வேடன் ஒருவனுக்கு, மற்றவர்களைப் போல படிப்பறிவு இல்லையே, கடவுளை அறியும் அறிவும் இல்லையே, காட்டிலுள்ள முனிவர்களைப் போல் மனம் ஒன்றி வழிபாடு செய்ய முடிவதில்லையே என்று பலவிதமான ஏக்கங்கள் மனதில் ஏற்பட்டது. அவனுக்கு திருமண வாழ்வில் நாட்டமில்லை. உலகத்தின் பிற சுகங்களும் பிடிக்கவில்லை. மனதின் ஒரு ஓரத்தில், எப்படியும் ஈசனைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.ஒருமுறை ஒரு துறவியைக் கண்டான். அந்த துறவிக்கு ஆசை அதிகம். தன்னை நாடி வரும் அன்பர்களிடம் பெறும் தட்சணையும், பால், ... Read More »
Category Archives: சிறுகதைகள்
வெற்றியின் ரகசியம்!!!!!
March 27, 2016
முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார,; அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி ” முல்லா அவர்களே தாங்கள் பலவிதத்திலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரசகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?” என்று கேட்டார். ” உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது,ஆனால் அது ரகசியமாயிற்றே. அதை ஒருவரிடம் சொன்னால் அது ... Read More »
மாவீரன் நெப்போலியனின் கவனக் கூர்மையும், ஒரு சிறிய பயிற்சியும்..
March 25, 2016
மன்னர் நெப்போலியனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம். ஒரு முறை நெப்போலியன் தன் அரண்மனையில் தடல் புடலான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொண்ட நண்பர்களில் சிலர் மன்னருக்கு தெரியாமல் ஒரு ரகசிய ஏற்பாட்டை செய்திருந்தனர். விழா தொடங்கியது. எல்லாரும் கொண்ட்டாட்டத்தில் மூழ்கி இருந்தனர். நெப்போலியன் கையில் ஒரு மது கிண்ணத்தை பிடித்தவாறு நின்றிருந்தார். அப்பொழுது யாரும் எதிர்பாராத சமயம் திடீரென்று ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. விழாவுக்கு வந்தவர்கள் ஒரு நிமிடம் ... Read More »
வல்லவனுக்கு வல்லவன்!!!
March 24, 2016
மன்னர் மகிபாலனின் அரசவையில் பாலா என்ற விகடகவி இருந்தார். விகடகவியின் புத்திக்கூர்மை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரை தனது அரசாங்க ஆலோசகராகவும் நியமித்துக் கொண்டார். விகடகவி பாலா அரசாங்க ஆலோசகராக இருப்பது அரண்மனை அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பொறாமையை உண்டு பண்ணியது. விகடகவியை எப்படியாவது அரண்மனையை விட்டே ஒழித்துவிட வேண்டும் என அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களுக்குள் முடிவெடுத்தனர். அன்று மன்னர் சபையில் அறிஞர் பெருமக்கள் பலரும் வீற்றிருந்தனர். அப்போது அரசபை மன்றத்திற்கு அயல்நாட்டு அறிஞர் ஒருவர் வந்தார். ... Read More »
தெனாலி ராமன் – ராஜகுருவின் நட்பு!!!
March 24, 2016
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் “சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் ... Read More »
பீர்பாலும் அக்பரும்!!!
March 23, 2016
டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார். நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான ... Read More »
தெனாலி ராமன் கதைகள் – காளியிடம் வரம் பெற்ற கதை!!!
March 23, 2016
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் ... Read More »
கண்ணால் காண்பது பொய்யா?
March 22, 2016
அக்பர் வழக்கம்போல் பீர்பாலைப் பார்த்து ‘கண்ணால் கண்டது பொய் ஆகுமா?” என்று வினவினார். ‘பொய் ஆகிவிடும்; தீர விசாரிப்பதே மெய் ஆகும்” என்றார் பீர்பால். ”இதற்கு என்ன ஆதாரம்?” எனக் கேட்டார் அக்பர். சில நாட்களில் நிரூபிப்பதாக வாக்களித்தார் பீர்பால். ஒரு நாள் அக்பரின் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருந்தார் பீர்பால். அடுத்த சில நிமிஷங்களில், அங்கே வந்த ராணியார், படுத்திருப்பது அக்பர் சக்கரவர்த்தி எனக் கருதி அருகிலே சிறிது தள்ளிப் படுத்து உறங்கிவிட்டார். அடுத்து, படுக்கை ... Read More »
மேலும் கீழும் உள்ள கை!!
March 22, 2016
அக்பர், வழக்கம் போல் சபைக்கு வந்து அமர்ந்தார். அமைச்சர்களைப் பார்த்து, ”யாரேனும் யாருக்காவது எதையேனும் வழங்கும் பொழுது கொடுப்பவர் கை மேலாகவும் வாங்குபவர் கை அதற்குக் கீழாகவும் இருக்கிறது. ஆனால், வேறு விதமாக, அதாவது வாங்குவோர் கை மேலாகவும் கொடுப்பவர் கை கீழாகவும் எப்பொழுது இருக்கும் என்பதைப் பற்றி யாராவது சொல்ல முடியுமா?” என்று கேள்வியைக் கேட்டார். சபையோர் குழப்பத்தோடு பார்த்தனர். ”ஒரு போதும் அப்படி இருக்காது” என்று கூறி விட்டனர். அக்பர் பீர்பாலைப் பார்த்து, ”உம்முடைய ... Read More »
நன்றியுள்ளவர்கள் யார்?
March 21, 2016
ஒருநாள் அக்பர், பீர்பாலை அழைத்து, ‘நன்றியுள்ளவர், நன்றி கெட்டவர்’ இந்த இருவரையும் உதாரணத்தோடு காட்டும்படி கேட்டுக் கொண்டார். மறுதினம், பீர்பால் ஒரு நாயுடன் சபைக்கு வந்தார். அரசர் முன்னிலையில், அந்த நாயை நிறுத்தி, ‘இந்த நாய் மிகவும் நன்றியுள்ளது. ஒரு ரொட்டித் துண்டுக்காக இரவும் பகலுமாக வாலை ஆட்டிக் கொண்டு மனிதன் காலடியில் எப்பொழுதும் கிடக்கிறது. வாலை ஆட்டுவதன் மூலம் தன் நன்றியை எப்பொழுதும் தெரிவித்துக் கொண்டிருக்கிறது’ அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காண்பித்து, ‘இவர் ... Read More »