Home » சிறுகதைகள் (page 47)

Category Archives: சிறுகதைகள்

சும்மா இருப்பது எப்படி?

சும்மா இருப்பது எப்படி?

ஒரு மடத்தில் “சும்மா இருப்பது எப்படி?” என செய்முறை விளக்கம் தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு அளிப்பதாக அறிவித்தார். எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். சிலர் பேசாமலும், சிலர் அசையாமலும், சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர். சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள். இன்னும் சிலர் மலைகள், காடுகள் என்று போய் சும்மா இருப்பதை செய்து காண்பித்தார்கள். ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த ... Read More »

எது நிரந்தர இன்பம்?

எது நிரந்தர இன்பம்?

ஒரு அரசனை நாடி புலவர் ஒருவர் வந்தார். அன்றைய புலவர்கள், அரசனின்பெருமைகளைப் புகழ்ந்து பாடுவதும், அதற்கு அவர்கள் பரிசு கொடுப்பதும் வழக்கம். இந்தப் புலவர் கடவுளை மட்டுமே அதுவரை பாடியவர். ஆனால், கோயிலில் குடும்பத்தைக் காப்பாற்றுமளவு போதுமான சம்பளம் கிடைக்காததால், அரசனைப் புகழ்ந்து பாட வந்துவிட்டார். அவனைப் புகழ்ந்து பாடினார். அவனும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி ஆட்டி ரசித்தான். பாடி முடித்ததும், அமைச்சரை அழைத்து, “”இந்த புலவர் என்னை மகிழ்ச்சிப்படுத்தியதற்காக இவருக்கு பத்தாயிரம் பொற்காசுகள் கொடுங்கள்,” என்று உத்தரவிட்டான். புலவர் அமைச்சருடன் சென்றார். அமைச்சரோ,””சரி…போய் வருகிறீர்களா?” என்றார். “”அமைச்சரே! அரசன் தரச்சொன்ன ... Read More »

தர்மத்திலுமா சிக்கனம்!

தர்மத்திலுமா சிக்கனம்!

ஒரு பணக்காரர் துறவியிடம் போனார். அவரிடம், “”மகனே! உனக்கு கிரகநிலை சரியில்லை. இதனால் உன் செல்வம் அழிந்து போக வாய்ப்புண்டு. நீ பழங்கள் வாங்கி ஏழைகளுக்கு தானம் செய். பிரச்னை குறையும்,” என்றார். பணக்காரரோ பெரிய கருமி. “”பழம் வாங்கிக் கொடுத்தால் நிறைய செலவாகுமே! என்ன செய்யலாம்?” என யோசித்தவர் வேலைக்காரனை அழைத்து, “”நம் தோட்டத்தில், பழுத்து கனிந்து கீழே விழும் நிலையிலுள்ள வாழைப்பழங்களை மட்டும் பறித்து வா,” என்றார். அவனும் ஐந்தாறு பழங்களைப் பறித்து வந்தான். அதை வேலைக்காரி ஒருத்தியிடம் கொடுத்தார் பணக்காரர். “”வீட்டுக்கு போவதற்குள் ... Read More »

இயற்கையை மாற்ற முடியாது!

இயற்கையை மாற்ற முடியாது!

ஒரு சமயம் மூன்று ரிஷிகள் வான் வழியே சஞ்சாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து ஒரு கருடன் பறந்து சென்றது. அதன் வாயில் ஒரு பாம்பு சிக்கியிருந்தது. “”அடடா…இந்த கருடனுக்கு கொஞ்சமாவது இரக்கமிருக்கிறதா! பாம்பை இந்தப் பாடு படுத்துகிறதே!” என்றார் ஒரு ரிஷி. அவ்வளவு தான்! பறந்து கொண்டிருந்தவர் கீழே விழுந்து விட்டார். இன்னொருவர், “”இந்த பாம்பு இதுவரை எத்தனை பேரைத் தீண்டி உயிரைப் பறித்திருக்கும். இதற்கு இது தேவை தான்!” என்றார். அவரும் கீழே விழுந்தார். மூன்றாவது ரிஷியோ, “”இவையெல்லாம் இயற்கையின் நிகழ்வுகள். கருடன் பாம்பைப்பிடிப்பதும், பாம்பு மனிதனைத் தீண்டுவதும் ... Read More »

எப்போதும் நல்லவனாயிரு!!!

எப்போதும் நல்லவனாயிரு!!!

