Home » சிறுகதைகள் (page 50)

Category Archives: சிறுகதைகள்

இதுவல்லவா இல்லறம்!

இதுவல்லவா இல்லறம்!

ஒரு அரசன், “”இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?” என ஒரு துறவியிடம் கேட்டான். “”நடத்துகிறபடி நடத்தினால் ஒவ்வொன்றும் சிறந்ததே” என்று அவர் பதில் கூறினார். அரசனுக்கு புரியவில்லை. “”வா! என் கருத்தை விளக்குகிறேன்,” என்று அரசனைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். வழியில் ஒரு அரண்மனையில் ராஜகுமாரிக்கு நடந்த சுயம்வரத்தை வேடிக்கை பார்க்க இருவரும் சென்றனர். ராஜகுமாரி அங்கு நின்ற ஒரு சந்நியாசியின் கழுத்தில் மாலையிட்டாள். சந்நியாசியோ, “”எனக்கேது குடும்ப வாழ்வு,” என்று சொல்லி மறுத்து விட்டு, வேகமாக வெளியேறினார். ... Read More »

ஏன் இத்தனை கடவுள்!

ஏன் இத்தனை கடவுள்!

கோயிலில் பக்திச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பேசியவர், “”ஸ்ரீதேவியை வணங்கு; அருள் தருவார் பெருமாள். துர்க்கையை துதித்தால் துன்பம் நீங்கும். பிள்ளையாரை வழிபட பிரச்னை தீரும். ஒப்பிலியப்பனை வணங்கினால் வாழ்வு வளமாகும்” என்று பேசிக் கொண்டிருந்தார். ஒருவர் எழுந்து இடைமறித்தார். “”ஐயா! ஆண்டவன் ஒன்று தானே! ஆனால், பல தெய்வங்களின் பெயரைச் சொல்கிறீர்கள். இன்ன கடவுளிடம், இன்னதான் கேட்க வேண்டும் என விதிமுறை இருக்கிறதா என்ன? அல்லது ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்று தருவரா?” பேச்சாளர் கேட்டார். “”உன் வயதென்னப்பா?” “”ஏழு” “”உன் பக்கத்தில் இருப்பவர்கள் யாரப்பா….?” “”என் அம்மா; அக்கா; அது என் அப்பா…” பேச்சாளர் ... Read More »

வீரமான நடைபோடு!

வீரமான நடைபோடு!

மாவீரன் நெப்போலியனிடம் ஓடிவந்தான் அந்த வீரன். “”அரசே! தங்களுக்கு மகிழ்ச்சிதரத்தக்க செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். சொல்லட்டுமா?” என்றான். நெப்போலியன் சிரித்தான். “”வீரனே! நான் துன்பப்படும்படியாக ஏதேனும் செய்தி இருந்தால் முதலில் அதைச் சொல், மகிழ்ச்சி தரும் செய்தியை அடுத்ததாக கேட்கிறேன்,” என்றான். அப்போது, ஒரு வீரன் பணிவுடன்,””தாங்கள் இப்படி சொல்வதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான். “”வீரர்களே! வாழ்க்கை என்ற போர்க்களத்தில் நாம் இருக்கிறோம். இன்பத்தை தரும் செய்திகள் தற்காலிக சுகத்தைத் தான் கொடுக்கும். துன்பப்படும்படியான செய்திகள் தான் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும். வீரமாக நடை ... Read More »

ஜென் கதை : புத்தரின் மடாலயத்தில் நிகழ்ந்த சம்பவம்

ஜென் கதை : புத்தரின் மடாலயத்தில் நிகழ்ந்த சம்பவம்

அமைதியாக அமர்ந்திருந்த துறவியிடம் அரசன் கேட்டான். ”இறந்தபின் நமது புனிதமான ஆத்மாஎன்ன ஆகும்?” ”அதை ஏன் என்னிடம் கேட்கிறாய் ” ”நீங்கள் முக்காலமும் உணர்ந்த துறவியாயிற்றே” ”உண்மைதான்.. ஆனால் நான் இன்னும்சாகவில்லையே” என்றார் துறவி புன்னகையோடு. அருமையான ஜென் கதை ஒன்று… புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படைசந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தைமக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும்சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை. ... Read More »

முட்டாள் யார்?

முட்டாள் யார்?

அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஒரு தத்துவ ஞானி முல்லாவைச் சந்திக்க விரும்பி அவரை எப்பொழுது சந்திக்க முடியும் என்று கேட்டு அ,னுப்பியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் தம்மைச் சந்திக்க வசதியாக இருக்கும் என்றுமுல்லா மறு மொழி அனுப்பியிருந்தார். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தத்துவ ஞானி முல்லாவின் வீட்டுக்கு வந்தார். ஆனால்தவிர்க்க முடியாத ஒர் அலுவல் காரணமாக அந்த நேரத்தில் முல்லாவினால் வீட்டில் இருக்க இயலாமல் போய் விட்டது. தம்மை வரச் சொல்லிவிட்டு முல்லா வீட்டில் இல்லாமல் போனது ... Read More »

மனம் புண்படலாமா?

மனம் புண்படலாமா?

