Home » சிறுகதைகள் (page 49)

Category Archives: சிறுகதைகள்

ஜென் கதை :சாதாரணமாக இருப்பதுதான் அதிசயம்!!!

ஜென் கதை :சாதாரணமாக இருப்பதுதான் அதிசயம்!!!

இரண்டு ஜென் மாஸ்டரின் சிஷ்யர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அகிரா என்ற சீடன் தனது மாஸ்டரின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான். `எங்கள் மாஸ்டர் மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார்,காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களைசெய்வார். உங்கள் மாஸ்டர் என்ன செய்வார்?’, என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான். ஜிங்ஜு `எனது மாஸ்டர் ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயைபயன்படுத்தி சமைப்பார், புயலைக்கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு ... Read More »

பதறாத காரியம் சிதறாது! கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!

பதறாத காரியம் சிதறாது! கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!

தத்துவக் கதையொன்று…. “ஓர் இளைஞன் சிறந்த வாள் பயிற்சி பெறுவதற்காக குருவைத் தேடிப் புறப்பட்டான்.வல்லமை வாய்ந்த குரு ஒருவர் மலைமீது இருப்பதாகச் சொன்னார்கள். இளைஞன் ஆவலோடு மலையேறிச்சென்று குருவைக் கண்டான். வணங்கினான். தன் வேண்டுகோளைத் தெரிவித்தான். “குருவே, நான் கடினமாக உழைத்து தீவிரமாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு காலத்தில் வல்லமை பெற முடியும்? என்று கேட்டான். “பத்து ஆண்டுகள் பிடிக்கும்“என்றார் ஆசான். “என் தந்தை தள்ளாத வயதில் இருக்கிறார். நான் அவ்வளவு காலம் இங்கேதங்கியிருக்க முடியாது. நான் சீக்கிரம் ஊர் திரும்பி அவரைக் கவனிக்கவேண்டும்.மிகக் கடுமையாகப் ... Read More »

புண்ணியம் வேண்டுமா?

புண்ணியம் வேண்டுமா?

ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும். ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ‘ஐயா… என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா ... Read More »

ஜென் கதை : கோமாளியை விட சிறியவன்!!

ஜென் கதை : கோமாளியை விட சிறியவன்!!

ஜிங்ஜு ஒரு வித்தியாசமான பிறவி. தான் ஆணழகனாய், அறிவுள்ளவனாய் பிறந்திருந்தால் இளவரசியை திருமணம் செய்திருக்கலாம் என்று பகல் கனவு காண்பவன். தன்னிடமுள்ள குறைகளை எண்ணி எப்போதும் வருத்தத்திலேயே இருப்பவன். மருந்திற்கு கூட அவன் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள் தன்னைப் பார்த்துதான் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு கோபமடைந்து அவர்களிடம் சண்டைக்கு செல்வான். இறுதியில் ஒருநாள் தனது குணத்தை புரிந்து கொள்ள இயலாமல், ஜென் மாஸ்டரிடம் கேட்டு மனத் தெளிவடைய நினைத்தான். “யார் சிரித்தாலும் எனக்கு கோபம் வருகிறது ஏன் அப்படி?” என்று மாஸ்டரிடம்கேட்டான். இதை கேட்டவுடன் ஜென் ... Read More »

குருவை மிஞ்ச முடியுமா?

குருவை மிஞ்ச முடியுமா?

ஒரு ஆஸ்ரமத்தில் இருந்த குருவுக்கு பிரதான சீடன் இருந்தான். குருவைச் சந்திக்க வருபவர்கள், அவருக்கு செய்யும் மரியாதையில் தனக்கு ஒரு பங்கு கூடசெய்வதில்லையே என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது. ஒருநாள், குருவிடமே தனதுஎண்ணத்தைச் சொல்லி விட்டான். குரு அவனிடம், ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்துவரும்படி சொன்னார். அவனும் எடுத்து வந்தான். “”இதில் என்ன இருக்கிறது?” என சீடனிடம் கேட்டார். அவன் “தண்ணீர் இருக்கிறது’ என பதில் சொன்னான். “”இப்போது தண்ணீரை கொட்டிவிட்டு வா!” என்றார் அவனிடம். அவனும் அப்படியே செய்தான். “”இப்போது பாத்திரத்திற்குள் என்ன இருக்கிறது சொல்!” என குரு ... Read More »

அரக்கனிடம் இரக்கம்!!!

அரக்கனிடம் இரக்கம்!!!

