Home » சிறுகதைகள் (page 53)

Category Archives: சிறுகதைகள்

ஒருநாள் அக்பர், பீர்பாலை அழைத்து, ‘நன்றியுள்ளவர், நன்றி கெட்டவர்’ இந்த இருவரையும் உதாரணத்தோடு காட்டும்படி கேட்டுக் கொண்டார். மறுதினம், பீர்பால் ஒரு நாயுடன் சபைக்கு வந்தார். அரசர் முன்னிலையில், அந்த நாயை நிறுத்தி, ‘இந்த நாய் மிகவும் நன்றியுள்ளது. ஒரு ரொட்டித் துண்டுக்காக இரவும் பகலுமாக வாலை ஆட்டிக் கொண்டு மனிதன் காலடியில் எப்பொழுதும் கிடக்கிறது. வாலை ஆட்டுவதன் மூலம் தன் நன்றியை எப்பொழுதும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது’ அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காண்பித்து, ‘இவர் ... Read More »

கிளியின் கதை!

கிளியின் கதை!

“துறவி ஒருவர், அக்பருக்கு அழகான கிளி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதை மிகவும் மகழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அக்பர், நன்றியுள்ள வேலையாள் ஒருவனை அழைத்து, கிளியைக் கொடுத்து, ‘மிகவும் கவனத்தோடு, அதற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுத்து வளர்த்து வர வேண்டும்; கிளிநோய்வாய்ப்பட்டிருக்கிறது என்றோ அல்லது செத்துவிட்டது என்றோ என்னிடம் வந்து சொன்னால் உனக்கு மரணதண்டனை அளிப்பேன்” என்று கட்டளையிட்டார். கிளியை ஏற்றுக் கொண்ட வேலையாள், தினமும் அதைக் கவனத்தோடு வளர்த்துப் பாதுகாத்தான். சில மாதங்களுக்குப் பிறகு, கிளிநோய் ... Read More »

உதைத்த காலுக்கு முத்தம்!!!

உதைத்த காலுக்கு முத்தம்!!!

ஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். “நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்து எழுப்பினான். யாரென்று பார்ப்பதற்குள் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்?” இதைக் கேட்ட சபையோரின் ரத்தம் கொதித்தது. ஒவ்வொருவரும் எழுந்து கடும் தண்டனைகளை தெரிவித்தார்கள். எல்லாமே மரண தண்டனையில்தான் முடிந்தது. பீர்பால் மட்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தார். அக்பர் அவரை நோக்கி ... Read More »

படிப்பு எதற்கு?

படிப்பு எதற்கு?

அக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார். இது வழக்கமான கதையாகிவிட்டது இருவருக்கும். ஒருநாள் ஏதோ கோபத்தால் பீர்பாலை நாட்டைவிட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார். என்ன செய்வார் பீர்பால். தண்டனைக்குக் கீழ்ப்படிந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார். பல மைல்கள் நடந்து களைப்புற்றார். கையில் பணம் இல்லை; பசி வேறு ... Read More »

முட்டாள் விவசாயிகள்!!!

முட்டாள் விவசாயிகள்!!!

சந்தனபுரி என்ற நாட்டை சிற்றரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். விசாகன் என்ற காவலாளி, அரண்மனையில் வாயில் காப்போனாகப் பணிபுரிந்து வந்தான். அவன் அரசனிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தான். அரசனைக் கொல்ல வந்த சில ஒற்றர்களை, அவன் மிகவும் துணிவுடன் விரட்டி அடித்திருக்கிறான். சிலரைக் குத்திக் கொன்று, அரசனைக் காப்பாற்றியிருக்கிறான். அவனுடைய ராஜ விசுவாசத்தை அறிந்த அரசன், அவனுடைய ஏழ்மை நிலையைப் போக்கக் கருதினான். ஒருநாள், பாத்திரம் நிறைய பொன்னும், மணியும் போட்டு, அதை இறுக மூடி, ... Read More »

மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!!!

மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!!!