பொதுவாக, கணவனை இழந்த பெண்களை இழிவாகக் கருதி ஒதுக்கி வைக்கிறதுசமூகம். அதிலும், அவர்கள் எதிரே வந்தால், பலரும் ஒதுங்கிப் போவார்கள். காஞ்சி மடத்தில், தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஒரு அம்மையார் சுத்தம் செய்ய வந்து விடுவார். அவர் கணவனை இழந்தவர். அதிகாலையில் மடத்திற்கு வரும் அவரைப் பார்ப்பவர்கள், “”இவள் முகத்தில் தினமும் காலையில் விழிக்க வேண்டியிருக்கிறதே!”என்று முகம் சுளித்துப் பேசுவார்கள். இது அந்த அம்மையாருக்கும் தெரியும். இருந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் சேவையே பெரிதென நினைத்து,சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார். திடீரென சில நாட்களாக அந்த அம்மையாரைக் காணவில்லை. காஞ்சிப்பெரியவர் இதுபற்றி ஊழியர்களிடம் விசாரித்தார். ... Read More »

இரண்டும் உண்டு பூமியிலே!

இரண்டும் உண்டு பூமியிலே!

ஒரு குருவும், சீடனும் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஓரிடத்தில், பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தனர். சீடன், குருவிடம் கேட்டான். “”குருவே! ஆண்டவன் தானே உலகத்தைப் படைத்தார். எல்லோரையுமே நல்லவர்களாகவே படைத்திருந்தால்…. உலகத்தில் பிரச்னையே இருந்திருக்காதே….?” குரு அதைக் கேட்டு சிரித்தார். “”அப்பனே! நீ எத்தனை நாள் உயிர் வாழ்வாய்?” என்றார். “”தெரியவில்லை! அநேகமாய் எழுபது ஆண்டு வரை இருக்க ஆசை…” “”ஏனப்பா! சாகாவரம் பெற ஆசையில்லையா? “”எப்படி முடியும் குருவே! பிறந்தவன் ஒருநாள் இறந்து தானே ஆக வேண்டும்…” குரு ... Read More »

கர்வமுள்ள மனது!

கர்வமுள்ள மனது!

ஒருஇளைஞனுக்கு கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அவன்ஒரு வேத பாடசாலைக்கு சென்றான். அங்கிருந்த பண்டிதரிடம் தனது விருப்பத்தைசொன்னான். அவர் இளைஞனுக்கு வேதம் கற்றுக்கொடுத்ததோடு, பல நூல்களையும்படிக்கச் செய்தார். இளைஞனும் புலமை பெற்றான். ஆனால், கடவுள் காட்சி கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அவன் அங்கிருந்து வெளியேறினான். “இவ்வளவு கற்றிருக்கிறோம். ஆனாலும் நமக்கு தரிசனம் கிடைக்கவில்லையே’ என்று நினைத்தான். சிலகாலம் அமைதியாக இருந்தான். ஒருசமயம், ஒரு மகானிடம் தன் மனதில் இருந்த எண்ணத்தை கொட்டினான். தான், படித்த மேதாவியாக இருந்தும் கடவுள் தன்னைக் கண்டுகொள்ளவில்லையே என்றும் ஆணவமாகப் பேசினான். அவனது கர்வத்தைக் கவனித்த மகான்,””தம்பி! ... Read More »

ஆசையா போகவே போகாது!

ஆசையா போகவே போகாது!

வளமாக வாழ்ந்த செல்வந்தர் ஒருவர், காலப்போக்கில் பல பிரச்னைகளில் சிக்கி பணத்தை இழந்தார். அமைதி வேண்டி ஒரு துறவியிடம் முறையிட்டார். “”சுவாமி! பணக்காரனாக இருந்து ஏழையாகி விட்டேன். எல்லா துன்பத்திற்கும் காரணம் ஆசையே என்று உணர்ந்து விட்டேன். இவ்வளவு அடிபட்ட பிறகும்,ஆசையைக் குறைக்கும் வழி தெரியவில்லை. அதிலிருந்து அடியோடு விடுபடுவது எப்படி?” என்று கேட்டார். புன்னகைத்த துறவி,””அப்பனே! எத்தனை வேளை சாப்பிடுகிறாய்?” என்று கேட்டார். “”பணக்காரனாக இருந்தபோது, நினைத்த போதெல்லாம் சாப்பிட்டேன். இப்போது மூன்று வேளை சாப்பிடுகிறேன்….” என்றார். “”சரி! ஒருவேளை உணவை மறந்து விடு,” என பதிலளித்தார். துறவியின் பேச்சைக் கேட்டு ... Read More »

இக்கரைக்கு அக்கரை பச்சை!

இக்கரைக்கு அக்கரை பச்சை!

சவுபரி என்ற முனிவருக்கு உலகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. மெய்யானஇறைவனைக் காண வேண்டும் என, கடலுக்கடியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டார். பத்தாயிரம் வருடத்திற்கு ஒருமுறை வெளியே வந்து, பழங்கள்,கிழங்குகளை சாப்பிட்டு விட்டு திரும்பவும் கடலுக்குள் போய்விடுவார். ஒருமுறை,அவர் கண் விழித்த போது, பெரியதும், சிறியதுமாக 200 மீன்கள் கொண்ட கூட்டம் அவர்இருந்த இடத்தைக் கடந்தது. உடனே சவுபரிக்கு, “”ஆகா! இந்த மீன்கள் குடும்பமாக செல்லும் அழகே அழகு. நாமும் இல்லறத்தில் இருந்திருந்தால், மனைவி, குழந்தை, பேரன், பேத்திகள் என சந்தோஷமாக இருந்திருக்கலாமே!” என எண்ணினார். கடலை விட்டு வெளியே வந்து,மாந்தாதா என்ற மன்னனிடம் போய் பெண் கேட்டார். அந்த மன்னனுக்கு 50 பெண்கள். வயதான அவருக்கு ... Read More »

Scroll To Top