வாழ்க்கையே சலித்துப் போனது அந்த இளைஞனுக்கு! “”எப்போ பார்த்தாலும் உளியை எடுத்துக்கிட்டு “டங்! டங்!’ என்று பாறையைக்குடைஞ்சிட்டு இருக்கோமே! இதை வைச்சு பெரிசா என்ன சாதிச்சுட்டோம்” என்றுவருந்தினான். உளிபட்ட பாறையிலிருந்து ஒரு பெண்தேவதை வெளிப்பட்டது. அதை இளைஞன் வணங்கினான். அவனுக்கு நினைத்த வடிவெடுக்கும் மந்திரத்தை அந்த தேவதை உபதேசித்தது. “”மகனே! இந்த அபூர்வ சக்தி ஒருவாரம் மட்டும் உனக்கிருக்கும். அதற்குள், நீ என்ன நினைத்தாலும் சாதிக்கலாம். ஆனால், ஏழாவது நாளில் நீ என்னவாக இருக்கிறாயோ, அதுவே ஆயுள் முழுவதும் நீடிக்கும். அதனால் சிந்தித்து செயல்படு,” என்று சொல்லி மறைந்தது. சந்தோஷக் களிப்பில் தலைகால் புரியாமல் ... Read More »
Category Archives: சிறுகதைகள்
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று!
March 29, 2016
ஒரு ஞானியை மூன்று இளைஞர்கள் சந்தித்தனர். “”சுவாமி! எங்களை உங்கள் சீடர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றனர். “”சரி…நான் ஒரு செய்முறை தேர்வு வைக்கிறேன், இதற்கு பதில் சொல்ல ஒரு மாத அவகாசமும் தருகிறேன். தேர்வு பெறுபவர்கள் என் சீடர்கள் ஆகலாம்,” என்றார். மூவரும் தயாராயினர். அவர் ஒரு பழத்தோட்டத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே கிடந்த அரிவாளை எடுத்தார், அழகிய பழமரங்களை வெட்டிச் சாய்த்தார். பழங்களை குத்திக் கிழித்தார். இளைஞர்கள் ஏதும் புரியாமல் விழித்த வேளையில்,””எனது இந்தச் செயல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மாதம் கழித்து பதிலுடன் வாருங்கள்,” என சொல்லி அனுப்பி ... Read More »
குறையொன்றுமில்லை!
March 29, 2016
ஒரு மாற்றுத் திறனாளி; காது கேளாதவர், கடவுளின் மேல் கோபம் கொண்டார். திருக்கோயிலுக்குச் சென்று முறையிட்டார். அங்கிருந்து வெளியே வரும்போது, ஒரு கை இழந்த மனிதன், தன்னாலான பூக்களை நந்தவன மரத்தில் இருந்து பறிக்க முயல்வதைக் கண்டார்; கேட்டார். “”எனக்கு காது கேட்கவில்லை; உங்களுக்கு ஒரு கை இல்லை. இப்படி குறைபாட்டைக் கொடுத்த ஆண்டவனுக்கேன் வஞ்சம்…?” ஒரு கை மனிதர் சொன்னார். “”உங்களால் எழுத முடியும்; பூ பறிக்கலாம். என்னால் உங்கள் குரலைக் கேட்க முடியும். அதோ.. அந்த மனிதருக்கு பார்வையே இல்லை. மற்றொருவருக்கு ஒரு கால் இல்லை. ஆக, நமக்கும் கீழே ... Read More »
வாழச் சொல்லும் வாசகங்கள்…..
March 29, 2016
ஒரு ஜென் துறவியும், அவருடைய சீடர்களும் ஓரிடத்திலிருந்து வேறிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்ற வழியில் ஒரு முயல் மிக வேகமாகக் கடந்து சென்றது. அந்த முயலைத் துரத்தியபடி ஒரு நரி ஓடியது. நடந்த துறவி நின்றார். சீடர்களைத் திரும்பிப் பார்த்தார். ‘சீடர்களே! முயலும், அதைப் பின் தொடர்ந்து நரியும் ஓடுவதைப் பார்த்தீர்களா? முயலை நரி பிடித்துவிடுமா?என்று கேட்டார். குருவே! முயல் வேகமாக ஓடும் என்பது உண்மைதான். ஆனால், நரி முயலை விடவேகமாக ஓடும் ஆற்றலைப் பெற்றது. அதனால் நிச்சயம் இந்த நரி அந்த முயலைப்பிடித்துவிடும். இதில் ... Read More »
தேவதைகள் வாழும் வீடு…!
