ஒருநாள் மாலைப்பொழுதில், அக்பரும் பீர்பாலும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘வழியில் ஏதேனும் ஒரு பொருளைக் கண்டு எடுத்தால் அதில் எவ்வளவு தருமம் செய்வீர்?” எனக் கேட்டார் அக்பர். ‘நான்கில் ஒரு பகுதியைக் கொடுத்து விடுவேன்’ என்றார் பீர்பால். சிறிது தூரம் சென்றதும், ஒரு ரூபாய் கிடைத்தது பீர்பாலுக்கு ! ஆனால் அதன் மதிப்பு முக்கால் ரூபாய்தான். அதைக் கண்ட அக்பர், ”நீர் அதிர்ஷ்டசாலி, கண்டெடுத்த ஒரு ரூபாயிலிருந்து நான்கின் ஒரு பகுதியை தர்மம் செய்துவிடும்’ எனக்கூறினார். ... Read More »
Category Archives: சிறுகதைகள்
முல்லா நசுருதீன்
April 2, 2016
முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார். முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…” உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து ... Read More »
எல்லோரும் ஒருவர்தான்
March 31, 2016
பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே விவாதங்கள் நிகழும். —————- ஒரு முறை பீர்பாலிடம் அக்பர், ”எங்கள் இஸ்லாம் மதத்தில் ஒரே கடவுள்தான் உள்ளார். அதே போல கிறிஸ்தவ மதம், புத்த மதம் போன்றவற்றுக்கும் ஒரே கடவுள்தான் உள்ளார். ஆனால் உங்கள் இந்து மதத்தில் மட்டும் நிறையக் கடவுளர்கள் உள்ளார்களே?” என்று கேட்டார். ————– அதற்கு பீர்பால், ”பேரரசர் அவர்களே! எல்லாக் கடவுளரும் ... Read More »
பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும்
March 31, 2016
“குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள். “அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார். “பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன். “அப்படியே செய்வோம்” என்றார் குரு. “மனிதர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டான் மண்டு. “மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் ... Read More »
உழைத்து வாழ வேண்டும்!
March 30, 2016
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தார். அவர் பிறந்த நாளை ஒட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர். அரசன் அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:- அறிஞர் பெருமக்களே..! உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு ... Read More »
வேலைக்காரி மாரியம்மா
March 30, 2016
அந்த வீட்டு வேலைக்காரி மாரியம்மாவுக்கு ராத்திரி தூக்கமே பிடிக்கலே. மறுநாள் ஊரிலிருந்து சின்னம்மா குடும்பத்தோட வாராங்க. ஏகப்பட்ட வேலை கெடக்குது. “விடியரவரெ தூங்கிட்டிருந்திராதே. சின்னம்மா வர்றதுக்குள்ளே எல்லாவேலையும் முடிச்சுக்கணும் இல்லேன்னா உட்கார்ந்து பேசக்கூட நேரமிருக்காது. சாயிந்தரமே போனாலும் போயிருவாங்க “ன்னு படுக்கப் போகும் போதே சொல்லியிருக்காக. அப்புறமும் லேட்டா எந்திரிச்சா அவங்க மூஞ்சியக் காட்ற மாதிரி ஆயிடும். போனதடவை வந்தப்போ அடுத்த தடைவை வரும்போது பழைய சேலைகள் கொண்டுவருவதாகச் சொல்லியிருந்தாள். “பெரியம்மா சேலைகள் நமக்குத்தான் ஆகும். சின்னம்மா ... Read More »
நீதிக்கதை:பல வருடப்பழக்கத்தால்….
March 29, 2016
ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின. அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான்.எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தைமட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் ... Read More »
யானையின் அடக்கம்.
March 29, 2016
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து ... Read More »
ஆண்டவன் உலகத்தின் முதலாளி!
March 29, 2016
வயலுக்குச் செல்லும் வழியில், குளக்கரை பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு செல்வான் வேலு. விவசாயத்திற்கு ஏற்றது போல மழையோ, வெயிலோ எப்போதும் இருப்பதில்லை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான விதி தான். இருந்தாலும் அவன், “”பிள்ளையாரப்பா! ஒரேயடியா வெயில் அடிக்குது! வேண்டாத நேரத்தில் காத்தடிக்குது! நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது! விவசாயம் செய்யவே முடியமாட்டேங்குது!” என்று வருத்தப்பட்டு வணங்குவான். அவன் தினமும் இப்படி பிரார்த்திப்பதைக் கேட்ட பிள்ளையார் ஒருநாள் அவன் முன் வந்தே விட்டார். வேலு அவரிடம், “”சுவாமி! ... Read More »
நமக்கும் மேலே ஒருவனடா!
March 29, 2016
நாத்திகன் ஒருவன் அரசனாக இருந்தான். மக்களும் கடவுளை வணங்குவதை அவன் விரும்பவில்லை. அரசவையைக் கூட்டினான். “”அமைச்சரே! கடவுள் என்பவர் யார்? பத்து நாட்களுக்குள் எனக்கு விளக்கம் அளிக்கவேண்டும். இல்லா விட்டால் நாட்டில் யாரும் கடவுளை வணங்கக்கூடாது,” என்றுஉத்தரவிட்டான். அமைச்சர் அறிஞர்களை அழைத்தார். மன்னனுக்கு கடவுள் குறித்து விளக்கம் தர வேண்டினார். ஆனால், நாத்திகம் பேசும் மன்னன் முன் தங்களின் பேச்சு எடுபடாது என்று அவர்கள் பின்வாங்கினர். அமைச்சர் வீட்டில் பக்தி மிக்க சமையல்காரன் ஒருவன் இருந்தான். தைரியசாலியான அவன்,இதற்கு பதிலளிக்க முன்வந்தான். “”அமைச்சரே! ஒருயோசனை! பண்டிதர் வேடத்தில் நான் அவைக்கு ... Read More »