ஒரு பெரிய மரம். அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன. ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது. ஒருநாளா… இரண்டு நாளா பல நாட்கள்! காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்? அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா? ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது. நரி ... Read More »
Category Archives: சிறுகதைகள்
தன்னம்பிக்கை!!!
February 22, 2016
+===|| தன்னம்பிக்கை ||===+ ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது, நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என ... Read More »
விவசாயியை முட்டாளாக நினைக்காதே!!!
February 21, 2016
விவசாயியை முட்டாளாக நினைக்காதே! தேசிய நெடுஞ்சாலை அதிகாரி துறை ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். “உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்” என்றார். “சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்” என்றார் விவசாயி. “நான் நெடுஞ்சாலைத் துறை . அதிகாரி எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் ... Read More »
எறும்பின் தன்னம்பிக்கை!
February 20, 2016
எறும்பின் தன்னம்பிக்கை! ============================== தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்து விடாதீர் கள். இது உங்களுக்கானது. முழுவதையும் படியுங்கள். இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான். நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே ... Read More »
இரண்டும் நல்முத்துக்கள்!!!
February 15, 2016
மரியாதை ராமன் கதைகள்! கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார். ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் ... Read More »
தலையும் உடலும்!!!
February 14, 2016
விக்கிரமாதித்தன் கதை தலையும் உடலும் விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! முன்னொரு காலத்தில் பனாரஸ் நாட்டை ... Read More »
இது தான் திருமணம்!
February 14, 2016
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.” என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, “எங்கே உன்னைக் ... Read More »
உயிரியல் பூங்காவில்
February 9, 2016
சீனாவில் உள்ள ஹாங்ஷு உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம். உயிரியல் பூங்காவில் பாம்புக்கு இரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் ஒளிந்து கொள்ளும்.பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும். ஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டுஇருக்கும்போது, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை ... Read More »
புளிய மரத்து மனிதன்!!!
February 6, 2016
ஊரை உலுக்கியெடுத்த புயல் ஓய்ந்து ஒரு மணிநேரமே ஆகியிருந்தது. வாட்டியெடுத்த கவலையுடன் மகள் வீட்டிலிருந்து தன் குடிசை நோக்கி விரைந்து வந்த ரங்கசாமி, அந்த தெருமுனையில் நுழைந்தபோதே தான் கண்ட காட்சியை நம்பமுடியாமல் அதிர்ந்தார். வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்தது புளியமரம். பச்சை மலையை பெயர்த்தெடுத்து வந்து குறுக்கே போட்டாற்போல அது தெருவை அடைத்துக் கிடந்தது. அடிவயிற்றிலிருந்து அடக்க முடியாத துக்கம் கிளம்பி தொண்டையை அடைத்ததில், கண்ணீர் பொங்க அந்த புளியமரத்தை புருவம் சுருக்கி கூர்ந்து பார்த்தபடி ... Read More »
தண்டியடிகள் நாயனார்!!!
February 6, 2016
தண்டியடிகள் நாயனார் “நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை தண்டியடிகள் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர். இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார். ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் எங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிக் ... Read More »