March 29, 2016
ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியைதவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார். அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து,அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில்ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார். யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் டப்பாவை கொடுப்பது தவறு என்று கண்டித்தார். அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களைஅந்த பெட்டிக்குள்ள குடுத்து, மூடி ... Read More »
கிளி பேசியது..
March 29, 2016
ஒரு பெண் தனிமையை போக்குவதற்காக துணைக்கு ஒரு கிளியை வாங்கினாள். ஒரு வாரமாகியது, கிளி பேசவே இல்லை. கவலையுற்று திரும்பவும் கடைக்கு சென்று ஒரு கண்ணாடி வாங்கி வந்து கூண்டில் வைத்தாள். அபோழுதும் அந்த கிளி பேசவில்லை. ஒரு வாரம் கழித்து மறுபடியும் அந்த கடைக்கு சென்று ஒரு சிறிய ஏணி வாங்கி கொண்டு வந்து வைத்தாள். அப்பொழுதும் அந்த கிளி பேசவில்லை. ஒரு வாரம் கழித்து மறுபடியும் கடைக்கு சென்று ஒரு சிறிய ஊஞ்சல் வங்கி வந்து கிளி கூண்டில் கட்டி விட்டாள். அப்பொழுதும் அந்த கிளி வாயை ... Read More »
கர்ணணின்….. கருணை!!!!
March 29, 2016
ஒருநாள் கர்ணன் எண்ணைக்குளியல் எடுத்துக்கொண்டிருந்தான்: . அந்த நேரத்தில் வந்த ஒரு வறியவரை, வாயிற்காப்போனும் தடுக்காமல் உள்ளே அனுப்பிவைக்க ….அவ்வறியவரும், தங்கக் கிண்ணத்தில் எண்ணையோடு வேலையாட்கள் எண்ணை தேய்த்து விட்டுக்கொண்டிருக்க …. எந்த ஒரு ஆபரணமும் பூணாத நிலையில், இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்தவாறிருந்த கர்ணனை கண்டு இரு கரங்களையும் கூப்பினார் : . . கர்ணனும் புன்முறுவலுடன் , ” வாருங்கள் ….வாருங்கள் …..என்ன வேண்டும் தங்களுக்கு ?” என்றான் உடம்பில் அணிகலன்கள் ஏதுமின்றி ... Read More »
நமது பலம்!!! நமது பலவீனம்!!!
March 29, 2016
ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். உடனே தரகரிடம் சென்று வீட்டை விற்றுத் தருமாறு கேட்டார். உடனே தரகர், “நானே பத்திரிகையில விளம்பரம் செய்து வித்துத் தரேன் சார்” என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன் பத்திரிகையில் விளம்பரம் செய்தார். அடுத்தநாள் தரகர் சுமார் பத்து முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை சுற்றிக் காட்டினார். வீட்டின் சொந்தக் காரருக்கு ... Read More »
பயம்.. எப்பொழுது வரும்..?
March 29, 2016
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான். இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள். இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள ... Read More »
இதை விடப் பகை எது ?
March 29, 2016
ஆபீஸை விட்டு வெளியே வரும் போது மழை சோ வெனப் பெய்யத் தொடங்கியது. ஏற்கனவே பாஸிடம் திட்டு வாங்கியதில் மூடு-அவுட் ஆகியிருந்த மாறன் இன்னும்எரிச்சலடைந்தான். இன்றைக்கு பார்த்து குடை கொண்டுவர மறந்து விட்டான்.நனைந்து ஈரமாகி விட்ட உடம்பை வேகமாக வீசிய குளிர் காற்று நடுங்க வைத்தது.எதிரே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தேங்கியிருந்த சேற்றை வாரி தலை முதல் கால் வரை இறைத்து விட்டுப் போய் விட்டது. ஆட்டோக் காரனை திட்டிக் கொண்டேகோபத்தின் உச்சத்தில் வீட்டிற்குள் நுழைந்தான். ஏங்க குடையை எடுத்து ... Read More »