Home » சிறுகதைகள் (page 36)

Category Archives: சிறுகதைகள்

மாயையிலிருந்து விடுபடமுடியுமா!!!

மாயையிலிருந்து விடுபடமுடியுமா!!!

மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது. இது குறித்து, தேவி பாகவதம் எனும் நூலில், மகா விஷ்ணுவே, நாரதருக்கு, ஞான உபதேசம் செய்துள்ள சம்பவம் ஒன்று… மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, பாற்கடலுக்குச் சென்றார் நாரதர். அவரைப் பார்த்ததும், மகாவிஷ்ணுவின் அருகில் இருந்த மகாலட்சுமி, நாணத்தோடு உள்ளே சென்று மறைந்து விட்டார். நாரதருக்கு மனம் பொறுக்கவில்லை. ‘பரந்தாமா… என்ன ... Read More »

நடராஜர்  உருவான வரலாறு!!!

நடராஜர் உருவான வரலாறு!!!

சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்: சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே ... Read More »

சிவனின் கோபம்!!!

சிவனின் கோபம்!!!

பிரம்மாவின் குமாரரான தட்சப்பிரஜாபதிக்கு 16 பெண்கள். அவர்களில் ஸ்வாஹாவை அக்னிதேவரும், ஸ்வதாவை பித்ருவிற்கும், சதிதேவியை பரமசிவனாரும், மற்ற பெண்களை தர்ம தேவர்களும் திருமணம் செய்து கொண்டனர். (நாம் ஹோம குண்டத்தில் “ஸ்வாஹா” “ஸ்வதா” என்று சொல்லி கொடுக்கும் ஆகுதி இம்மனைவிகளின் மூலமாகவே அக்னியையும் பித்ருக்களையும் சென்றடையும்) ஒரு முறை பிரஜாபதிகள் சேர்ந்து நடத்திய யாகத்திற்கு மாமனாராகிய தடசன் வந்தபோது அங்கிருந்த பரமசிவன் , அவருக்கு எழுந்திருந்து மரியாதை செலுத்தவில்லை. கோபமுற்ற தட்சன் பரமசிவனுக்கு இனி யாகத்தில் அவிர்பாகம் கிடைக்காது என்று சபித்து விட்டார். அன்று முதல் தட்சனும், ... Read More »

பெருமாள்  தரிசனம்!!!

பெருமாள் தரிசனம்!!!

‘அப்பா, சொன்னா கேளுங்க. உங்களுக்கே  உடம்பு முடியாம இருக்கு. திருப்பதி வரைக்கும் பயணம் வந்து அவஸ்தை படணுமா? பேசாம நீங்க வீட்டோட  இருங்க. நாங்க மட்டும் திருப்பதி போயிட்டு வர்றோம்.’ பெரியவர் ராமானுஜத்திடம் அவர் மகன் பார்த்தசாரதி நிர்தாட்சண்யமாய் சொல்லி விட்டான். அவர் மருமகள் நிர்மலா, ‘இங்கேருந்தே மனசுக்குள்ளே ஏழுமலையானை நெனச்சி கும்பிட்டுக்கங்க மாமா,’ என்று சொல்லி கடுப்பேற்றினாள். அவர்கள் திருப்பதி  செல்ல சாமான்களை பேக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பேரன் வெங்கிட்டும் பேத்தி சௌம்யாவும் ராமானுஜத்தை ... Read More »

நாளைய உணவு!!!

நாளைய உணவு!!!

சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேயந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது. அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, ... Read More »

தண்டனை எப்போதும் உண்டு!!!

தண்டனை எப்போதும் உண்டு!!!