அரக்கன் ஒருவன் தினமும் ஒருவரைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டிருந்தான். ஒருமுறை, ஒரு அந்தணரின் குடும்பத்தினர் அவனிடம் சிக்கிக் கொண்டனர். அரக்கன்அவர்களிடம், “”உங்களில் ஒருவர் எனக்கு இரையாக வேண்டும்,” என்றான். அந்தணர் அவனிடம், “”என் மனைவி நோயாளி. அவளைத் தின்றால் அவளது நோய் உன்னையும் பற்றும். நான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். மூத்த மகன் மேல் எனக்கு பாசம். இளையவன் மேல் என் மனைவிக்கு பாசம். அதனால், நடுவிலுள்ள மகனை எடுத்துக் கொள்,” என்றார். அரக்கனும் சம்மதித்தான். அந்த மகனை அவன் தன்னருகே இழுத்த போது, அவன் ... Read More »

கிடைத்தது புண்ணியம்

கிடைத்தது புண்ணியம்

ராமாயணத்தில் பரசுராமரும், ராமரும் மோதிக் கொள்வது போல ஒரு காட்சிவருகிறது. இதை படிப்பவர்கள் தெய்வங்களே மோதிக் கொள்ளலாமா? என்று கேள்விஎழுப்புகிறார்கள். காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. ராமன் சீதாவை இழந்து தவிக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்தவர் பரசுராமர். ஏற்கனவே, சிவதனுசுவை ஒடித்து சீதாவைக் கல்யாணம் செய்து கொண்ட ராமனிடம், “”நீ ஏற்கனவே பலரால் இழுக்கப்பட்டும், வளைக்கப்பட்டும் இற்றுப்போன சிவதனுசுவை ஒடித்ததில் ஆச்சரியமில்லை. இதோ என் கையில் இருக்கும் விஷ்ணு தனுசுவை தூக்கி நாணேற்று பார்க்கலாம்,” என்றார். ராமனும் எளிதாக அதைச் செய்து விட்டு, இப்போது இதில் நான் தொடுத்துள்ள பாணத்திற்கு இலக்கு யார்?” என்றார். உடனே ... Read More »

மரம் நன்மை செய்யுது மனுஷன்!

மரம் நன்மை செய்யுது மனுஷன்!

ஒரு நாட்டில் மழையில்லாமல் வறட்சி அதிகரித்தது. மக்களின் நிலையை தெரிந்து கொள்ள, மன்னர் மந்திரியுடன் குதிரையில் மாறு வேடத்தில் வலம் வந்தார். நகர்ப்புறத்தைக் கடந்து வெகுதூரம் சென்று விட்டனர். ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள் மாமரத்தின் அடியில் இருவரும் இளைப்பாறிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு கல் மன்னரின் தலையில் விழுந்து ரத்தம் வெளிப்பட்டது. கல் வந்த திசையை மந்திரி வெகுண்டு பார்த்தார். சற்று தூரத்தில் ஒரு மூதாட்டி நின்றாள். “மன்னர் மீது கல் எறிய உனக்கு என்ன தைரியம்?’ என்று அதட்டி, அவளை இழுத்து வந்தார். நடுங்கியபடி அவள் மன்னர் ... Read More »

ஜென் தத்துவங்கள் : குருகுலக்கல்வி

ஜென் தத்துவங்கள் : குருகுலக்கல்வி

மன்னர் ஒருவர் குருகுலக்கல்வி கற்கும் தன் மகனைப் பார்க்க வந்தார். உடனே குரு ” மன்னரின் மகனை அழைத்து இந்த மூன்றாண்டுகளில் தியானத்தின்போது உன் காதில் என்னென்ன ஓசைகள் விழுந்தது?” எனக் கேட்டார். இடியோசை, அருவியின் இரைச்சல், யானையின் பிளிறல், சிங்கத்தின் கர்ச்சனை,புலியின் உறுமல்!” என்று மன்னரின் மகன் கூற, அரசரிடம், ” இன்னும் மூன்றாண்டுகள்கழித்து வாருங்கள் ” என்றார் ஞானி. அடுத்த மூன்றாண்டு முடிந்து மன்னர் வர, இளவரசனை அழைத்தார் ஞானி. இப்போது,பறவை ஒலி, ஆடு மாடுகளின்குரல்! கேட்டதாக அவன் சொல்ல, அரசனை மேலும் மூன்றாண்டுகள் கழித்து வரச் சொன்னார் ஞானி. அடுத்த முறை, “வண்டுகளின் ... Read More »

அவரால் முடியும்! உங்களால்….!

அவரால் முடியும்! உங்களால்….!

சிறுவன் ஒருவன் எப்போதும் கடவுள் சிந்தனையிலேயே இருந்து வந்தான். முற்பிறவியின் பக்தி சிந்தனை இப்போதும் தொடர்ந்தது. ஒருநாள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவ்வழியே வந்த மன்னன்,சிறுவனின் முகத்தில் அலாதியான பிரகாசம் தென்படுவதைக் கண்டான். அவன் உடம்பில் புழுதி ஒட்டியிருந்ததைக் கண்டு, “”தம்பி! ஏன் இப்படி மண்ணில் விளையாடுகிறாய்?” என்றான். சிறுவனும் தத்துவமாகவே விளக்கம் அளித்தான். “”இந்த உடலே மண்ணால் ஆனது தானே! என்றாவது ஒருநாள் மண்ணில் சேரத் தான் போகிறது. அதனால் இப்போதே புழுதியானால் என்ன?” என்றான். சிறுவனின் பேச்சைக் ... Read More »

Scroll To Top