, என்று பெருமூச் செறிந்த வேளையில், சிரிப்பொலி கேட்டது. சிரித்தவர் வியாச மகரிஷி. தர்மராஜா அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். சாதாரணமான மகரிஷியா அவர்! ... Read More »

குபேரனாகும் சந்தர்ப்பம்!!!

குபேரனாகும் சந்தர்ப்பம்!!!

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார். “ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். ... Read More »

Scroll To Top