Home » சிறுகதைகள் (page 38)

Category Archives: சிறுகதைகள்

மந்திரம் குச்சிகள்!!!

மந்திரம் குச்சிகள்!!!

அக்பர் ஒரு நாள் பீர்பாலுடன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். திடீரென அக்பர் தன் வலது கைமணிக்கட்டை இடது கையால் அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தார். அவருடைய மணிக்கட்டு வீங்கியிருந்தது. அதைப் பார்த்த பீர்பால் சிரித்தார். “நான் வலியால் துடிக்கையில் உனக்கு சிரிக்கத் தோன்றுகிறதா?” என்று அக்பர். “மன்னிக்கவும் பிரபு! நான் ஏன் சிரித்தேன் என்று சொல்கிறேன்” என்ற பீர்பால் தோட்டத்திலிருந்த எலுமிச்சைச் செடிகளிலிருந்து ஒரு பழம் பறித்து வந்து அதை வெட்டி, அதன் சாறை வீக்கத்தில் தடவித் ... Read More »

முல்லாவின் இறப்பு!!!

முல்லாவின் இறப்பு!!!

முல்லா ஒரு கிளையை அறுக்கலாம் என்று ரம்பத்துடன் மரத்தின் மீதேறினார். அந்தப் பக்கமாகப் போன ஒருவர், நன்கு கவனியுங்கள்!உட்கார்ந்திருக்கும் கிளையையே நீங்கள் அறுக்கிறீர்கள்.கிளையோடு நீங்களும் கீழே விழுந்து விடுவீர்கள். என்று முல்லாவைப் பார்த்து அவர் சத்தம் போட்டார்: “நீங்கள் சொல்வதை நம்புவதற்கு நானென்ன முட்டாளா; அல்லது எதிர்காலத்தை எனக்குச் சொல்லக்கூடிய ஞானியா நீங்கள்?’ என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் முல்லா.   சொல்லி முடித்தவுடனேயே கிளையோடு தரையில் விழுந்தார் முல்லா. தன்னுடன் பேசிய மனிதனைப் பார்க்க அடித்துப் பிடித்து ஓடினார் முல்லா. ... Read More »

முல்லாவின் வீரசாகசம்!!!

முல்லாவின் வீரசாகசம்!!!

ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அறுசுவை விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் அந்த ஊர் பிரமுகர்கள் பலரும் சாப்பிட்டவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். விருந்துண்ணுவோர் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் தங்கள் வீரப்பிரதாபங்களைக் குறித்துப் பொய்யும் புனை சுருட்டுமான பவ நிகழ்ச்சிகளைத் தாங்கள் சாதித்தாகக் கூறி ஏதோ பெரிய சாகசக்காரர்கள் போல் தற்பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். முல்லா எல்லாவற்றையும் தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தார் உடனே அவர் அங்கிருந்த பிரமுகர்களை நோக்கி ... Read More »

புத்தர்-வாழும் கலை!!!

புத்தர்-வாழும் கலை!!!

கவனித்தலே வாழும் கலை காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான். தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். ... Read More »

மன்னிக்க முடியாத பகை- பழி!!!

மன்னிக்க முடியாத பகை- பழி!!!

பகை- பழி ”மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை. எல்லா மாணவர்களும் ஒரே குரலில் ‘ஆமாம்…’ என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ”மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒருவன் ‘பத்து’ என்றான்; அடுத்தவன் ‘பதினைந்து’ என்றான்.இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் ... Read More »

நன்றி மறந்த சிங்கம்!!!

நன்றி மறந்த சிங்கம்!!!

