ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் – பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார். அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். என்றாலும் மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! ... Read More »
Category Archives: சிறுகதைகள்
சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !!!
April 19, 2016
ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் . அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் .” சும்மா இருக்கும் சாமியாருக்கு ... Read More »
நான்கு முட்டாள்கள்!!!
April 19, 2016
டில்லி பாதுஷா அக்பருக்கு இருப்பதிலேயே படு முட்டாள்களை சந்திக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஒரு நாள் உண்டாகி விட்டது!முட்டாள்களை சந்திக்க வேண்டுமென்ற ஆசை வந்தது சரி, அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது? அக்பர் டில்லி பாதுஷா அல்லவா, உத்தரவு போட்டால் போயிற்று! அத்தனை முட்டாள்களும் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா என்ன?! ஆனாலும் அதில் கடினமான பகுதி என்னவென்றால், இருப்பதிலேயே வடிகட்டின முட்டாள்களாகப் பார்த்து அதில் நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! அதற்கு புத்திசாலித்தனமும், சாதுர்யமும் ... Read More »
அக்பரின் வள்ளல்தன்மை!!!
April 18, 2016
அக்பரிடம் ஒரு விஷயம் மட்டும் பீர்பாலுக்குப் பிடிக்கவில்லை. அதாவது அக்பரின் ஆராயாமல் கொடுக்கும் வள்ளல்தன்மை. பல முறை பீர்பால் அதை எடுத்துக் கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் அக்பர் தன விருப்பப் படி வாரி வழங்கிக் கொண்டு இருந்தார். இதானால் அக்பரின் கஜானா காலியாகும் நிலைமை ஏற்பட்டது. ஒருமுறை அக்பர் மாறு வேடத்தில் இரவு நேரம் தன சேனாதிபதி அஹமத் கானுடன் வந்து கொண்டு இருந்தார். நட்ட நடு இரவில் அவர் தெருவோரம் கண்ட ஒரு காட்சி அவரின் ... Read More »
முட்டாள் வேலைக்காரன்!!!
April 18, 2016
ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “”நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!” என்றான். அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் ... Read More »
ஒரு குடம் அதிசயம்!!!
April 18, 2016
பீர்பால் , அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத்திறமையாலே சமாளித்துவிடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின்அறிவாற்றலைஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால ஒரு கடிதத்துல, “மேன்மைதாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன்தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள்பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒருகுடம்அதிசயம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு“, தூதன் மூலமாஅக்பருக்கு அனுப்பினாருகாபூல் அரசர். கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமேபுரியவில்லையேன்னு குழம்பி, அரண்மனையை சுற்றி வளம் வந்தார். அக்பர் முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால் கண்டார். பீர்பால் அக்பரிடம் சென்று இதுபற்றி வினவினார். அக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை படித்தார் பீர்பால். பீர்பால் நீண்ட சிந்தனைக்கு பிறகு, அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம்அனுப்புவதாக பதில்எழுதுமாறு சொன்னார். அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒருகுடம் அதிசயம் எப்படி அனுபுவிர்? என்று விசாரிச்சாரு. அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்துஅந்த அதிசயத்தைப் பாருங்களேன். பீர்பால் யோசித்துக்கொண்டே அவர் வீட்டிற்க்கு புறப்பட்டார். பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தைஎடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்தபூசணிப்பிஞ்சுஒண்ணை கொடியோட மண்குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு. நாளாக நாளாக பூசணிப் பிஞ்சுகுடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம்நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி,காயின் காம்பு எல்லாவற்றையும்கத்தரித்து விட்டார் பீர்பால். இப்போ அந்தக்குடத்தை அக்பரிடம்காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோஉள்ளே இருக்கும்பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள்இவ்வளவு பெரிய பூசணிக்காயைஎப்படி நுழைத்தாய்? பீர்பால்அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தைஅப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்ப சொன்னார் அக்பர் தூதன் மூலமாக ஒரு கடிதத்தையும் அந்த குடத்தையும் அனுப்பினார். கடிதத்தை காபூல் அரசன் பிரித்து படித்தார். ... Read More »
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்!!!
April 17, 2016
ஒருநாள் அக்பர் தனது அவையில் அமர்ந்து இருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து, “உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்? அவர்களுக்கான இலக்கணம் என்று எதனைக் கருதலாம்?” என்று கேட்டார். “மாபெரும் சேனை ஒன்றை ஐந்தாறு வீரர்களை மட்டும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று சமாளித்து வெற்றி பெறும் தளபதியே மாபெரும் வீரர்!” என்றார் ஒருவர். “தாம் ஆயுதம் வைத்திருக்காத நிலையிலும் எல்லா ஆயுதங்களும் வைத்திருக்கும் ஒருவனை எதிர்த்துப் போரிட்டு வெள்ளி கொள்பவனே சிறந்த வீரன்!” என்றார் இன்னொருவர். “போர் ... Read More »
திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்!!!
April 17, 2016
ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும். – அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம இறுந்துடுவாங்க. ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப ... Read More »
உலகம் ஓர் சத்திரம்!!!
April 17, 2016
ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார். அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை ... Read More »
டில்லி வந்து சேர்ந்த பீர்பால்!!!
April 17, 2016
டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார். நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான ... Read More »