Home » சிறுகதைகள் (page 55)

Category Archives: சிறுகதைகள்

இரண்டு துவாரம்!!!

இரண்டு துவாரம்!!!

 உலகப் புகழ்பெற்ற மாமேதை ஐன்ஸ்டீன் குழந்தை பருவத்தில் சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சாதாரண மாணவர்களில் ஒருவராகவே இருந்தார். ஆனால், பின்னாளில், தம்முடன் முதல்தர மதிப்பெண்கள் வாங்கியவர்களை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார். அவர் தன்னுடைய இளம் வயதில், பூனைக்குட்டி ஒன்றை மிகவும் ஆசையுடன் வளர்த்து வந்தார். அது, ஊரெல்லாம் சுற்றிவிட்டு, இரவு நேரத்தில், வெகு நேரம் கழித்து வந்து அவர் அருகில் படுத்துக் கொள்ளும். அவருடைய வீட்டுக்குள், கட்டுக்காவல் நிறைய இருந்ததால், பூனை, இஷ்டப்படி திரிந்துவிட்டு, ... Read More »

மரத்தின் அவசியம்!!!

மரத்தின் அவசியம்!!!

ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம். அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான். மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது. ‘நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது. எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்’ என்றான் அவன். உடனே மரம்..’என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்’ என்றது. ‘சரி’ என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் ... Read More »

ஏன் சிரிக்கிறாய்?

ஏன் சிரிக்கிறாய்?

ஒரு பண்ணையில் ஆண் கழுதையொன்றும், பெண் கழுதையொன்றும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை பகலில் கடுமையாக உழைக்கும். பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலை தங்குமிடம் வந்ததும் அங்கு கிடக்கும் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும். பெண் கழுதை எந்த வேலையும் பார்ப்பதில்லை. பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி எழும். மிகவும் மகிழ்ச்சியாக, வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது. ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை ... Read More »

ஆற்றில் வெள்ளம்!!!

ஆற்றில் வெள்ளம்!!!

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இக்கரையில் இரண்டு பேர்நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப்போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது.அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது… நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர்என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.அடுத்தவன் ... Read More »

சில நேரங்களில் செவிடாக இருப்பதே பொருத்தமானது!!!

சில நேரங்களில் செவிடாக இருப்பதே பொருத்தமானது!!!

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை ... Read More »

நரியும் அதன் நிழலும்!!!

நரியும் அதன் நிழலும்!!!

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே உதித்த சூரிய ஒளியால் பெரிதாக தெரிந்த அதன் நிழலை பார்த்து தான்தான் இக்காட்டில் பெரியவன் சிங்கத்தை இனி ராஜா என்று அழைக்க கூடாது நான்தான் இனி காட்டிற்கு ராஜா என்று நினைத்துக்கொண்டு ஆணவத்துடன் நடந்து சென்றது. அப்போது அதற்க்கு எதிரே மானை வேட்டை ஆடி தின்றுவிட்டு, உண்டமயக்கத்தில் வந்துக்கொண்டிருந்த சிங்கம் நரியை ஒன்றும் செய்யாமல் மெதுவாக நரியை கடந்து சென்றது. இதை கண்ட நரி ... Read More »

யோசித்து செயல்படு!!!

யோசித்து செயல்படு!!!

ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர். குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம். யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது. ஒருநாள் ஐந்து ... Read More »

ஆப்பு அசைத்த குரங்கு!!!

ஆப்பு அசைத்த குரங்கு!!!

ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை. மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை. அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான். கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான். பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ... Read More »

தன்னம்பிக்கை vs கர்வம்

தன்னம்பிக்கை vs கர்வம்

தன்னம்பிக்கை vs கர்வம் தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது. “என்னால் முடியும்” என்று நினைப்பது தன்னம்பிக்கை. “என்னால் மட்டுமே முடியும்” என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது. இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை ... Read More »

மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது!!!

மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது!!!

தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார். அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று ... Read More »

Scroll To Top