நன்றிமறந்தசிங்கம்-பஞ்சதந்திரக்கதை:– முல்லைமலர்என்றகாட்டில்விறகுவெட்டுவதற்காகசென்றுகொண்டிருந்தான்மனிதன்ஒருவன். அப்போதுகாட்டில்எங்கிருந்தோசிங்கத்தின்கர்ஜினைகேட்டது. பயத்துடன்ஓடத்தொடங்கினான்மனிதன். “மனிதனேபயப்படாதே!இங்கேவா!நான்உன்னைஒன்றும்செய்யமாட்டேன்”என்றகுரல்கேட்டது. தயக்கத்துடன்குரல்வந்ததிசையைநோக்கிச்சென்றான்மனிதன். அங்குஒருகூண்டில்சிங்கம்அடைப்பட்டுஇருந்தது.வேட்டைக்காரர்கள்சிலர்சிங்கத்தைஉயிருடன்பிடிப்பதற்காகஒருகூண்டுசெய்துஅதற்குள்ஓர்ஆட்டைவிட்டுவைத்திருந்தனர்.ஆட்டிற்குஆசைப்பட்டசிங்கம்கூண்டிற்குள்மாட்டிக்கொண்டது. மனிதனைப்பார்த்தசிங்கம்,“மனிதனே,என்னைஇந்தக்கூண்டிலிருந்துவிடுவித்துவிடு…நான்உனக்குப்பலஉதவிகளைச்செய்வேன்,”என்றது. “நீயோமனிதர்களைக்கொன்றுதின்பவன்.உன்னைஎப்படிநான்விடுவிக்கமுடியும்?”என்றான்மனிதன். “மனிதர்களைக்கொல்லும்சுபாவம்எங்களுக்குஉண்டுதான்.அதற்காகஉயிர்காக்கும்உன்னைக்கூடவாஅடித்துக்கொன்றுவிடுவேன்.அவ்வளவுநன்றியில்லாதவனாநான்?பயப்படாமல்கூண்டின்கதவைத்திற.உன்னைஒன்றும்செய்யமாட்டேன்”என்றுநைசாகப்பேசியதுசிங்கம். சிங்கத்தின்வார்த்தையைஉண்மையென்றுநம்பிவிட்டான்மனிதன்.கூண்டின்கதவைத்திறந்தான்.அவ்வளவுதான்!நன்றிகெட்டசிங்கம்மனிதன்மேல்பாய்வதற்குதயாராயிற்று. இதனைக்கண்டமனிதன்,“சிங்கமே,நீசெய்வதுஉனக்கேநியாயமா?உன் பேச்சைநம்பிஉன்னைக்கூண்டிலிருந்துவிடுவித்தேனே…அதற்குஇதுதானாநீகாட்டும்நன்றி”என்றான். “என்உயிரைக்காத்துக்கொள்வதற்காகநான்ஆயிரம்பொய்சொல்லுவேன்.அதைநீஎவ்வாறுநம்பலாம்?மனிதர்கள்என்றால்பகுத்தறிவுள்ளவர்கள்என்றுதானேபொருள்.அந்தஅறிவைக்கொண்டுஇதுநல்லது,இதுகெட்டதுஎன்றுபகுதித்தறியவேண்டாமா?முட்டாள்தனமானஉன்செய்கைக்குநான்எப்படிப்பொறுப்பாகமுடியும்?”என்றதுசிங்கம். “கடவுள்உன்னைதண்டிப்பார்.உன்உயிரைகாப்பாற்றியஎன்னையேசாப்பிடுவதுநியாயமா? உன்னைவிடுவித்ததற்குஇம்மாதிரிநடந்துகொள்வதுமுறையல்ல”என்றான்மனிதன். அப்போது அவ்வழியாகஒருநரிவந்தது. “இதனிடம்நியாயம்கேட்போம்”என்றுகூறியமனிதன்நடந்த கதையனைத்தையும்நரியிடம்கூறினான். “எங்கள்தொழில்அனைவரையும்அடித்துக்கொன்றுசாப்பிடுவதுதான்.இதுஇவனுக்குநன்றாகத்தெரிந்திருந்தும்கூடஎன்னைக்கூண்டிலிருந்துவிடுவித்தான்.முட்டாள்தனமானஇந்தச்செய்கைக்குஉரியபலனைஇவன்அனுபவித்தேதீரவேண்டும்.நீஎன்னசொல்றநரியாரே…”என்றது. அனைத்தையும்கேட்டநரிக்குசிங்கத்தின்நன்றிகெட்டசெயல்புரிந்து விட்டது.உதவிசெய்தமனிதனைக்காப்பற்றிசிங்கத்தைகூட்டில்பூட்டிவிடதந்திரமாகசெயல்பட்டது.அதனால்ஒன்றும்புரியாததைப்போல்பாவனைசெய்து. “நீங்கள்இந்தமாதிரிசொன்னால்எனக்குஒன்றுமேபுரியல.ஆரம்பத்திலிருந்துசொல்லுங்கள்”என்றதுநரி. உடனேசிங்கம்சொல்லத்தொடங்கியது. “நான்அந்தக்கூண்டிற்குள்அடைந்துகிடந்தேன்…” “எந்தக்கூண்டிற்குள்?”என்றதுநரி. “அதோஇருக்கிறதேஅந்தக்கூண்டிற்குள்”என்றதுசிங்கம். “எப்படிஅடைந்துகிடந்தீர்கள்?”என்றதுநரி. சிங்கம்விடுவிடுவென்றுகூண்டிற்குள்சென்றது.இதுதான்சமயம்என்றுகருதியநரிசட்டென்றுகூண்டுக்கதவைஇழுத்துமூடியது. “நரியாரே!இதுஎன்னஅயோக்கியத்தனம்!நியாயம்கூறுவதாகக்கூறிஎன்னைமறுபடியும்கூண்டில்அடைத்துவிட்டீரே!”என்றுகத்தியதுசிங்கம் “நீங்கள்பேசாமல்கூண்டிற்குள்ளேயேஇருங்கள்.நான்ஒன்றும்இந்தமனிதனைப்போல்முட்டாள்அல்ல.உங்களுக்குச்சாதகமாகநியாயம்சொன்னால்முதலில்மனிதனைஅடித்துக்கொல்வீர்கள்.பிறகுஎன்னையேஅடித்துக்கொன்றுவிடுவீர்கள்.அதனால்தான்உங்களைக்கூண்டிற்குள்செல்லுமாறுசெய்துகதவைப்பூட்டிவிட்டேன்”என்றதுநரி. நன்றிமறந்தசிங்கம்தான்செய்ததவறைஎண்ணிவருந்தியது. நீதி: ஒருவர்செய்தஉதவியைஎப்போதும்மறக்ககூடாது. Read More »

