Home » சிறுகதைகள் (page 39)

Category Archives: சிறுகதைகள்

மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!!!

மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!!!

மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!….. சூடான் நாட்டு அரசனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு அனந்தா என்று பெயர் சூட்டினர். அரசனுக்கிருந்த குடிப்பழக்கம் காரணமாக மகன் பிறந்த சிறிது நாட்களிலேயே அவன் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனான். இளவரசன் அனந்தாவை ராணி நல்ல திறமையான வீரனாக வளர்த்து வந்தாள். இருப்பினும், அவள் தன் கணவனைப் போலவே தன் மகனும் தீய நண்பர்களுடன் சேர்ந்து குடி மற்றும் தீய பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடக் கூடாது என்று கவனமாக இருந்தாள். ... Read More »

கடவுளின் கணக்கு!!!

கடவுளின் கணக்கு!!!

கடவுளின் கணக்கு – அறிவுக் கதைகள்:- சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு வந்தால்தான் பணம் கொடுப்பான். அதுவும், பாதி விலைக்குத்தான் வாங்குவான். கடவுள் அவன் பக்கம் இருந்து, எல்லா மக்களுக்கும் கஷ்டத்தைக் கொடுத்து, அவனுக்கு லாபத்தை வாரிக் கொடுத்தார். “”இதெல்லாம் ரொம்பப் பாவம். நம் மகனுக்குப் பாவத்தைச் ... Read More »

கௌதம புத்தர் !!!

கௌதம புத்தர் !!!

கௌதம புத்தர் துறவியானதும் தினமும் தனக்கு வேண்டிய உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் ஒரு வீட்டில் அவர் பிச்சை கேட்டபோது …’ போ..போ.. தடிமாடு மாதிரி இருந்துகொண்டு, ஏன் பிச்சை எடுக்கிறாய்’ என விரட்டினார் அந்த வீட்டில் இருந்தவர். உடனே புத்தர் ‘ ஐயா’ என அவரை அழைத்தார்’ அந்த வீட்டுக்காரரும் ‘ என்ன?’ என்றார். நீங்கள் எனக்கு ஏதேனும் பிச்சை போட்டிருந்தால் அது யாருக்கு சொந்தம்’ என கேட்டார். ‘ போட்டிருந்தால் ... Read More »

நம்பிக்கை!!!

நம்பிக்கை!!!

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது. அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான். ... Read More »

மிகப்பெரிய பரிசு!!!

மிகப்பெரிய பரிசு!!!

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ... Read More »

காசி யாத்திரை எதற்கு ?

காசி யாத்திரை எதற்கு ?

காசி யாத்திரையின் முக்யத்துவம் என்ன? கங்கை என்ற ஒரு நதியே பூஉலகில் இல்லாத காலம். அப்போது நமது பூலோகத்தை ஆண்டு வந்த மன்னன் பகீரதனுக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அது என்ன தெரியுமா? அந்த மன்னனது காதில் ஒரு பேரிரைச்சல் ஒலிக்க ஆரம்பித்தது. அவனால் அந்த இரைச்சலை சகித்துக்கொள்ளவோ, தாங்கவோ முடியவில்லை. எந்த வேலையும் செய்யமுடியவில்லை. மிகவும் துன்பப்பட்டான். நாட்கள் சென்றன, மாதங்கள் சென்றன, வருடங்கள் உருண்டோடின . இப்போது அந்த இரைச்சலை புரிந்து கொள்ள ... Read More »

இடி இடித்தது …மழை பெய்யதது!!!

இடி இடித்தது …மழை பெய்யதது!!!

இடி இடித்தது …மழை பெய்ய ஆரம்பித்தது அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார் .ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார் .யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர் ... Read More »

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்கள்!!!

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்கள்!!!

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர  நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..! சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. “உனக்காவது பொழுது ... Read More »

சினத்தினால் விளையும் கேடு!!!

சினத்தினால் விளையும் கேடு!!!

சினத்தினால் விளையும் கேடு…..ஒரு உண்மைக் கதை… சரோஜாவிற்கு தன் 18  வயது மகன் சந்தோஷைப் பற்றி மிகுந்த மனக்குறை. அவனுடைய போக்கே சரியில்லை. நிறைய பொய் சொல்லுகிறான். வீட்டிலிருந்து பணம் திருடுகிறான். கல்லூரியில் சிறப்பு வகுப்பு இருப்பதாய் பொய் சொல்லி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், சினிமாவிற்குச் செல்வதுமாய் பொழுதைக் கழிக்கிறான். ஏதாவது கேட்டால் “வள..வள்” என எரிந்து விழுகிறான். அவனிடம் பேசவே பயமாய் இருக்கிறது. சமயங்களில் அப்பாவையே எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவனுடைய அடாவடித்தனம் செல்கிறது. ... Read More »

குலதெய்வம் மகா பெரியவர் விளக்கம்!!!

குலதெய்வம் மகா பெரியவர் விளக்கம்!!!

” குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” (மகா பெரியவா விளக்கம்) மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, சாமி… ... Read More »

Scroll To Top