பூனைக்கு ஒரே சந்தோஷம். குரங்கு அதற்கு நண்பனாகக் கிடைத்ததால், அது தனக்குத் தெரிந்த எல்லாரிடமும் போய் பெருமையடித்துக் கொண்டது. குரங்கு மரத்தில் குதிப்பது, குட்டிக் கரணம் போடுவது, இரண்டு கால்களால் நிற்பது, நடப்பது இவற்றையெல்லாம் அழகாகக் கூறி ஆனந்தம் அடைந்தது பூனை. “”ஒரு நாள் என் வீட்டிற்கு நீங்கள் வர வேண்டும்,” என்று ஆசையாகக் குரங்கைக் கூப்பிட்டது பூனை . “”உன் வீட்டிற்கு வந்தால் உன் எஜமானி என்னை அடித்து விரட்டுவாள்,” என்று குரங்கு பயத்துடன் கூறியது. ... Read More »

பிடிவாதம்!!!

பிடிவாதம்!!!

ரேவதி நன்றாகப் படிக்கும் மாணவி, பிறர் தன்னிடம் ஒப்படைக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமைசாலி சிறுமி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள். ஆனால் ரேவதியின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. ரேவதியின் அம்மா, அப்பாவிற்கு அவளது பிடிவாதம் பெரிய தலைவலியாக இருந்தது. உடை, பொம்மை, பரிசுப் பொருள் எது கேட்டாலும் உடனே வாங்கி தரவேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள். நாளைய தினம் ரேவதியின் பிறந்தநாள். ... Read More »

முனிவரின்  ஆசிர்வாதம்!!!

முனிவரின் ஆசிர்வாதம்!!!

முனிவரின் நான்கு விதமான புதிரான ஆசிர்வாதங்கள் ஒருமுறை ஒரு அரசவைக்கு ஒரு முனிவர் வருகை புரிந்தார்.  அங்கே அவர் பலருக்கும் ஆசிர்வாதங்களை வழங்கலானார்.  அங்கிருந்த இளவரசனைப் பார்த்தார், “ராஜ புத்திர சிரஞ்சீவஹ்  [மன்னரின் மைந்தனே நீ சாகாமல் சிரஞ்சீவியாக வாழ்வாயாக]” என ஆசிர்வதித்தார். அடுத்து, அங்கே ஒரு தவசியின் மைந்தனைக் கண்டார். “ரிஷி புத்ர மா ஜீவ [தவசியின் மைந்தனே, உடனே நீ மாண்டுபோ]”  என்றார். அடுத்து ஒரு தூய பெருமாள் பக்தனைக் கண்டார், “ஜீவோ வா……  மரோ வா  ... Read More »

கடவுளை அடைய!!!

கடவுளை அடைய!!!

கடவுளை அடைய முயன்ற கதை. ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்க்கு நாரயணரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற  ஒரு பண்டிதரை சந்தித்தார்.   நாரதரை வணங்கிய பண்டிதர், “தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என அடியேன் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்க்கு, “நிச்சயமாக, நான் என் தலைவன் ஸ்ரீமன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்!!” என பதிலுரைத்தார். “அப்படியா, மிக்க மகிழ்ச்சி!!  எனக்கு ஒரு உதவி தங்களிடமிருந்து வேண்டுமே?” “தாரளமாக என்னவென்று சொல்லுங்கள், என்னால் இயன்றால் செய்கிறேன்!!” “தாங்கள்  ... Read More »

நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்!!!

நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்!!!

எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பதால் என்ன பயன்? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்! சதா சர்வ காலமும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி வரும் நாரத மகரிஷிக்கு, இப்படி எந்நேரமும் நாராயணின் நாமத்தை உச்சரிப்பதால் என்ன பயன்?” என்ற சந்தேகம் வந்து விட்டது. நேராக வைகுண்டம் செல்லும் அவர், அங்கு துயில் கொண்டிருந்த பரந்தாமனை பலவாறாக சேவித்துவிட்டு, “அச்சுதா.. சதா சர்வ காலமும் உன் நாமத்தையே கூறிக்கொண்டிருக்கிறேன். இதனால் ஏதேனும் பயன் உண்டா என்று எனக்கு ... Read More »

Scroll To Top