Home » சிறுகதைகள் (page 58)

Category Archives: சிறுகதைகள்

மனசு தான் காரணம்

கபீர்தாசர் ஒருநாள் தன் மகனுடன் வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் கல் இயந்திரமான “திருகை’யில் கோதுமை அரைத்துக் கொண்டிருந்தாள். அதை ஆர்வத்துடன் கண்டான் மகன். அவனிடம் கபீர்,”” இதன் பெயர் திருகை. மேலும் கீழுமாக இரு வட்டக்கற்கள் இருக்கும். மேல் கல்லில் இருக்கும் ஓட்டை வழியே கோதுமையைப் போட்டால் அது கீழ் கல்லில் விழுந்து விடும். நீட்டியிருக்கும் முளைக்குச்சியைச் சுற்றினால் தானியம் அரைபடும்,” என்று விளக்கம் தந்தார் கபீர். அவர்கள் ... Read More »

புரிந்தது தெளிந்தது!

புரிந்தது தெளிந்தது!

ஒரு துறவி தன் சீடனுடன் குடிலில் அமர்ந்திருந்தார். ஒரு குடும்பஸ்தர் வந்தார். “”சுவாமி! எனக்கு ஆயிரம் கடன்கள். பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வழியில்லை.உடல்நிலையும் சரியில்லை. இந்த பிரச்னை தீர யோசனை கூறுங்கள்…” என்றுகேட்டார். “”அப்பனே! இது விதிப்பயன். மாற்றலாகாது. பெருமாள் நாமத்தை மனதார உச்சரி;கஷ்டங்களைக் குறைக்கலாம்,” என்றார் துறவி. வந்தவர் விரக்தியாய் கேட்டார். “”உங்கள் கூற்றுப்படி, விதிப்படி தான் எல்லாம் நடக்குமென்றால், பெருமாளை துணைக்கு அழைப்பானேன்! அவன் நாமத்தை சொல்லுவானேன்!”. குரு சிரித்தார். “”மகனே! பெருமாள் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் எடுத்தார். மனிதரூபத்தில் இருந்தார். அவர் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றியிருக்க முடியும். ... Read More »

துணிவு மிக்க சிறுவன்!

துணிவு மிக்க சிறுவன்!

கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் ... Read More »

கங்கை ஜாடியின் கதை!

கங்கை ஜாடியின் கதை!

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர். சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார். எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ... Read More »

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான், இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் ... Read More »

மதியூகி மரியாைதராமன் கைதகள்!!! கொலை செய்தது யார்?

மதியூகி மரியாைதராமன் கைதகள்!!! கொலை செய்தது யார்?

ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. வாதியும் பெண். பிரதிவாதியும் பெண். இரண்டு பெண்களும் ஒருவனுடைய மனைவிகள். அந்த இரண்டு பெண்களைப் பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுடைய வீட்டுக் கெதிரில் உள்ள அவருடைய வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பது அவருக்குப் பழக்கம். இந்தப் பெண்கள் என்ன குற்றம் செய்தார்கள்! இந்தக் குற்றத்தின் தன்மை என்ன? பின்னணி என்ன? வழக்கில் வாதி இரண்டாம் மனைவி. பிரதிவாதி முதல் மனைவி. குற்றம் – இளையவளின் குழந்தை இறந்து விட்டது. இயற்கையான மரணம் அல்ல ... Read More »

பக்தி கதைகள்! எல்லா சாமியும் ஒண்ணுதான்!!!

பக்தி கதைகள்! எல்லா சாமியும் ஒண்ணுதான்!!!

ஒரு இளைஞன் நதிக்கரை ஒன்றில் நின்று, அதை எப்படி கடப்பதென ஆலோசித்துக் கொண்டிருந்தான். அப்போது, புத்த மத பிட்சு ஒருவர் அங்கே வந்தார். அவரிடம், பிட்சுவே! இந்த நதியைக் கடக்க வேண்டும். வழி சொல்லுங்களேன்! என்றான். கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் நீந்து. எத்தகைய காட்டாற்று வெள்ளத்தையும், அதில் வரும் சுழல்களையும் கடக்க அவர் அருள் செய்வார், என்றார் பிட்சு.எங்கே! நீங்கள் கடந்து காட்டுங்களேன்! என்றான் இளைஞன். பிட்சு சற்றும் யோசிக்காமல், புத்தம் சரணம் கச்சாமி ... Read More »

பக்தி கதை!!! சிறந்த சீடன்!!!

பக்தி கதை!!! சிறந்த சீடன்!!!

குருகுலம் ஒன்றில் பாடம் முடிந்ததும் பிரிவு உபசார விழா நடத்தப்படும்.அப்போது, குருவைப் பற்றி சீடர்கள் புகழ்ந்து பேசுவதும், சிறந்த சீடனை குரு பாராட்டி பேசுவதும் வழக்கம். ஒருமுறை விழா நடந்த போது, பெரும்பலான சீடர்கள், குரு தங்களுக்கு போதித்ததைப் பற்றி வானாளவ புகழ்ந்துபேசினார். ஒரே ஒரு சீடன் மட்டும், எல்லாம் கடவுளால் சிறப்பாக நடந்து முடிந்தது, என்று பேசினான்.அவனைக் கண்டு மற்றசீடர்களுக்கு கோபம்.குருவே! நீங்கள் கஷ்டப்பட்டு பாடம் எடுக்க, இவனோகடவுளால் தான் எல்லாம் நடந்தது என்கிறான். மாதா, ... Read More »

மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு!

மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு!

1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார்: ... Read More »

சுயமரியாதை வேண்டும்!

சுயமரியாதை வேண்டும்!

ஒரு நாள் புவனேசுவரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாக இரு. சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு; ஆனால் தேவையேற்படும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக்கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார். தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய ... Read More »

Scroll To Top