சந்தேகம் – அறிவுக் கதைகள் :- ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ’இறைவா… நான் தினமும் உன்னை வணங்குகிறேன்’ என்று சொல்கின்றனர்… இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அந்த சந்தேகம்’ நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன. அப்போது இறைவன், ’தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனதுஉண்மையான பக்தன் என்பதை விசாரித்து ... Read More »
Category Archives: சிறுகதைகள்
யாரும் அழித்துவிட முடியாது!!!
May 29, 2016
ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ” முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?” என்று கேட்டான். ... Read More »
தங்கப் பறவை!!!
May 29, 2016
ஒரு ஊரின் அருகே பெரிய காடு ஒன்று இருந்தது.அந்தக் காட்டில் பலவித மரங்கள் நன்கு செழித்து வளர்ந்திருந்தன. அந்த மரங்களை நாடி பலவிதமான பறவைகளும் வந்து மகிழ்ச்சியோடு தங்கிச் செல்லும். இவற்றை வேட்டையாட வேட்டைக்காரர்களும் வருவார்கள். ஒருநாள் இந்தக் காட்டுக்கு ஒரு வேட்டைக்காரன் வந்தான். வெகுநேரமாகியும் அவனுக்கு எந்தப் பறவையோ விலங்கோ அகப்படவே இல்லை.மிகவும் களைத்துப்போனவன் ஒரு மரத்தடியில் சற்றே ஓய்வெடுக்கலாம் என அமர்ந்திருந்தான். திடீரென இனிமையான குரல் கேட்டது.அந்த மனிதன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.சற்றே தலையைத் ... Read More »
திருட்டு வெளிப்பட்டது!!!
May 28, 2016
மறுநாள் சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செதி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள். மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி ... Read More »
நன்மை மட்டுமே கிடைக்கும்!!!
May 28, 2016
நன்மை செய்தால் நன்மை மட்டுமே கிடைக்கும்! மகாபாரத்தில் கூறப்பட்ட ஓர் அழகான கதை இது. கவுதமன் என்பவன் நற்குலத்தில் தோன்றியவன். ஆனால் அவனுக்கு நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே அவனிடம் நல்ல குணம் என்பதே கிடையாது. ஆனால் அவனது காலத்தில் ராஜதர்மன் என்ற ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்து, பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய கொக்கு அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் ... Read More »
அக்பரின் நந்தவனம்!!!
May 28, 2016
ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார். இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று ... Read More »
அந்தணர் வீட்டு கிணறு!!!
May 28, 2016
பத்ரிகாசிரமம் என்னும் திருத்தலத்தில் அந்தணர் ஒருவர் வசித்தார். தினமும் மக்களிடம் பிட்சை ஏற்று உண்டு வந்தார். எல்லா உயிர்களையும் நேசிக்கும் குணம் கொண்டவர். நாளைக்குப் பாடு நாராயணன் பாடு என்ற அளவில் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. தனது குடிசை வாசலில் இருபுறமும் பெரிய தொட்டி வைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைப்பது அவரது வழக்கம். பறவை, விலங்குகள் தாகம் தணிய நீர் அருந்திச் செல்லும். வழிப்போக்கர்களும் அவர் வீட்டில் தண்ணீர் அருந்தி இளைப்பாறிச் செல்வர். தண்ணீர் தானத்தால், ... Read More »
அரசியின் கொட்டாவி!!!
May 28, 2016
(தெனாலி ராமன் கதைகள்) திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த ... Read More »
தாய்மையின் நேர்மை!!!
May 27, 2016
ஒரு சிறைத்துறை அதிகாரியின் பேட்டியின்போது. சிறையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் என்ற கேள்விக்கு அவர் கூறியது. அன்று அதிகாலையிலேயே அந்த சிறைச்சாலை அமளிதுமளிபட்டது காரணம் அந்த சிறையிலிருந்து ஒரு பெண் தப்பிவிட்டாள் ஆறடி உயர தடுப்புசுவற்றை தாண்டி எந்த ஆண்கைதியும்கூட இதுவரை அங்கு தப்பியதில்லை . கைதி தப்பி விட்டதால் காவல் பணியில் இருந்த பலருக்கும் தண்டனை கிடைக்க கூடும் என்பதால் சிறை நிர்வாகம் அப்பெண்ணை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. உயர் அதிகாரிக்கு தகவல் தரப்பட்டு ... Read More »
மாரீச வதம்-இது எந்த வகை தர்மம்???
May 27, 2016
மாரீச வதம் இது எந்த வகை தர்மம்..? அத்யாத்ம ராமாயணம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக நான் யுகங்கள் தோறும் தோன்றுகிறேன் என்றார் பகவான். பகவான் அவதாரம் செய்துவிட்டால், அவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் ஏதாவதொரு தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவே அமைய வேண்டும். இராவணனின் கட்டளைப்படி மான் வடிவமெடுத்தான் மாரீசன். பஞ்சவடியில் சீதாதேவியின் முன்பாக வந்து விநோதங்கள் காட்டி விளையாடுகிறான். அந்த மான் உண்மையில் அரக்கனென்று ராமனுக்கு நன்றாகத் தெரியும். அந்த மாரீசனால் ... Read More »