Home » சிறுகதைகள் (page 51)

Category Archives: சிறுகதைகள்

“இந்நிலையும் மாறிவிடும்.”

“இந்நிலையும் மாறிவிடும்.”

தியான வகுப்பு ஒன்றில் புதிதாய் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது குருவிடம் சென்று, “என்னுடைய தியானம் மிகக் கடுமையாயிருக்கிறது. இதனால் என் மனநிலையே மாறிப்போகிறது. கால்கள் மிகவும் வலியெடுக்கின்றன. மேலும் தொடர்ந்து நான் தூக்கத்தையே உணர்கிறேன். என்னால் தாங்க முடியவில்லை. பயங்கரமாக இருக்கிறது, முன்னெப்போதும் இப்படி உணர்ந்ததில்லை,” என்றான். குரு நிதானமாகச் சொன்னார், “இந்நிலையும் மாறிவிடும்.” ஒரு வாரம் கழித்து, அதே மாணவன் மீண்டும் ஆசிரியரிடம் சென்று சொன்னான், “என்னுடைய தியானம் மிகவும் அருமையாயிருக்கிறது. இதனால் நான் அமைதியாகவும், மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என்னையே நான் உணர்கிறேன்,” என்றான் குரு நிதானமாகச் சொன்னார், “இந்நிலையும் மாறிவிடும்.” Read More »

வேண்டும் சகிப்புதன்மை!

வேண்டும் சகிப்புதன்மை!

சகிப்புத்தன்மை மனிதனுக்கு ரொம்ப அவசியம். நெருக்கடி மிகுந்த விட்ட இந்தக் காலத்தில், பஸ்சில் செல்லும் போது, ஒருவன் தெரியாமல் நம்மை மிதித்து விட்டால் கடுமையாக வலிக்கத்தான் செய்கிறது. அதை அவனிடம் இதமாகச் சொல்லலாமேதவிர, அவன் மீது கை நீட்டினால், பிரச்னை பெரிதாகத்தான் செய்யும். ஒரு இளைஞன், குரு ஒருவரிடம் வந்து, “”ஐயனே! தாங்கள் எனக்கு கடவுளைப் பற்றி உபதேசிக்க வேண்டும்,” என்றான். “”சீடனே! இதுபற்றிய உபதேசம் பெற வேண்டுமானால், நான் சொல்லும் விதிமுறைகளின்படி, கடுமையான விரதம் இருக்க வேண்டும். அந்த விரதத்தை நீ சரியாகப் பூர்த்தி செய்து விட்டதாக நான் கருதினால், உபதேசம் செய்வேன்,” என்றார். இளைஞனும் சம்மதித்தான். ... Read More »

ஜென் என்றால் என்ன?..”

ஜென் என்றால் என்ன?..”

ஜென் என்றால் என்ன?..” கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து. துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்துபார்த்துவிட்டுச் சொன்னார் “யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்” மாணவன் விடுவதாய் இல்லை “அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?” “zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை”. “அப்படியானால்…..” மாணவன் இழுத்தான்… “சும்மாயிரு..” வெகு வேகமாய் குருவின் குரல். மாணவன் தெளிந்தான்.   Read More »

நல்லது நடக்கட்டும்!

நல்லது நடக்கட்டும்!

திருடன் ஒருவன், ஒரு மண்டபத்திற்கு வந்தான். அங்கு துறவி ஒருவர் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரிடம் சலனம் சிறிதும் இல்லை. “நம்மைப் போல இவனும் ஒரு திருடன் போல, அதனால் தான் யாருக்கும் தெரியாமல் இக்காட்டில் ஒளித்திருக்கிறான்’ என்று நினைத்தான். இவன் இருக்கும் இடத்தில் தங்கினால், தான் திருடிய பொருளுக்கு ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி, உடனே மண்டபத்தை விட்டு வெளியேறினான். சிறிது நேரம் கழித்து அவ்வழியே ஒரு குடிகாரன் வந்தான். தான் எவ்வளவு குடித்தாலும் சுய நினைவை இழப்பதில்லை என்பதில் அவனுக்கு அலாதியான நம்பிக்கை. அந்த மண்டபத்தைக் கடந்தான் குடிகாரன். சமாதி நிலையில் ... Read More »

ஜென் கதை- “அப்படியா?”

ஜென் கதை- “அப்படியா?”

ஓர் ஊரின் வெளிப்புறப் பகுதியில் ஜென் துறவி ஒருவர் தன் குடிலில் இருந்தபடிபொதுமக்களுக்கு நல்லன சொல்லி வந்தாராம். அவருடைய குடிலில் வேலை பார்த்தஒரு பெண் திடீரென்று கர்ப்பமாகி விட்டாளாம். அவளுடைய அப்பா கோபமாகி அவளை அடித்து “உன்னுடையகர்ப்பத்துக்கு யார் காரணம்?” என்று கேட்க, அவள் அந்தஜென் துறவி தான் காரணம் என்று கைகாட்டினாளாம். ஊரே திரண்டு “அடப்பாவி! நீ இவ்வளவு கேவலமானவனா? போலி சாமியாரே! இப்படி நீ செய்யலாமா?” என்று காறி உமிழ அவர் சாதாரணமாக “அப்படியா?” என்றாராம். ஊரே அவரை ஒதுக்கி விட்டதாம். புதிதாக ஊருக்கு வருபவர்கள் அந்தத் துறவியைப்பார்க்க ... Read More »

பலன் வழங்கியே தீருவார்!!!

பலன் வழங்கியே தீருவார்!!!

ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள். ... Read More »

!!!!!!!!!! ஒரு குட்டி கதை !!!!!!!!!அப்படியே ஆகட்டும்

!!!!!!!!!! ஒரு குட்டி கதை !!!!!!!!!அப்படியே ஆகட்டும்

கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய். கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும். கடவுள்: அப்படியே ஆகட்டும் கடவுள்: நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும் மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய். ... Read More »

அரண்மனையில் ஒரு போட்டி!

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலா ம். உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை. திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் ... Read More »

பக்தி!!!  உன்னால் முடியும்!

பக்தி!!! உன்னால் முடியும்!

ஞானி ஒருவரைத் தேடிவந்தவன், சுவாமி! உலகப்பற்றைத் துறந்து உங்களிடம் சீடனாகச் சேர விரும்புகிறேன் . என்றாலும் ஆசைகள் என்னை விடமாட்டேன் என்கிறது. என்ன செய்ய? எனக் கேட்டான்.அப்படியா? சரி, போய் அந்த மரக்கிளையில் கொஞ்ச நேரம் தொங்கிவிட்டு வா! என்றார், துறவி. எதற்கென்று தெரியாவிட்டாலும், ஞானி சொல்கிறார் என்பதற்காகச் சென்று மரக்கிளையைப் பற்றிக் கொண்டு தொங்கினான். இப்பொழுது சொல் … மரக்கிளை உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறதா? நீ அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாயா? நான்தான் அதைப் பற்றிக் கொண்டிருக்கிறேன்! ... Read More »

கடவுளுடன் ஒரு பேட்டி:

கடவுளுடன் ஒரு பேட்டி:

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனுக்கு.. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது நான். கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவதுஎது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்.. ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.! பணத்துக்காக ... Read More »

Scroll To Top