அக்பர் கோபக்கனல் தெறிக்க சபையில் அமர்ந்திருந்தார். சபையோர் ஒருநாளும் அம்மாதிரி அவரைப் பார்த்ததில்லை.சபைக்கு அக்பரின் மருமகன் வந்திருந்தார். தம் மகளை அனுப்பி வைக்கும்படு அவரிடம் கேட்டுக் கொண்டார் அக்பர். ஆனால், மருமகன் அனுப்பிவைக்க மறுத்துவிட்டார். அக்பர் சொல்லி, யாருமே எதையுமே எப்பொழுதுமே மறுத்ததில்லை. மருமகனின் மறுப்பு, அவரை புண்படுத்தியதோடு அவருக்கு அவமானமாகவும் −ருந்தது. அதனால்தான் கோபக்கனலோடு காணப்பட்டார். ‘உலக முழுவதுமே என் சொல்லுக்குக் கீழ்படிகிறது. அந்த முட்டாள் என் சொல்லை மறுத்துவிட்டானே; −தை நான் எப்படி அனுமதிப்பது?’ ... Read More »

ஆயிரம் முட்டாள்கள்

ஆயிரம் முட்டாள்கள்

பீர்பால், டில்லியிலிருந்து அலகாபாத் நகருக்குச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்பினார். வரும்பொழுது, ராணுவத்துக்குத் தேவைப்படும் என கருதி, கட்டுமஸ்தான் உடல் வலிமையுள்ள ஆயிரம் ஆட்களை அழைத்து வந்தார். வரும்போது, அரசர் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் என்ன செய்வது? உணவு, உடை, சம்பளம் இவற்றை எல்லாம் எவ்வாறு கொடுப்பது? என்ற கவலை சூழ்ந்தது பீர்பாலுக்கு. அரண்மனைக்கு வந்த பீர்பாலை அக்பர் வரவேற்று உபசரித்து, ”நமக்காக என்ன கொண்டு வந்தீர்?” என்று கேட்டார். ”ஆயிரம் முட்டாள்கள்” என்றார் பீர்பால் ... Read More »

செத்தவன் பிழைத்த மர்மம்!!!

செத்தவன் பிழைத்த மர்மம்!!!

தெனாலிராமனை அழைத்து வந்த காவலரைப் பார்த்து, “”ராஜகுரு எங்கே?” என்று கேட்டார் மன்னர். “”அவர் அடித்த அடியில் நகர முடியாமல் கிடக்கிறார்!” என்றனர் காலவர்கள். “”அடப்பாவிகளா! அவரை ஏன் அடித்தீர்கள்? நான் அடிக்கச் சொன்னது இவனையல்லவா?” “”தோளிலிருப்பவனை நையப்புடையுங்கள் என்றீர்கள்! தோளில் இருந்தவர் அவர்தான்!” என்றனர் பயந்துகொண்டே. “”தெனாலிராமா! எப்படி இந்த மாற்றம்?” என்று ஆத்திரத்தோடு கேட்டார் அரசர். “”மன்னா! தாங்கள் சேவகர்களிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. ராஜகுரு என்னைச் சுமந்து வருவது தங்களுக்குப் பிடிக்கவில்லையோ என ... Read More »

பழமும் இல்லை! தோலும் இல்லை!

பழமும் இல்லை! தோலும் இல்லை!

அக்பர் அரசியாருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அக்பருக்கு மிகவும் பிடித்தமான வாழைப்பழங்கள் அக்பரின் இலையில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்தது. உணவை சாப்பிட்டபின் இலையில் இருந்த அனைத்து வாழைப் பழங்களையும் சாப்பிட்டு முடித்தார். பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டார். அக்பரிடம் முக்கியமான செய்தி ஒன்றினை கூறுவதற்காக பீர்பால் அங்கு வந்தார். ‘பீர்பால், இப்பொழுதுதான் உங்களை நினைத்துக் கொண்டேன்! நீங்களே வந்து விட்டீர்கள் இங்கே பார்த்தீர்களா? இலையில் வைத்திருந்த அனைத்து வாழைப் பழங்களையும் அரசியார் ... Read More »

உங்கள் பூமியில் நான் இல்லையே!!!

உங்கள் பூமியில் நான் இல்லையே!!!

அக்பரும் பீர்பாலும் வழக்கம்போல் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பீர்பால் கூறிய கருத்து அக்பர் ஏற்கக்கூடியதாக இல்லாததோடு கோபத்தையும் தூண்டிவிட்டது. உடனே பீர்பாலைக் கடிந்து கொண்டு உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி கண்டிப்பான கட்டளையிட்டு விட்டார். மன்னரின் கட்டளையை மீற முடியுமா? பீர்பால் சீனா தேசத்துக்குச் சென்றார். அங்கேயிருந்து சில மணல் மூட்டைகளைக் கொண்டு பழையபடி தம் நாட்டுக்கு திரும்பினார். வீட்டின் தளம் முழுவதிலும் சீனா தேசத்து மணலைப் பரப்பினார். தம்முடைய குதிரை வண்டியிலும் அந்த மணலைப் பரப்பி ... Read More »

Scroll To Top