ஒரு முனிவரை நேர்மையாளன் ஒருவன் சந்தித்தான். “”முனிவரே! நான் நல்வழியில் தான் நடக்கிறேன். ஆயினும் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் அதிகம். நன்மை செய்வதும், நல்லதையே நினைப்பதுமான எனக்கு ஏன் இத்தனை துன்பம்?” என்று கேட்டான். முனிவர் சிரித்தார். “”அது உன் முன்பிறவியிலான பயன். போன ஜென்மத்தில் நீ பெரும் கொடுமைக்காரனாக இருந்திருக்கலாம். அதன் விளைவு இப்போது தெரிகிறது,”என்றார். பதிலுக்கு அவன்,””அந்த ஜென்மத் தவறுக்கு தண்டனையை, அப்போதே அல்லவா தர வேண்டும்….! நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இப்போது தீயவனாய் இருந்தாலும்,நன்றாய் வாழ்பவர்கள், போன ஜென்மத்தில் நன்மை செய்தவர்கள் என்றல்லவா அர்த்தமாகி விடும்…இது நியாயமா?” என்று கேட்டான். “”உன் ... Read More »

வேண்டும் சோதனை!

வேண்டும் சோதனை!

ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் எனஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனைமடக்குவான். ஒருநாள், நாஸ்திக நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது,ஒரு தூணில் இடறி விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான். நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான். ... Read More »

புகழ்ச்சிக்கு அடிமையாகலாமா!!

புகழ்ச்சிக்கு அடிமையாகலாமா!!

ஒரு ஏரிக்கரையில் இருந்த மாமரத்தின் அடியில், அவ்வழியே சென்ற நரி இளைப்பாற ஒதுங்கியது. அவ்வேளையில் காற்றில் ஒரு மாம்பழம் கீழே விழுந்தது. அதைச் சுவைத்த நரி, “ஆஹா! பழம் தித்திப்பாக இருக்கிறதே!’ என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. நிறைய பழங்கள் தொங்கின. மேலும் சில பழங்களைச்சுவைக்க ஆசை எழுந்தது. மரத்தில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. நரிக்கு அதன் புத்தி வேலை செய்தது. காகத்தைப் புகழ்ந்து பேசினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது. காகத்தை பார்த்து, “”தங்கம் போன்று பொன்னிறமாக இருக்கும் அன்புக்காகமே! நல்ல ... Read More »

வாக்குறுதியை மீறலாமா?

வாக்குறுதியை மீறலாமா?

கங்காதேவியின் புத்திரனான பீஷ்மர், தந்தையின் நலனுக்காக திருமணமே செய்து கொள்ளாத உத்தமர். அவர் தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் அரண்மனையில் நடந்த சுயம்வரத்தில் கலந்து கொண்டு, அவர்களது மகள்களை அழைத்துச் சென்றார். அவர்களில் ஒருத்தியான அம்பை, சாலுவ தேசத்து அரசனான பிரம்மதத்தனை விரும்பியதால். தன்னை அவனது நாட்டிற்கு அனுப்பிவிடும்படி, பீஷ்மரிடம் வேண்டினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார். கடத்தப்பட்ட அம்பையை பிரம்மதத்தன் ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் பீஷ்மரிடமே திரும்பிய அம்பை,தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். அவரோ பிரம்மச்சர்யத்தில் உறுதியாக இருந்ததால் மறுத்து விட்டார். எனவே, அம்பை பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி நாடினாள். அம்பைக்காக பரிந்துபேச வந்த பரசுராமர், பீஷ்மரிடம் ... Read More »

குடை தானம்!!

குடை தானம்!!

தானங்களில் உயர்ந்தது கல்விதானம், அடுத்து அன்னதானம். இதையடுத்து குடை,காலணி தானம் என்கிறது ஒரு கதை. பரசுராமரின் தந்தை ஜமதக்னி அம்பு எய்வதில் கெட்டிக்காரர். அவர் அம்பு வீசும்போது,கீழே விழுபவற்றை அவரது மனைவி ரேணுகாதேவி எடுத்து வருவாள். ஒருமுறை அவர் வீசிய அம்புகளை எடுத்து வர தாமதமாயிற்று. “”ஏன் தாமதமாக வந்தாய் தேவி?” என்றார் ஜமதக்னி. “”நாதா! சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதன்காரணமாக அந்த மரநிழலில் சற்று நின்று இளைப்பாறி வந்தேன்,” என்றாள். ஜமதக்னிக்கு கடும் கோபம் வந்துவிட்டது. தன் வில்லை சூரியனை நோக்கித் ... Read More »

இவர் குற்றமற்றவர்!!!

இவர் குற்றமற்றவர்!!!

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். ... Read More »

Scroll To Top