பீர்பாலின் மகள் ஐந்து வயதுப் பெண்; மிகவும் சாதுர்யமாகப் பேசுவாள். ஒரு நாள் தானும் அரண்மனைக்கு வருவேன் எனத் தந்தையிடம் அடம் பிடித்தாள்: பீர்பாலும் மறுக்க முடியாமல் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அரசரைப் பார்ப்பது அதுவே முதல் முறை. ஆனாலும் சிறுமி மிகவும் மரியாதையோடு, அரசரை வணங்கிவிட்டு நின்று கொண்டிருந்தாள். அக்பர் பிரியத்தோடு சிறுமியை அருகில் அழைத்து, “குழந்தாய், உனக்கு ஏதேனும் சொல்லத் தெரியுமா?” என விசாரித்தார். “ஓ! எனக்கு நிறையவும் குறையவும் பேசத் தெரியுமே” என்று ... Read More »
Category Archives: சிறுகதைகள்
சிரிக்க வைத்தால் பரிசு!!!
March 16, 2016
ஒருநாள், அக்பருக்கு விசித்திரமான எண்ணம் தோன்றியது. பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய்துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப்பேன் என்று கூறினார். என்னனென்னவோ சொல்லி, முயன்று பார்த்தார் பீர்பால். அக்பர் சிறிதும் அசையாமல், சிரிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். கடைசியாக, ஒரு தந்திரத்தைக் கையாளத் தொடங்கினார் பீர்பால். அக்பருடைய காதில், ‘இப்பொழுது நீங்கள் சிரிக்காவிட்டால், நான் என்ன செய்வேன் தெரியுமா? உம். என் விரல்களால் உங்கள் விலா எலும்புகளை அழுத்தி, கூச்சத்தை உண்டாக்குவேன்’ என்று குசு குசு வென்று ... Read More »
தந்தைக்கு குழந்தை பிறந்தது!!!
March 16, 2016
அக்பர், பீர்பாலிடம் ‘நான் மருந்து சாப்பிட்டு வருகிறேன்; காளை மாட்டுப்பாலில் கலந்து சாப்பிடுமாறு மருத்துவர் கூறுகிறார் ஆகையால், எனக்குக் காளை மாட்டுப் பால் வேண்டும், என்று கூறினார். அப்படியே ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவைப்படும் எனவும் கூறினார் பீர்பால். ‘எத்தனை நாளானாலும் சரி, எனக்குக் கிடைத்தால் போதும்’ என்றார் அக்பர். வீட்டுக்கு வந்தார் பீர்பால்; தம் மகளை அழைத்து ஏதோ சொல்லிவிட்டு, யார் என்ன கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம் எனவும் அரசர் ... Read More »
இறைவன் அளித்த பரிசு!!!
March 16, 2016
அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர். தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார்; அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார். சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார். ”அரசர் மிகுந்த சிவப்புநிறம்; மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ... Read More »
உபதேச மொழிகள் தேவையா?
March 15, 2016
சக்கரவர்த்தி அக்பருக்கு அமைச்சர் பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் உண்டோ அதேபோல் கோபமும் அவரிடம் உண்டாகும். பிறகு சாமாதானம் ஏற்படும், இவ்வாறு அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமானது. ஒரு நாள் அக்பர் பீர்பால் மீது கோபம் கொண்டு, உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டு விட்டார். பீர்பாலும் அரசரின் உத்தரவுக்குப் பணிந்து, தம்முடைய விசுவாசமுள்ள பணியாளுடன் நாட்டை விட்டுப் புறப்பட்டார். வழியில் வேறு ஒரு நாட்டை அடைந்து அங்கே தங்கினார்கள். அந்நாட்டின் கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்து ... Read More »
செல்வம் நம்மோடு இருக்கட்டும்!!
March 15, 2016
அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் ‘செல்வம்’ என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர். செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி, தனக்கும் மீண்டும் வேலை அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான். பீர்பால் அவனுடைய ஏழ்மையைக் கருதி, மனம் இரங்கி அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்: “நாளை ... Read More »
யார் பெரியவர்?
March 15, 2016
அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள். மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார். “”உமது கருத்து என்ன?” என ... Read More »
அபிலீன் பரடொக்ஸ் பற்றி…
March 12, 2016
அபிலீன் பரடொக்ஸ் ? (Abilene Paradox !!): ஜோர்ஜ் வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jerry B. Harvey என்கிற மேலாண்மைத் துறை பேராசியர் தனது கட்டுரையில் அபிலீன் பரடொக்ஸ் பற்றி… “வெயில் நிறைந்த பிற்பகல் வேளையில் டெக்சாஸ் மாகாணத்தின் Coleman பகுதியில் ஒரு குடும்பத்தினர் டோமினோ விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது மாமனார் இரவு உணவுக்கு (53 மைல்கள் தொலைவில் உள்ள) அபிலீனுக்குச்(Abilene) செல்லலாம் என்று கருதுகிறார். அவரது மகளும் இது நல்ல திட்டமாகத் தெரிகிறது என்கிறார். மருமகனுக்கு அபிலீன் ... Read More »
கடவுளையும் கட்டலாம்!
March 8, 2016
எதை வேண்டுமானாலும் உன்னால் சாதிக்க முடியுமா?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால், “முடியும்’ என்பது மட்டுமே உங்கள் பதிலாக இருக்கட்டும். “முடியாது’ என்ற வார்த்தையை அகராதியை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இதோ! முடியும் என்பதற்கு சாட்சி கல்வியறிவே இல்லாத ஒரு வேடன். ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவர் சங்கரரின் சீடராவதற்கு முன், எப்படியாவது விஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தை நேரில் கண்டு விட வேண்டும் என நினைத்து காட்டில் தவமிருந்தார். ஒருநாள் ஒரு வேடன் வந்தான். அவன் ... Read More »
மனதைத் திற – சின்ன சின்ன சந்தோசங்கள்!
March 4, 2016
ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கிறோம்! அந்த லட்சியம் என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்! நிறைய கார்களுடன் பெரிய வீடு வாங்குவது, பெரிய பணக்காரராய் ஆவது என எப்படிப்பட்ட குறிக்கோளாகவும்கூட அது இருக்கலாம்! ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்! வாழ்வில் இதுவரை எதை எதை தொலைத்திருக்கிறீர்கள்? முதலில் தொலைந்துபோனது மகிழ்ச்சி! மனிதம் என்ற வார்த்தையே நம்மிடம் இருக்கும் அந்த சிரிப்பு தன்மையாலேயே நிறைவடையும். சுற்றி இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு தொலைதூரங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்! எங்கோ நடந்த பிரச்சினைகளுக்கு ... Read More »