நிலம் யாருக்குச் சொந்தம்?…

நிலம் யாருக்குச் சொந்தம்?…

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, “இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார். துறவி கேட்டார், “இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே” என்றார். “அவன் எவன்? எப்போது சொன்னான்?” என்று சீறினான் அந்த செல்வந்தன். “ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி. செல்வந்தன், “அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் ... Read More »

நாம் சேகரித்து வைக்க வேண்டியது!!!…

நாம் சேகரித்து வைக்க வேண்டியது!!!…

இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர். வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான். அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான். தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான். இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே ... Read More »

நம்பிக்கை இழந்து விடக்கூடாது!!!

நம்பிக்கை இழந்து விடக்கூடாது!!!

ஓர் அரசன் ஒருத்தனுக்கு மரண தண்டனை கொடுத்து விடுகிறார். அரசே எனக்கு மன்னிப்புக் கொடுங்கள் என்று கேட்கிறான் அவன் என்னால் முடியாத காரியம் ஏதாவது உன்னால் செய்து காட்ட முடியுமானால் உனக்கு மன்னிப்பு வழங்கலாம். . . அப்படி ஏதாவது செய்ய முடியுமா உன்னால்! மன்னா எனக்கு குதிரையை பறக்க வைக்க தெரியும். என்ன குதிரையை பறக்க வைப்பாயா? உடனே எனக்கு அதை காண்பி கண்டிப்பாக என்னால் உங்கள் குதிரையை பறக்க வைக்க முடியும் ஆனால் ஒரு ... Read More »

ஞானம் : ஜென் தத்துவம்!!!

ஞானம் : ஜென் தத்துவம்!!!

அந்த குருவிற்கு மிகவும் வயதாகிவிட்டது. சீடர்களில் சிறந்த மூன்று பேரை அழைத்தார். நீங்கள் மூவரும் தனித்தனியாக ஓராண்டு பயணம் செய்து உங்களின் அனுபவத்தை என்னிடம் கூற வேன்டும் என்று கூறி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். ஓராண்டு காலம் முடிந்து மூவரும் மடத்திற்கு திரும்பினர்……… முதலாமவன்: குருவே! நான் இறைவனை கண்டேன். அவர் எங்கும் இருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது என்றான்………… இரண்டாமவன்: குருவே இறைவன் ஒளி வடிவமாக இருக்கிறான். மனக் கண்ணால் பார்க்க முடியும். ... Read More »

Scroll To Top